திமுகவிற்கு ஆப்பு வைத்த ஆளுநர் ?

தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி பதவி விலகணும்னு சொன்ன திமுகவுக்கு அழகா செக் வைத்த ஆளுநர்.

நீட் விலக்கு தொடர்பா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகணும்னு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார் பல திமுக தலைவர்களும் இதையே தெரிவிச்சாங்க., இந்த சூழலில் ஆளுநர் ரவி தனது அறிக்கையில் நீட் தேர்விற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்தது, மிக குறைவான எண்ணிக்கையில் எனவும் ஆனால் தற்போது 7.5% இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்த. பிறகு அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

இதன் மூலம் நீட் தேர்வு நல்லது என்று உறுதி படுத்தி இருக்கிறார் ஆளுநர், இது ஒருபுறம் என்றால் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் செய்யபடும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின், இந்த சூழலில்தான் இந்த ஆண்டு 6 துணை வேந்தர்களின் பதவி காலியாக இருக்கிறது, இதனை நேரடியாக ஆளுநரே நியமனம் செய்ய முடிவு எடுத்து இருப்பதாக ராஜ் பவன் வட்டாரங்கள் தெரிவிக்குது.

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து வந்த முட்டாள் கூட்டத்திற்கு முகத்தில் ஓங்கி அறைந்து நாங்கள் முட்டாள் அல்ல, எங்களால் முடியும் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள் நம் பிள்ளைகள்.

தேர்ச்சி பெற்றுள்ள குழந்தைகள் அத்தனை பேரும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஒரு வேளை நீட் என்ற தேர்வு கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

டாக்டர் பிள்ளைகள் மட்டுமே பல லட்சம் கொட்டி கொடுத்து சீட் வாங்கி படித்து காலம் காலமாக டாக்டர் ஆகி வந்த காலம் மாறி தகுதி இருந்தால் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்பது நிச்சயம் ஒரு புரட்சிக்கரமான மாற்றம் தான்.

ஒரு முட்டாள் அனிதாவிற்க்காக ஒப்பாரி வைத்த கூட்டத்திற்கு இந்த புத்திசாலி குழந்தைகளை வாழ்த்த மனமில்லை. இளைய தலைமுறையை முட்டாள்களாகவே வைத்திருக்க நினைப்பது இதன் மூலம் மிக தெளிவாகிறது.

தமிழகத்தின் இளைய தலைமுறை புத்திசாலி ஆகி விட்டால் அதன் பின் இவர்கள் எப்படி பிழைப்பு நடத்த முடியும்?

நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை என்று கூவி கூவி வியாபாரம் செய்த ஊடங்கங்கள் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி என்ற செய்தியில் நீட் தேர்வு என்னும் வார்த்தையை கவனமாக நீக்கி விட்டு மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி என்று எத்தனை லாவகமாக வாங்கிய கூலிக்கு சாமரம் வீசுகின்றன இந்த முன் களங்கள்.

நெல்லையில் ஒரே அரசு பள்ளியை சேர்ந்த ஏழு பேர் நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றிருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே.

இத்தனை திறமை மிக்க புத்திசாலி குழந்தைகளை வைத்து கொண்டு இனியும் நீட் தேர்வு ரத்து கோரி டெல்லியில் போய் கூவிக் கொண்டிருந்தால் அதை விட அவமானம் வேறு எதுவுமில்லை.

இன்றைய இளைய தலைமுறை தெளிவாகவே உள்ளார்கள். நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரே நேரத்தில் பதினோரு மருத்துவ கல்லூரிகளை திறந்து வேண்டுமளவு படித்து கொள்ளுங்கள் என்று பிரதமர் மருத்துவ கல்லூரி வாசல் கதவுகளை அகல திறந்து விட்டிருக்கிறார் என்றால் அத்தனையும் எங்களுக்கே என்று வரிந்து கட்டி கொண்டு மார்க்குககளை வாங்கி குவித்திருக்கிறார்கள் நம் குழந்தைகள்.

ஆனால் ஒரு சின்ன வருத்தம். என்ன தான் மிக அதிக அளவில் இடம் பிடித்திருந்தாலும் இட ஒதுக்கீட்டால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது.

என்ன இருந்தாலும் மெரிட்டில் சாதிப்பது தானே பெருமை . அதற்கு அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துதுவது தான் ஒரே வழி. ஆனால் எந்த திராவிட ஆட்சியாளர்களும் அதை முன்னெடுக்க போவதில்லை. தேசிய கல்வி கொள்கை அமலுக்கு வந்தால் நிச்சயம் ஒரு நல்ல காலம் பிறக்கும்.அதுவரை பொறுத்திருப்போம்.

அப்துல்கலாம், சிவன் போன்ற சாதனை மனிதர்கள் பிறந்த மண்ணில் இது ஒன்றும் ஆச்சர்ய பட வேண்டிய விஷயம் அல்ல. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இந்த குழந்தைகள் நிச்சயம் இன்னும் பல சாதனைகள் புரிவார்கள்.
இது ஒரு புறம் என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதியை மத்திய அரசே வழங்குகிறது, இந்த நிதிகள் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை ஆளுநர் ஆலோசனை செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் விரைவில் ஆய்வினை தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல்கள் தமிழக அரசை புரட்டி போட்டுள்ளது.

இது மட்டும் இன்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும்,557 சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனை ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதை காட்டிலும் ஆளுநர் வைத்த அதிரடியில் ஆடி போயுள்ளது தமிழக அரசு என்றே கூறலாம் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு கீழ் 5 ஆயிரம் வாகனங்கள் வாங்க டெண்டர் விட தயாராகி வருவதாகவும் அதில் 2 ஆயிரம் வாகனங்கள் அமைச்சர் ஒருவர் பினாமி பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும் ஆளுநருக்கு புகார் சென்று இருக்கிறது.

இது குறித்து உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது இதனால் அந்த முடிவையே கைவிட ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாம், மொத்தத்தில் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்த திமுகவிற்கு, ஊழல் எனும் அடிமடியில் கைவைப்பதுடன் தனது அதிகாரம் என்ன என்பதையும் ஆளுநர் தெளிவு படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் IPS அதிகாரிகளான ஆளுநர் ஆர்என்ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் தற்போதைய மத்திய உளவுத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் ஆகிய மூன்று முன்னாள் இந்நாள் ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து மொத்தத்தில் திமுக அமைச்சரவையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்களாம் இதனால் கடும் சிக்கலில் சிக்கி என்ன செய்வது என பல அமைச்சர்கள் அமைதியாவிட்டானராம்.