09
Mar
அதிமுகவைத் துரத்தும் பாஜக ? நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக ஜெயிக்கணும்னா அதிமுகவுடன் கூட்டணி வச்சே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்குது. சசிகலாவை மையமாகக் கொண்டு அதிமுகவிற்குள் ஒரு புயல் உருவாகியிருக்குது இது எல்லாருக்கும் தெரியும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமாக வாக்கு அறுவடை செய்யணும் அதற்கேற்ப பாஜக வியூகங்களை வகுத்து வருது.இதுவரை தோள் கொடுத்து வருகிற அதிமுகவுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்து பலமேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுது. சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது, வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகத்தான் இருக்கும்ங்கிற கருத்து அதிமுகவுக்குள் இருக்குது.மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் மீதமிருக்கும் ஒருசில இடங்களிலும் தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிடணும்ங்கிற வெறியோட திட்டமிட்டு அதற்கேற்பக் காய் நகர்த்திவருது பாஜக. கோவா தொடங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் எம்.எல்.ஏ.க்களைக் கொள்முதல் செய்து அந்தக் கட்சி ஆட்சி பீடத்தில்…
