01
Apr
அடுத்த ரெய்டில் சிக்கப் போகும் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்.இதுல ஓபிஎஸ் வழக்கம் போல தப்பிச்சிருவாருன்னு சொல்றாங்க ! மற்ற ரெண்டு பேரும் மாட்டப் போறது உறுதி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரது ஃபைல்கள் மேலிடத்துக்கு சென்றுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்குது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுலேருந்து மாசம் ஒரு மாஜிங்கிற மாதிரி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகள் பாய்ந்து வருது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் எல்லாரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிகிட்டு வர்றாங்க.. இதில எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் இரண்டாவது முறை சோதனை நடத்தப்பட்டுருக்கு. ஆனாலும், இந்த சோதனைகளை எப்படியாவது அதிமுக முன்னாள் மாஜிக்கள் மோப்பம் பிடிச்சிடுறாங்க. இதனால், கட்சி மாநாட்டுக்கு எப்படி தயாராவாங்களோ அதேபோல சோதனைகளுக்கும் ரெடியாகவே இருக்கிறாங்க.. சோதனை நாளன்று எப்படியாவது 200க்கும் மேற்பட்டவர்களாவது குவிக்கப்படுறாங்க. உள்ளே சோதனைகள் நடைபெறும் அதேவேளையில் வெளியே தடபுடலாக விருந்துகள் அமர்க்களப்படுத்தப்படுது. கட்சி மாநாட்டுக்கு ஆள் சேர்க்கும்…
