பேட்டில் – திரை விமர்சனம்.!

ராப் பாடகராக உயர வேண்டும் என்ற கனவுடன் வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரன், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவை காதலிக்கிறார். தனது முயற்சியால் பெரிய ராப் பாடகராக உயர்ந்த அவர், ஒரு கட்டத்தில் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்கும் செல்லும் வாய்ப்பு பெறுகிறார்..

ஹீரோ அர்ஜுன் பிரபாகரன் ஒரு ராப் பாடகராக முயற்சி செய்கிறார். அது நடக்கவும் செய்கிறது. அது நடக்கும் போது தனியார் பள்ளி ஆசிரியையான ஹீரோயின் ஆராதியா மீது அவருக்கு காதல் வருகிறது. ஆராதியாவும் காதலுக்கு ஒகே சொல்கிறார். இவர்கள் காதல் பயணத்தின் நடுவே ஹீரோயின் வேலை செய்யும் தனியார் பள்ளியின் தலைவர் சுப்பிரமணியசிவா ஒரு பெரும் சம்பவத்தை அரங்கேற்றுகிறார். இந்த நிலையில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடியால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும் மோசடியை ராப் பாடல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யாவின் விருப்பத்தை அர்ஜுன் பிரபாகரன் நிறைவேற்ற முடிவு செய்கிறார். ஆனால், அவரது இந்த முயற்சி தங்களது வளர்ச்சியை பாதிக்கும் என்று நினைக்கும் இசை நிறுவனம் அதற்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அவரை மிரட்டவும் செய்கிறது. மறுபக்கம் தனியார் பள்ளி தலைவர் சுப்பிரமணிய சிவா, ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இவர்களையும், இவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளையும் சமாளித்து, தாங்கள் நினைத்ததை காதல் ஜோடி வெற்றிகரமாக செய்து முடித்ததா? இல்லையா?, என்பதே படத்தின் மீதிக்கதை.

பேட்டில் என்றால் வார் என்பார்கள். ஆனால் வார் வீரனாக ஜொலிக்க வேண்டிய அர்ஜுன் பிரபாகரன் நிறைய இடங்களில் சொதப்புகிறார். நடிப்பில் இன்னும் அவருக்கு பயிற்சி தேவை. ஆராதியா ஒருசில இடங்களில் கவர்ந்தாலும் இன்னும் நல்ல நடிப்பை அவர் வழங்கியிருக்கலாம். வில்லனாக சுப்பிரமணிய சிவா மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு காட்சியில் தனது சிறந்த ‘கடிப்பை’யும் கொடுத்துள்ளார்.

ஜீவாவின் இசையில் ஏனோ ஜீவினில்லை. ஒருசில ராப் சாங்ஸ் ஒகே ரகம்! ஒளிப்பதிவாளர் கிடைத்த பட்ஜெட்டில் நல்ல விஷுவலை கொடுக்க ரொம்பவே போராடியிருக்கிறார்.கல்வி வியாபரமாக்கப்பட்டாலும், கட்டணத்திற்கு ஏற்ப கல்வியும், மாணவர்களுக்கான வசதியும் இருந்தது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் கல்வி வியாபாரத்தில் முழுக்க முழுக்க வியாபாரத்தை மட்டுமே பார்க்கும் சில தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் எதிர்காலம் எப்படி பாழாகிறது என்பதையும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள், என்பதையும் தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் நாராயணன்.பி.ஏ, இத்தகை சமூகப் பிரச்சனைகளுக்கு கலை என்ற அரசியல் ஆயுதம் மூலம் தீர்வு காண முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பள்ளிகளில் ஈசியாக புழங்கும் போதைப்பொருள் கலாச்சாரம், தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு வேலையில் கொடுக்கப்படும் அதீத அழுத்தம் ஆகியவற்றை இயக்குநர் நாராயணன்  அக்கறையோடு பதிவு செய்ய நினைத்தது பாராட்டுக்குரியது தான். ஆனால் அந்த நல்ல சிந்தனை தேர்ந்த கலைப்படைப்பாக உருப்பெறவில்லை. தேவையான கதையை எடுத்த இயக்குநர் தேவையான அளவிற்கு திரைக்கதை மேக்கிங் இரண்டிலும் கவனம் செலுத்தியிருந்தால் பேட்டில் பந்தயம் அடிச்சிருக்கும்

 

Related posts:

அக்யூஸ்ட்-- விமர்சனம் !

*நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந...

மில்லியன் ஸ்டுடியோ வழங்கும் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ !

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் 'கட்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா1

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

SNAPCHAT SOLIDIFIES SOUTH INDIA FOCUS, LAUNCHES FLAGSHIP CREATOR CONNECT IN CHENNAI AMID 4X CONTENT GROWTH!

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து!

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !