அண்ணாமலைக்கு எம்.பி பதவி ? எடப்பாடி பிளான் ! திட்டம் பலிக்குமா ?

அண்ணாமலைக்கு எம்.பி பதவி ? எடப்பாடி பிளான் ! திட்டம் பலிக்குமா ?

டெல்லியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் என அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பிரிந்து தனித்தனியாகப் போட்டியிட்டது.

கூட்டணி முறிந்தாலும் அதிமுக இன்னும் பாஜகவுடன் நட்பு பாராட்டி வருது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடவில்லையே தவிர பழையபடி அதிமுக உள் விவகாரங்களில் டெல்லியின் செல்வாக்கு கொஞ்சம் கூட குறையவில்லை. மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என்ற முடிவில் தான் இரு கட்சிகளும் விலகின.

அதிமுகவில் நுழைய சரியான தருணத்தை எதிர்பார்த்து வரும் சசிகலா டெல்லியின் நம்பிக்கையை பெற்று விட்டதாக சொல்கிறார்கள். அதனாலே அவர் துணிச்சலாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம். ஓபிஎஸ் வெளிப்படையாக சசிகலா எதிர்ப்பும், மறைமுகமாக ஆதரவும் அளிக்கிறார் என்கிறார்கள்.

சசிகலா கட்சிக்குள் வந்தால் தனது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று நினைக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடலாம் என காய் நகர்த்தி வருகிறாராம். அந்த வகையில் வரவுள்ள மாநிலங்களவைத் தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.

2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கும்போது திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

இந்த இரு இடங்களை கைப்பற்ற அதிமுகவுக்குள் பலத்த போட்டி நிலவுது. அவைத் தலைவர் பதவிக்கான ரேஸில் இருந்த பொன்னையன், மகளிரணிச் செயலாளர் பா.வளர்மதி, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் என பலரும் துண்டை போட்டு காத்திருக்கின்றனர்.

ஆனால் இதில் ஒரு இடத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்குது.. இதன்மூலம் தனது டெல்லி விஸ்வாசத்தை காட்டலாம், இதை சொல்லி சசிகலாவுக்கு முட்டுக்கட்டை போடச் சொல்லலாம் என நினைக்கிறாராம்.

தற்போதைய சூழலில் சசிகலாவுக்கு அடுத்தடுத்து நேர்மறையான நிகழ்வுகள் தான் அரங்கேறி வருது. ஜெயலலிதா மரணம் தொடர்பா முதன்முதலில் சந்தேகம் கிளப்பியது ஓ.பன்னீர் செல்வம் தான். ஆனால் அவரே, ‘சின்னம்மா மீதான குற்றச்சாட்டுகளை நீக்கவே ஆணையம் அமைக்க சொன்னேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உள்ளது’ என சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இவையெல்லாம் டெல்லி சம்மதத்துடன் தான் அரங்கேறுகிறது என அக்கட்சி வட்டாரங்களே தகவல் தெரிவிக்கின்றன.

எனவே டெல்லியின் கவனத்தை கவர்றதுக்காக அண்ணாமலைக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியை விட்டுக் கொடுத்து சசிகலாவை கட்சிக்குள் வரவிடாமத் தடுக்கலாம்ன்னு எடப்பாடி பழனிசாமி திட்டம் போட்டு காய் நகர்த்தி வர்றாரு.எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனா அதே சமயம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்சபா சீட் கிடைக்குமாங்கிறது கேள்விக்குறியாகவே இருக்குது.

வரும் ஜூன் மாதம் 4 ராஜ்சபா சீட் காலி ஆகுது. தமிழகத்துக்கு 4 சீட்டில் ஒரு சீட்டாவது காங்கிரசுக்கு கிடைக்குமாங்கிற கேள்வி இப்போ எழுந்திருக்குது. அப்படி ஒரு சீட் தி.மு.க., ஒதுக்கினால் யாருக்கு கிடைக்கும் என்பதை கதர் சட்டைக்காரர்கள் மத்தியில் விவாதம் தொடங்கி உள்ளது. அப்படி கிடைத்தால் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அல்லது முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்சுக்கா என கட்சியில் தற்போது தினமும் பட்டிமன்றமே நடக்கிறது.

இந்த எம்.பி., பதவியை இளைஞர்களுக்கு விட்டுத் தர வேண்டும் என சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். இந்த ரேசில் சிதம்பரத்துக்கு வாய்ப்பு குறைவு என டெல்லி வட்டராம் தகவல்.

கோவா சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக ப சிதம்பரம் நியமிக்கப்பட்டார். அங்கு காங்கிரஸ் கட்சி எப்படியும் வெற்றி பெறும் என ப சிதம்பரம் உறுதியளித்திருந்தார். மேலும் கடந்த முறை போன்று வெற்றி பெற்றால் கட்சி மாற மாட்டோம் என காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களிடம் பாண்டு பேப்பரில் ப.சி. கையெழுத்தையும் பெற்றார்.இந்த புதிய நடவடிக்கைகளால் டெல்லி தலைமை மனம் குளிர்ந்தது. ஆனால் கடைசியில் ரிசல்ட் என்பது தோல்வியே கிடைத்தது. கடந்த முறை காங்கிரஸ் 17 இடங்களில் வென்றிருந்தது. தனி பெரும்பான்மை பெறாவிட்டாலும் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக இருந்தது. ஆனால் 2022 இல் தேர்தல் பொறுப்பாளராக ப சிதம்பரம் தலைமையில் நடந்த கோவா சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றது.இதனால் ப சிதம்பரம் மீது சோனியாவும் ராகுலும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இந்த முறை மாநிலங்களவைக்கு ப சிதம்பரம் தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.