அடுத்த ரெய்டில் சிக்கப் போகும் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்.இதுல ஓபிஎஸ் வழக்கம் போல தப்பிச்சிருவாருன்னு சொல்றாங்க ! மற்ற ரெண்டு பேரும் மாட்டப் போறது உறுதி.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரது ஃபைல்கள் மேலிடத்துக்கு சென்றுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்குது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுலேருந்து மாசம் ஒரு மாஜிங்கிற மாதிரி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகள் பாய்ந்து வருது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் எல்லாரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிகிட்டு வர்றாங்க.. இதில எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் இரண்டாவது முறை சோதனை நடத்தப்பட்டுருக்கு.
ஆனாலும், இந்த சோதனைகளை எப்படியாவது அதிமுக முன்னாள் மாஜிக்கள் மோப்பம் பிடிச்சிடுறாங்க. இதனால், கட்சி மாநாட்டுக்கு எப்படி தயாராவாங்களோ அதேபோல சோதனைகளுக்கும் ரெடியாகவே இருக்கிறாங்க.. சோதனை நாளன்று எப்படியாவது 200க்கும் மேற்பட்டவர்களாவது குவிக்கப்படுறாங்க. உள்ளே சோதனைகள் நடைபெறும் அதேவேளையில் வெளியே தடபுடலாக விருந்துகள் அமர்க்களப்படுத்தப்படுது. கட்சி மாநாட்டுக்கு ஆள் சேர்க்கும் டீம் ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரியுது.இந்த சோதனைகள் முன்னதாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தெரிய காரணம் இன்னமும் அவர்களுக்கு விசுவாசமான காக்கிகள் உள்ளே இருப்பதாக கூறப்படுது. அதேசமயம், இந்த சோதனைகள் வெறும் சோதனைகளாக மட்டுமே இருக்குது. இதுவரைக்கும் யார் மேலயும் கைது நடவடிக்கை பாயலை. இதனால், அதிமுகவினருக்கே சலிப்பு தட்டிட்டதாக சொல்றாங்க..எனவே, இந்த முறை ரெய்டை தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ள திமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரியுது. இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரிச்சா அடுத்த ரெய்டில் சிக்கும் மாஜிக்கள் தொடர்பாக சில தகவல்கள் தெரிய வந்திருக்குது. அதன்படி, முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தனது பார்வையை திருப்பியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப்பெற்ற முதலீடுகளில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொல்றாங்க. அதேபோல், சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு அரசு இடத்தை குறைவான விலைக்கு வழங்கிய புகாரில், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தொடர்பான சில தகவல்கள் மேலிடத்துக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளதாம். இதனால், அடுத்த ரெய்டு அவர்கள் மீது பாய வாய்ப்புள்ளதாகவும் சொல்றாங்க.
. அதில், அதிமுக ஆட்சியின் போது, கோயம்பேடு அருகே 10.5 ஏக்கர் புறாம்போக்கு நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு சதுர அடி ரூ.12,500க்கு விற்கப்பட்டதில் மோசடி நடந்தததாக ஈபிஎஸ், ஓபிஎஸ், ஆர்.பி.உதயகுமார் எல்லார் மேலயும் திமுக அமைப்பு செயலாளாரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி புகார் பண்ணியிருந்தாரு.
இதுபோன்ற அரசு புறம்போக்கு நிலத்தை விற்கும்போது, அதனை மருத்துவமனை, பஸ்ஸ்டாண்ட், ஐ.டி.பார்க், சந்தை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உபயோகப்படும் வகையில் விற்பனை செய்ய வேண்டும்ங்கிற விதி மீறப்பட்டிருக்கிறதால முறைகேடு நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருக்கிறதா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இந்த நிலத்தின் விற்பனைக்காக அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெறப்பட்டு, சிறப்பு அனுமதியின் பேரில், அதாவது, ரூ.1575 கோடி முதலீடு ஈட்டப்படும், 7500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதை காரணம் காட்டி சிறப்பு அனுமதியின் பேரில் இந்த நிலம் விற்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலத்தை வாங்கிய பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனமோ, அந்த இடத்தை ‘crown residence’ என்ற பெயரில் குடியிருப்பு பகுதியாக மாற்றி விற்பனை செய்யவுள்ளது. இதற்கான விளம்பரத்தை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. எனவே, ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தின் நலனுக்காக அந்த இடம் விற்கப்பட்டுள்ளது” என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு திட்டத்துக்கு சிஎம்டிஏ அனுமதி பெற குறைந்தது 3 அல்லது 4 மாதங்கள் ஆகும். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுல முக்கியமான விஷயம் என்னன்னா விற்கப்பட்ட நிலத்தில் அருகே இருக்கும் பகுதிகளின் சந்தை விலையான ரூ.11,500 முதல் ரூ.12,500 வரை என்பதை ஒப்பிட்டு, சதுர அடி ரூ.12,500க்கு விற்கப்பட்டதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பிரதான பகுதியா அல்லது ஒதுக்குப்புற பகுதியாங்கிறது தெளிவா சொல்லப்படலை. இருந்தாலும், விற்கப்பட்ட நிலம் பிரதான பகுதி. இந்த பகுதியில் சதுர அடி ரூ.25,000க்கு விற்கப்படுது. இதன்மூலம், அரசுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு பின்னால் மிகப்பெரிய மோசடி சதி நடந்துள்ளது.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மோசடி புகார் தொடர்பான கூடுதல் தகவல்கள் தான் தற்போது மேலிடத்துக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது. துபாய் பயணம் முடிந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிட்டாரு இப்ப டெல்லி போயிருக்காரு தமிழகம் வந்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்னு சொல்றாங்க.
கோபாலபுரத்து முதல் குடும்பம் தனது ஆக்டோபஸ் கைகளை விரிக்க ஆரம்பித்துவிட்டது.
அந்தக் குடும்பம் தற்போது மறைமுகமாக அடையாறில் உள்ள கிரௌன் பிளாசாவை (முன்னாள் பெயர் அடையார் கேட்) சரியான முறையில் காய் நகர்த்தி ஒரு பினாமி பெயரில் வாங்கியுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த பினாமி முன்னாள் அதிமுக ஆட்சியில் வேறு ஒரு பெரிய தலைவருக்கு பினாமியாக இருந்தார்.
ஜனவரி 2022 டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் 786 ரூம் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை சீப்ராஸ் (Ceebros) நிறுவனம் வாங்கப் போவதாக செய்தி வெளியாகியது.
சீப்ராஸ் நிறுவனம் 1978-ல் இருந்து கட்டுமான துறையில் உள்ள ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவர் சுப்பா ரெட்டி டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். கமர்சியல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன் கடைசியாக பேசி முடிக்க வேண்டிய சிறிய ஒப்பந்தங்கள் இருக்கின்றது. அதை முடித்துவிட்டால் இந்த ஒப்பந்தம் முழுவதும் கையெழுத்து ஆகிவிடும் என்று கூறினார்.
சிபிராஜ் நிறுவனத்தைப் பொறுத்தவரை கிரௌன் பிளாசா அவர்களுடைய மூன்றாவது நட்சத்திர விடுதி சொத்தாக இருந்து இருக்கும். இதற்கு முன்னர் எக்மோரில் உள்ள அட்லாண்டிக் ஹோட்டல் எம்ஆர்சி நகரில் உள்ள வைஸ்ராய் ஹோட்டல் இவற்றை வாங்கியுள்ளனர். இவை இரண்டும் இடிக்கப்பட்டு அவை தற்போது குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.
அடையார் கேட் ஹோட்டல் நிறுவனத்தினர் ரூபாய் 354 கோடி வங்கிகளிடம் பெற்ற கடனாகவும் 42 கோடி சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி வைத்துள்ளனர்.
அடையார் கேட் ஹோட்டல் நிறுவனத்தினரும் சீப்ராஸ் நிறுவனத்தினரும் கடைசியாக ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி சீப்ராஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் தந்து இந்த சொத்தை வாங்குவதாக முடிவானது. ஒப்பந்தம் முடிவதற்கு சிலபல டீடெயில்கள் தேவைப்பட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஒப்பந்தம் முடிவாகிவிடும் என்று அந்த நிறுவனத் தலைவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் தெரிவித்தார்.
இங்கு தான் ஆரம்பமானது கோபாலபுரத்து முதல் குடும்ப ஆக்டோபஸ் கைகளின் லீலைகள்…
அந்தக் குடும்பத்தின் மிக உயரிய நிலையில் உள்ள கிட்டத்தட்ட அந்த குடும்பத்தின் தலைமைக்கு மிகவும் நெருக்கமான ஒருவரிடம் இருந்து சீப்ராஸ் நிறுவன தலைவருக்கு போன் வந்தது.
எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட கூடாது. மீறி நீங்கள் கையெழுத்திட்டால் எதையாவது ஒரு அரசாங்க ஷரத்தை காரணம் காட்டி நாங்கள் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்போம். உங்களுடைய மொத்த முதலீடும் சவப்பெட்டியில் வைத்து மூடி அதுபோல் காணாமல் போய்விடும் என்று மிரட்டினார். அதைக்கேட்ட சீப்ராஸ் நிறுவனம் உண்மையிலேயே மிரண்டு போய் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்க ஆரம்பித்தது.
தற்போது கிரவுன் பிளாசா நிறுவனம் அதன் சட்டபூர்வமான செயல்களை செய்து கொண்டிருக்கும் ஏஜிஹெச்எல் இன்னொரு நிறுவனமான சேஷ்யம் கட்டுமானத்துறை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற கம்பெனிக்கு இந்த ஹோட்டலை விற்க முடிவு செய்துள்ளது.
இந்த சேஷ்யம் கட்டுமானத்துறை நிறுவனம் மிகவும் அப்பழுக்கற்ற நிறுவனம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்களை விட பெரிய முட்டாள்கள் வேறு யாருமே கிடையாது.
இந்த சேஷ்யம் நிறுவனம் அரசாங்க புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து அவற்றில் கட்டுமான பணிகளை ஆரம்பித்து, ஆட்சி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் சென்று அதற்கு பட்டா விண்ணப்பித்து வாங்கி கொண்டு விடும். எந்த ஆட்சி யார் ஆட்சி என்பதெல்லாம் முக்கியமில்லை. அது எந்த ஆட்சி ஆனாலும் இந்த நிறுவனம் செய்யும் தகிடுதத்தம் இதுதான்.
கடந்த பிப்ரவரி இரவு 2021ல் இதேபோல பட்டா விண்ணப்பிக்கும்போது அரசாங்கம் அதற்கு மிகப்பெரிய ஒரு தொகையை அபராதமாக விதித்தது அதை எதிர்த்து சேஷ்யம் நிறுவனம் கோர்ட்டுக்கு சென்று உள்ளது தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
2 ஆயிரம் கோடிக்கு கட்டுமானத் துறையில் வீடுகளை விற்க முடியாமல் நஷ்டத்தில் இருப்பதாக அறிவித்திருந்த அந்த சேஷ்யம் கட்டுமானத்துறை நிறுவனம் தற்போது இந்த கிரவுன் பிளாசாவை வாங்கி அவற்றை உயர்தர பொதுமக்கள் குடியிருப்புகளாக மாற்றுவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
சேஷ்யம் நிறுவனம் எடுத்திருக்கும் இந்த ப்ராஜெக்ட்டின் பட்ஜெட் கிட்டத்தட்ட 1250 கோடிகள். இவற்றின் நிகர லாபம் மாத்திரம் 900 கோடிகள்.
இந்த சேஷ்யம் கட்டுமானத்துறை நிறுவனம் இந்த ஹோட்டலை வாங்கி அதை இடிப்பது, அவற்றிலே புது குடியிருப்புகளை கட்டுவது, அதற்கான உரிமங்களை பெறுவது, பொதுமக்களுக்கு விற்பது போன்ற அனைத்து வேலைகளையும் தங்களது நிறுவனத்தின் பெயரிலேயே செய்து அதில் வரும் லாபத்தில் வெறும் 40% மட்டுமே எடுத்துச் சென்றுவிடும். மீதி 60% கோபாலபுரத்து முதல் குடும்பத்துக்கு தான் போகும்.
நீங்கள் வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள். இந்த கிரௌன் பிளாசா பிராஜெக்ட் முடிந்த சில நாட்களிலேயே கோயம்பேடு பிராஜக்ட்டில் சேஷ்யம் நிறுவனம் எதிர்கொண்டிருக்கும் அந்த 2 ஆயிரம் கோடி முதலீடு முடக்கம், அதன் சார்பாக தமிழக அரசு தொடர்ந்து இருக்கும் வழக்கு இவை எல்லாமே நீர்த்துப்போகும்.
இந்தப் பக்கம் கட்டிடம் கட்டி அந்த லாபத்தில் 60 சதவீதம் அவர்களுக்கு கொடுத்து விட்டு அந்த பக்கம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட அந்த கட்டிடங்களுக்கு பட்டா வாங்கி விடும் சேஷ்யம் நிறுவனம்.
இது வெறும் ஆரம்பம் தான்.