அமைச்சர் ராஜகண்ணப்பன் டிஸ்மிஸ் ? ஸ்டாலின் எடுக்கும் கடும் நடவடிக்கை!
போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியுள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தியது. இது ஊடகங்களில் பெருமளவில் கவனம் பெற்றது. ஆனால் அதற்கு முந்தைய தினமான மார்ச் 14ஆம் தேதி திங்கள் கிழமை தற்போதைய திமுக அமைச்சரை குறிவைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதைய அமைச்சரவையை உருவாக்கும் போதே எந்தவிதமான புகார்களும் வரக்கூடாது, அப்படி வருமேயானால் சம்மந்தப்பட்டவர்களின் பதவி காலியாகும்ன்னு எல்லாருக்கும் எச்சரிக்கை பண்ணுனதா அப்போதே தகவல் வந்தது.
ஆட்சிக்கு வந்த பத்து மாதங்களில் பெரியளவிலான விமர்சனம் எதுவும் திமுக அரசு மீது வரலை. ஆனால் ஊழல் புகார் ஒன்று திமுக அமைச்சரை நோக்கி வந்துள்ளது ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாராங்கிற எதிர்பார்ப்பு வந்திருக்குது.
தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்பட்டாலும் அத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளோ லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று கோடீஸ்வரர்களாக கொடி கட்டிப் பறக்கிறார்களாம். அதில் முக்கியமானவர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு நெருக்கமானவர்ன்னு சொல்லப்படும் துறையின் துணை ஆணையர் நடராஜன் மீது ஏகப்பட்ட புகார்கள் தொடர்ந்து வந்துகிட்டே இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் 120 போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் இருக்குது. ஒவ்வொரு அலுவலகத்திற்கும் டார்கெட் வைத்து மாதம் பிறந்தால் இரண்டரை லட்சம் ரூபாய் கொண்டு வந்து தந்திரணும்ன்னு நெருக்கடி கொடுத்து கறந்துள்ளாராம். குறைந்தது 3 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்று கைமாற்றுவது தான் நடராஜனின் வேலை என்கிறார்கள். இதற்காக பணம் எண்ணும் மிஷினையும் அலுவலகத்தில் வைத்திருக்கிறாராம். இதனால் போக்குவரத்து துறையே கதறி துடிக்கிறது.
இது போக பணியிட மாறுதல் என்று கோரிக்கை யார் வைத்தாலும் பணத்தை வாங்கிட்டுத்தான் டிரான்ஸ்ஃபரே போடுவாராம். இதனாலே பலர் எந்த ஊருக்கு வேண்டுமானால் தூக்கியடியுங்கள் நாங்க போறோம்னு கண்ணை கசக்கிக்கிட்டு ஒதுங்கிக்கிறாங்களாம்.
துணை ஆணையர் நடராஜனின் நிழல் ராஜாங்கம் குறித்து பல புகார்கள் தலைமைச் செயலாளருக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் போய்க்கிட்டே இருந்திருக்குது.. அதன் தொடர்ச்சியாக முதல்வரிடம் சம்மதம் பெற்று 14ஆம் தேதி மாலை விஜிலன்ஸ் அதிகாரிகள் சென்னை எழிலகத்தில் முதல் மாடியில் இருக்கும் நடராஜன் அறையில் சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் பணம் என்னும் இரண்டு மிஷன்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், வரவு செலவு டைரி, செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. நடராஜனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வாக்குமூலங்களை வாங்கியிருக்காங்க.அமைச்சர் ராஜகண்ணப்பனின் நிழலாகவே வலம் வந்த துணை ஆணையர் நடராஜன், அமைச்சர் சொல்லித்தானே செய்தேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வருதுஇதன் தொடர்ச்சியாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுப்பார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றத்தில் முதலில் கிழியப்போவது இவரது சீட்டாகத் தான் இருக்கும் என கிசுகிசுக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.