சசிகலா கேம்பில் அதிகரிக்கும் “புலம்பல்கள்”..

இப்படியே போனா.. ரொம்ப கஷ்டம்தான்! சசிகலா கேம்பில் அதிகரிக்கும் “புலம்பல்கள்”.. காரணம் என்ன தெரியுமா?

அதிமுகவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று சசிகலா முயன்று கொண்டு இருக்கும் நிலையில்தான் அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நிர்வாகிகளே சசிகலா மீது நம்பிக்கை இழந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாக எப்படியாவது அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் சசிகலா முயன்று கொண்டு இருக்கிறார். தேர்தல் தோல்வியால் அதிமுக இரட்டை தலைமை மீது அடிமட்ட தொண்டர்கள் பலர் அதிருப்தியில் இருக்கும் நிலையில்தான் எப்படியாவது இதை பயன்படுத்தி கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சசிகலா முயன்று கொண்டு இருக்கிறார்.

இதை மனதில் வைத்தே திருச்செந்தூர் யாகம், ஓ ராஜாவுடன் சந்திப்பு என்று அடுத்தடுத்த மூவ்களை செய்து வந்தார். ஆனால் இதுவரை சசிகலா நடவடிக்கை அனைத்திற்கும் அதிமுகவின் இரட்டை தலைமை அதிரடி பதிலடிகளை கொடுத்துள்ளது. Ads by Ads by சசிகலா காலை சுற்றிய பாம்பு.. 3 வருடம் சிறைக்கு போக சான்ஸ்? எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகத்தின் பின்னணி யாராக இருந்தாலும் அடுத்தடுத்து நீக்கம்? முக்கியமாக சசிகலாவை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் உடனுக்குடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை சந்தித்த உடனே ஓ ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்பே சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தா அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். பெங்களூரு புகழேந்தியும் இதே காரணத்திற்காக நீக்கப்பட்டார். அதிமுகவில் தற்போது நிலை என்னவென்றால், சசிகலாவை ஆதரித்தால்.. கட்சியில் இடம் கிடையாது என்பதே! ஆதரவு தர அச்சம் இதனால் சசிகலாவை நேரடியாக ஆதரிக்க யாருக்கும் விருப்பம் இல்லை. நேரடியாக ஆதரித்தால் எங்கே நம்மையும் நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் அதிமுகவினர் இடையே உள்ளது. அதோடு சசிகலா வந்தால் கட்சி எப்படி இருக்கும். இப்போது இபிஎஸ் – ஓபிஎஸ் கீழே இருக்கும் சுதந்திரம் இருக்குமா.. அல்லது ஜெ காலம் போல கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்குமா என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் இருப்பதாக சசிகலாவை ஆதரிக்க பலருக்கு அச்சம் உள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில்தான் சசிகலா டீமில் இருப்பவர்களும் கூட பலர் நம்பிக்கை இழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. சசிகலா ஏதாவது செய்வார் என்று காத்து இருக்கிறோம். ஆனால் புலி வருது.. புலி வருது கதையாக அவர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறார். தென்னக நிர்வாகிகள் பலர் ஆதரவு கொடுத்தும் கூட இதுவரை ஒரு பெரிய கூட்டத்தை கூட நடத்தவில்லை. ஒரு பெரிய வெளிப்படையான மீட்டிங்கை கூட நடத்தவில்லை. இதுவரை எதுவும் செய்யவில்லை ரகசியமாகவே கட்சியை மீட்கலாம் என்று நினைக்கிறார். அது முடியாது. அவரின் தென்னக பயணம் வெற்றி பெறவில்லை. அதற்கு இப்போது சேலம் போவது ஏன் என்று அவரின் ஆதரவாளர்களே கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனராம். அதிமுகவை கைப்பற்றும் வகையில் வலுவான மூவ் எதையும் எடுக்காமல்.. சிங்கப் பாதையில் செல்லாமல்.. தொடர்ந்து அவர் பூ பாதையிலேயே சென்று கொண்டு இருக்கிறார் என்று அவர் டீமில் இருக்கும் சில ஆதரவாளர்களே குறைபட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். ஓபிஎஸ் நேரடி சப்போர்ட் இல்லை இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸும் சசிகலாவை நேரடியாக ஆதரிக்கவில்லை. என்னதான் தேனியில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தினாலும் கூட.. ஓ ராஜாவை கொஞ்சம் கூட யோசிக்காமல் நீக்கி இருக்கிறார். இபிஎஸ்ஸுடன் மகளிர் தினம் அன்று நட்பாக பேசி இருக்கிறார். அதோடு ஜெயக்குமாரை ஒன்றாக சேர்ந்து சந்தித்து உள்ளனர். அப்படி இருக்கும் போது சசிகலாவிற்கு ஓபிஎஸ் ஆதரவும் இல்லை என்றே தோன்றுவதால் சசிகலா கேம்ப் நம்பிக்கை இழந்து இருக்கிறதாம்.

முடிவு வரும் ஆனால் இன்னும் சில சசிகலா ஆதரவாளர்களோ.. சசிகலா மூவ் எல்லாம் மெதுவாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் அவர் கவனமாக காய் நகர்த்தி வருகிறார். தேவையான நேரங்களில் அதிரடி முடிவுகளை எடுப்பார். கட்சியை மீட்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று தெரிந்தே அவர் நாசுக்காக அடிகளை எடுத்து வருகிறார். அதில் எந்த தவறும் இல்லை என்று சசிகலாவிற்கு ஆதரவாக நம்பிக்கையாக பேசி வருகிறார்கள்.