டிடிவியை கழற்றி விட சசிகலா முடிவு? பரபரப்பு தகவல்கள்
டிடிவி தினகரனை கழற்றி விட சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா- டிடிவி தினகரன் ஆகியோர் இடையே பனிப்போர் சமீபகாலமாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், டிடிவிடம் இருந்த மிக முக்கியமான பணப்பொறுப்பு காமெடி நடிகர் பெயரில் உள்ள நபருக்கு சென்று விட்டதாம். இதனால் டிடிவி தினகரன் கடும் அப்செட் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சசிகலா- டிடிவி இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பித்ததாக தெரிகிறது. டிடிவியின் செயல்பாடு சசிகலாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக, தான் சொல்வதை சசிகலா கேட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைத்தாராம். ஆனால், தற்போது டிடிவி சொல்வதை எதையும் சசிகலா கேட்பது இல்லையாம். மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன், டிடிவி தினகரனை கழற்ற விட வேண்டும் என்று முடிவோடு இருக்கிறாராம்.
முக்கியமாக, டிடிவி தினகரன் செயல்பாடு குறித்த அனைத்து விஷயங்களையும் திவாகரன், சசிகலாவிடம் புட்டு புட்டு வைத்தாராம். இதைக்கேட்டுக் கொண்ட சசிகலா, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனை ஓரங்கட்டும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார். அமமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளுக்கு சசிகலா அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா தன்னை கழற்றி விட முடிவு செய்துள்ள தகவல் டிடிவி தினகரனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர், அமமுகவில் உள்ள தொண்டர்களை தனது கட்டுக்குள் வைப்பதற்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தே, மார்ச் 14ம் தேதி திருச்சியில் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் நடத்தினராம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அமமுக தொண்டர்கள் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிடிவி தினகரன், அமமுக நிர்வாகிகளை தக்க வைக்க புதிய டெக்னிக்கை கையாண்டு வருகிறார்.
பொதுவாக, தொண்டர்களின் துக்க நிகழ்ச்சிக்கு டிடிவி தினகரன் செல்வது கிடையாது. தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளதால், டெல்டா மாவட்டத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதை சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதிமுகவில் தான் இணைய டிடிவி தினகரன் தடையாக இருப்பதாக சசிகலா நினைப்பதாக கூறப்படுகிறது. மேலும், டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சசிகலாவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. எனவேதான் டிடிவி தினகரனை கழற்றி விட சசிகலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமமுக தொண்டர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் தவிப்பதாக அக்கட்சி வட்டாரம் தெரவிக்கிற