15
May
தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீண்ட அரசியல் பாரம்பரியமும், கல்வி அறிவும் கொண்ட அரசியல் தலைவர் ! யார் இந்த பிடிஆர் ? தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கும் நிலையில், கொரோனா கழுத்தை நெறிக்கும் இக்கட்டான சூழ்நிலையில்.. தமிழகத்தின் நிதித்துறையை கவனிக்க பன்முகத் தன்மை கொண்ட ஒருவரை களமிறக்கி உள்ளார் முக ஸ்டாலின்! மத்திய மதுரை சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரனான இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மத்திய மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்திலும் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் நற்பெயரைச் சம்பாதித்திருந்த இவருக்கு, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.இந்தத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.…
