திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிட்ட , பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தன்னிடம் ரூ. 4.73 கோடி மதிப்புள்ள 11.200 கி.கி தங்க நகை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.12,61,19,403 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.11,50,000 எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரி நாடாரின் அசையும் சொத்துக்களில் அவர் வைத்துள்ள பார்ச்சூனர், இனோவா கிறிஸ்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி, டாடா சஃபாரி மற்றும் பொலிரோ போன்ற கார்களும் உள்ளடங்கும். இவை தவிர அவர் மீது 15 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அவருடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார், பெரும்பாண்மையான வாக்குகளை பெற்று 3ம் இடத்தில் இருந்தார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனக்கு சிறுவயது முதலே தங்க ஆபரணங்கள் மீது கொள்ளைப் பிரியம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ட்ராவல்ஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்பட பைனான்ஸ் போன்ற தொழில்கள் மூலம், தான் ஈட்டிய வருவாயில் அந்த நகைகள் வாங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு சந்தையில் புதிய மாடல் நகைகள் வந்தால் அதை உடனடியாக வாங்குவேன் என்றும் கூறியுள்ளார்.
சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்துள்ள ஹரி நாடார், 2கே அழகான காதல் என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் திமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்
வெறும் 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை தோற்பதற்கு முக்கியக் காரணமாக ஹரி நாடார் விளங்கினார்.ரூ.16 கோடி மோசடி வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் கோவளத்தில் ஹரி நாடார் கைது
தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர் ஹரி நாடார். சுமார் 10 கிலோ தங்க நகைகளை எப்போதும் உடம்பில் அணிந்து கொண்டிருப்பவர். கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார் பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார். இங்கு அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரும் களம் கண்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது, இவர் அணிந்திருந்த நகைகளை காண்பதற்காகவே பெண்கள் கூட்டம் அலை மோதியது.
தனது சமுதாயத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டதாக இவர் கூறியபோதும், ஆலங்குளத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பை பறிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணியால் ஹரி நாடார் களமிறக்கப்பட்டார்.
அதற்கு ஏற்றவகையில், ஆலங்குளம் தொகுதியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளை பெற்றிருந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வெறும் 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை தோற்பதற்கு முக்கியக் காரணமாக ஹரி நாடார் விளங்கினார்.
இந்த நிலையில், ரூ.16 கோடி மோசடி வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் கோவளத்தில் பெங்களூரு போலீசாரால் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்காக அவரை பெங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
