அரசியல்

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த முதல்வர் முகஸ்டாலின்.!

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த முதல்வர் முகஸ்டாலின்.!

அமைச்சரவை கூட்டம் நடந்தது கூட்டம் முடிந்து அதிகாரிகள் வெளியேறியபின் : அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பர்சனலா பேசினாரு.ஆனா அமைச்சர்கள் எல்லாருமே பேயறஞ்ச மாதிரி ஆய்ட்டாங்க? மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் மே 9ந்தேதி காலை 11.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை நீடித்தது. அமைச்சரவைக் கூட்டம் தொடங்கும்போதே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இருப்பது வழக்கம். அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள், நிதி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன, மருத்துவத்துறை, வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் கொரோனா தடுப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு வழங்கினார். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எல்லாம்…
Read More
அதென்ன முத்துவேல்னு பதறிய மோடி, விளக்கிய நிர்மலா சீத்தாராமன் !

அதென்ன முத்துவேல்னு பதறிய மோடி, விளக்கிய நிர்மலா சீத்தாராமன் !

முத்துவேல் என்றால் என்ன? வீரவேல் தெரியும், வெற்றி வேல் தெரியும் அதென்ன முத்துவேல்னு பதறிய மோடி, விளக்கிய நிர்மலா சீத்தாராமன் டெல்லி உயர் அதிகாரிகளின் வட்டாரங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழா. நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலில் அசாம் தவிர பாஜக மிக முக்கியமான 3 மாநிலங்களில் தோல்வியடைந்தாலும் அங்கெல்லாம் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பவர்களிடம் தோற்றிருக்கிறது, தமிழ்நாட்டில் மட்டும் தான் எதிர்க்கட்சியிடம் தோற்றிருக்கிறது. எப்படியாவது அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும்னு தான் பாஜக வட்டாரமே நம்பியிருந்ததாம். அதற்காகவே 40 தொகுதிகள் கேட்டவர்கள் 20 தொகுதி என்று இறங்கி வந்தார்களாம். அப்படியிருந்தும் வெற்றி பறிபோனதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் 18 இடங்களை வென்றதில் கடுப்பாகயிருக்கிறார்களாம்.காங்கிரஸ் ஜெயிக்கவே கூடாதுன்னு பாஜக திரைமறைவு வேலைகளெல்லாம் செஞ்சது.அதையும் மீறி 18 இடங்கள்ல காங்கிரஸ் ஜெயிச்சத பாஜகவால ஜீரணிக்கவே முடியல. முகஸ்டாலின் பதவியேற்றபோது இதுவரை இல்லாத வழக்கமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
Read More
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா?

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா?

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற போட்டியின் பின்புலத்தில் சசிகலா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தேர்வு செய்யவே மே 7-ம் தேதி  மாலை அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றால் விஜயபாஸ்கரும் உடல்நல பாதிப்பால் வைத்திலிங்கமும் வரவில்லை. இவர்கள் இருவரை தவிர மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ரகசிய ஆலோசனை நடத்தினர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, தன்னை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் இதற்கு உடனே பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். தென் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிமுக தோல்வியுற்றதற்கு எடப்பாடியே காரணம் என்றும் அவர் எடுத்த இடஒதுக்கீடு பிரச்சினையே காரணம் என்றும் ஓபிஎஸ் சரமாரியாக எடப்பாடி மீது குற்றம்சாட்டினார். அது போல் எடப்பாடியும், கொங்கு மாவட்டங்களில்…
Read More
மாமனாரை ‘மன்னன்’ ஆக்கிய பலே மருமகன்! MK Stalin-ஐ CM ஆக்கிய One Man Army

மாமனாரை ‘மன்னன்’ ஆக்கிய பலே மருமகன்! MK Stalin-ஐ CM ஆக்கிய One Man Army

பத்தாண்டு கால திமுகவின் அதிகார கனவை நனவாக்கிய பெருமையை ஒருவர் உரிமை கொண்டாட முடியும்னா அது சபரீசன் தான். தேர்தலுக்கு முன்பு வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன், இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன். இது மட்டும் அவருக்கான அடையாளம் அல்ல. ஸ்டாலின் முழுமையாக அவரை நம்பியது தான் சபரீசனுக்கான அடையாளம்.   முதல்வரின் ஒரே மகள் செந்தாமரையை காதல் திருமணம் புரிந்த சபரீசன், அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நெல்லை மைந்தன். மனைவி செந்தாமரைக்கு இம்மியளவு கூட அரசியல் ஆசை கிடையாது. அவர், தான் சென்னையில் நடத்தும் பள்ளி வேலைகளில் மட்டுமே பிஸியாக இருப்பவர். ஆனால், சபரீசன் ஒரு 'ஆல்ரவுண்டர்'. பிஸினஸ், அரசியல், சினிமா என்று எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தனது ஆளுமையை செலுத்தும் அளவுக்கு திறமைசாலி. 2016 தேர்தலில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பாலிடிக்ஸ் ஆக்டிவ்னஸ், அவரது உடல் நலம் காரணமாக குறையக் குறைய,…
Read More
இது என்ன கட்சி அலுவலகமா.. கருணாநிதி படத்தை அகற்றுங்க.. மு.க.ஸ்டாலின் அதிரடி!

இது என்ன கட்சி அலுவலகமா.. கருணாநிதி படத்தை அகற்றுங்க.. மு.க.ஸ்டாலின் அதிரடி!

தலைமைச் செயலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் வைத்த மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் தனது படங்களை அகற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டார். தமிழகத்தில் கடந்த 2011 ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்றது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமை செயலக கட்டிடத்தின் வலது புறத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியே தொடர்ந்ததால் ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் ஜெயலலிதாவின் படங்கள் அப்படியே வைக்கப்பட்டது. தமிழக சட்டசபை, முதல்வர் அறை உள்ளிட்ட இடங்களிலும் ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த போது சென்னை தலைமை…
Read More
மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நான்கே நாட்களில், மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் , சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர், அக்கட்சியை விட்டு விலகியிருக்கின்றனர்.  முன்னதாக, கமீலா நாசர் ராஜினாமா செயதிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பொன்ராஜ், சமீபத்தில்தான் கட்சியில் சேர்ந்தவர். மகேந்திரன், கமல் கட்சி துவக்கியதிலிருந்து உடனிருந்தவர் என்பதால், அவருடைய விலகலுக்கான காரணமென்ன என்ற விவாதம் சூடு பறக்கிறது.  தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதும், முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினை, கமல் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் வேறு யாரும் உடன் போகவில்லை. அந்த நேரத்தில், ஸ்டாலின் சொன்ன சில விஷயங்கள் பற்றி மகேந்திரனிடம் கமல் கேட்டதுதான், அவர் கட்சியை விட்டு விலகுவதற்குக் காரணமென்ற தகவல் பரவியுள்ளது. தி.மு.க., மூத்த…
Read More
திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? அஞ்சா நெஞ்சனின் ஆதரவாளர்கள் ஆரவாரம்!!

திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? அஞ்சா நெஞ்சனின் ஆதரவாளர்கள் ஆரவாரம்!!

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். முதலமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிரணியில் உள்ள தலைவர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில் என் தம்பி மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதை கண்டு பெருமை அடை கிறேன். அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று புகழ்ந்தார். மு.க.அழகிரியின் இந்த திடீர் மனமாற்றம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ஆதரவாளர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி மதுரையில் பரபரப்பு வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் “இணைந்த இதயங்களே” “தம்பி வா தலைமை ஏற்க வா” “தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பதவியேற்பு விழாவில்…
Read More
அப்பாவுக்கு சபாநாயகர் பதவி !

அப்பாவுக்கு சபாநாயகர் பதவி !

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளதையடுத்து சபாநாயகர் யார் என்ற கேள்வி அக்கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் எழுந்துள்ளது.சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு சபாநாயகர் பதவியை ஸ்டாலின் வழங்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளதால், திமுகவுக்குள் சபாநாயகர் யார் என்ற பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த சில சீனியர்கள் அதற்கான காய்களை நகர்த்தி வருவதாக தெரிகிறது தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே இந்த அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டாலும், முடிவுகளுக்கு ஏற்றவகையில் பின்னர் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் முடிவுகளுக்கு முன்பே சபாநாயகர் பற்றிய பேச்சுகளும் எழத் தொடங்கின. அப்போது, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு சபாநாயகர் பதவியை ஸ்டாலின் வழங்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.அந்த மாதிரி அவரை நியமித்திருந்தால் தமிழகத்தில் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமை கிடைத்திருக்கும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாஜக வேட்பாளர் டாக்டர் சரஸ்வதியிடம் தோற்றுப் போய்விட்டார். ஆனால், தேர்தலில்…
Read More
முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது?

முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது?

 நல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அண்ணா பெரியார் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு கோட்டைக்கு வந்தார். முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது? முதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம் ஏழைகள் வயிற்றில் பால் வார்த்த கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு முதலமைச்சரானால் அடுத்த 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படும் என தாலுகா தாலுகாவாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய நிலையில் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் தனி துறை ஒன்றை உருவாக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை தலைமை செயலகத்தில் உருவாக்கம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர்…
Read More
*ஸ்கெட்சை மீறி ஜெயித்த அமைச்சர்கள்; ஸ்டாலின் ரகசிய விசாரணை !

*ஸ்கெட்சை மீறி ஜெயித்த அமைச்சர்கள்; ஸ்டாலின் ரகசிய விசாரணை !

தன்னுடைய திட்டத்தை மீறி, அ.தி.மு.க., அமைச்சர்கள் வெற்றி பெற்றது எப்படின்னு ஸ்டாலின் ரகசிய விசாரணையை துவக்கியுள்ளார். பழனிசாமி தலைமையிலான, நான்கு ஆண்டு கால ஆட்சியில், அமைச்சர்களாக இருந்தவர்களில் சிலர், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். சட்டசபையில், ஸ்டாலினை எள்ளி நகையாடினர். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திணறினர். இவர்களுக்கு, தேர்தலில் பாடம் புகட்ட விரும்பிய ஸ்டாலின், அந்த மந்திரிகளுக்கு எதிராக, பலமான வேட்பாளர்களை நிறுத்த, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மாவட்ட செயலர்கள் பரிந்துரைத்த பலருக்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. சில தொகுதிகளில், தானே நேரடியாக தலையிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தினார். ஆனால், 11 அமைச்சர்கள் மட்டுமே, தோல்வி அடைந்துள்ளனர். தோற்கடிக்க வேண்டும் என, ஸ்டாலின், 'ஸ்கெட்ச்' போட்டு வைத்திருந்த, ஏழு அமைச்சர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலரின் ரகசிய ஆதரவு கிடைத்தது…
Read More