யாரால் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.?

யாரால் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.?
உள் இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவந்த, அ.தி.மு.க ஏன் தோற்றது ?
இப்படி பல கேள்விகள், சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில், தி.மு.க வின், நிலையான, ஓட்டு வங்கி 28 முதல் 30 சதவிகிதம்

ஜெயலலிதா, உயிரோடு இருந்த போது, அ.தி.மு.க வின் நிலையான ஓட்டு வங்கி 30 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க வின் ஓட்டு வங்கி, OPS ன் தர்மயுத்தம், தினகரன் சசிகலா, வெளியேற்றம், இரட்டை தலைமை ஆகியவைகளால், அ.தி.மு.க வின் பலம் வலுவிழந்து போனது.

இதற்கிடையில், எடப்பாடியார், சசிகலாவால், முதலமைச்சர் ஆனார்.

அ.தி.மு.க, 2019 பாராளுமன்ற தேர்தலை, பா.ஜ.க, பா.ம.க, கூட்டணியுடன், சந்தித்தது.

பதிவான வாக்குகளில், தி.மு.க, 51 சதவிகித வாக்குகளையும், அ.தி.மு.க, 38 சதவிகித வாக்குகளையும் பெற்று, 13 சதவிகித வித்தியாசத்தில், அ.தி.மு.க, 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், தோற்றுப்போனது.

2019 தேர்தலில், 3 சதவிகித ஓட்டுகளே உள்ள, பா.ஜ.க , பா.ம.க வை நம்பி, 38 பாராளுமன்ற, தொகுதிகளை இழந்தது அ.தி.மு.க.

*ஒரு ராஜ்யசபா MP பதவியை , வாக்கு வங்கியே இல்லாத, ராமதாஸின் பா.ம.க வுக்கு கொடுத்து, ஏமாந்தார், எடப்பாடியார்.

அரசு ஆவணங்களின் அடிப்படையில் வன்னியர்களின் ஓட்டு வங்கி 15 சதவிகிதம்.
தற்போதய ராமதாஸிடம் இருக்கும் வன்னியர்கள்ஓட்டு 2 சதவிகிதம் மட்டுமே. மீதமுள்ள, 13 சதவிகித வன்னியர்களின் ஓட்டுகள் ராமதாஸூக்கு எதிரானது.

ராமதாஸூக்கு எதிரான அந்த 13 சதவிகித ஓட்டுக்கள் தான், 2021 சட்டமன்ற தேர்தலில், வடமாவட்டங்களில், தி.மு.க ஓட்டாக, இடம்மாறிப்போனது.

வன்னியர்கள், அ.தி‌.மு.க வுக்கு எதிரானவர்கள் அல்ல. தி.மு.க வுக்கு, ஆதரவானவர்களும் அல்ல. ஆனால் ராமதாஸூக்கு எதிரானவர்கள். அதனால், பெரிய தோல்வியை தழுவியது அ.தி.மு.க.

10.5 சதவிகித, உள் இட ஒதுக்கீடு, சட்டமன்ற தேர்தலில், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வன்னியர்  கூட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.2010 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் 15% உள் இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தவர் சி.என்.ராமமூர்த்தி.. வழக்கு எண் 14025/2010. இந்த வழக்கின் தீர்ப்புரையின் அடிப்படையில் தமிழக அரசு, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை கேட்டு 21-03- 2012 அன்று அரசாணை (எண் 35) பிறப்பித்தது.13-06-2012 அன்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது பரிந்துரையை தமிழக அரசுக்கு சமர்பித்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு நடைமுறைபடுத்தாததால் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார் சி.என்.ராமமூர்த்தி..01-04-2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு, 30 நாட்களுக்குள் இந்த தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற ஆணையிட்டது.
ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தாமல் காலம் கடத்திய தமிழக அரசை எதிர்த்து இரண்டாவது முறையாக இப்பொழுது வழக்கு தொடர்ந்துள்ளார் சி.என்.ராமமூர்த்தி. அந்த வழக்கு எண்: MadrasHC Case with SR No. WP/10546/2021 and CNR HCMA010150902021, C.N.Ramamurthy VS Government Filed on 03-02-2021.

கடந்த 26-02-2020ல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சட்ட முன்வடிவு அதாவது அமெண்ட்மென்ட் ஐ தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் சட்ட மசோதா தாக்கல் செய்ததை இப்போதைக்கு அரசால் அமுல்படுத்த முடியாது. 10.5% உள் ஒதுக்கீட்டின் பலனை வன்னியர்கள் தற்போது அனுபவிக்க இயலாது என்றாலும், சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அடுத்த அமைய உள்ள புதிய அரசு இந்த சட்ட முன்வடிவை (எண் 14 /2021) சட்டமாக்கி வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்னு சி.என் . ராமமூர்த்தி சொல்றார்.ராமதாஸின் மற்றும் வன்னியர்கள் வாக்குகளை நம்பி, தோற்றுப்போனார் எடப்பாடியார் அவர்கள்.

ராமதாஸால், அ.தி.மு.க ஏமாற்றப்பட்டது.

வன்னியர்களால், பா.ம.க காலாவதியானது.

2019 மற்றும்,2021 தேர்தல்களில், ராமதாஸின், கூடா நட்பால், ஆட்சியை இழந்தார் எடப்பாடியார்.

ராமதாஸுக்கு, எந்த நஷ்டமுமில்லை.ராமதாஸை நம்பி, பணத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, தோற்றுப் போனார்கள் பல, அப்பாவி வன்னியர்கள். வரும் தேர்தல்களில் ராமதாஸை யாரும் சீண்டமாட்டார்கள். ஆனால் அதேசமயம் வன்னியர்களுக்கான இந்த 10.5% உள் ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றி நடைமுறைப்படுத்தினால் இனிவரும் தேர்தலில் வன்னியர்கள் ஓட்டு திமுகவுக்கே !
செய்வாரா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ..!