“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லும்”;.இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம சபாநாயகர் அப்பாவு கச்சிதமா பொருந்துது.
……..
2016 ல் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன….
முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னரே மோடியிடம் இருந்து ஜெயலலிதாவிற்கு வாழ்த்து செய்தி வருகிறது….முடிவு அறிவிக்கப்படாத தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றதாக அவசர அவசரமாக அறிவிக்கப்படுகிறது…அதில் ஒன்றுதான் ராதாபுரம்…திமுகவின் அப்பாவு வெறும் 49 ஓட்டுகளில் தோற்றதாக அறிவிக்கிறார்கள்…
தபால் ஓட்டுகளை எண்ணி பிறகு முடிவு அறிவிக்கலாம் என வாதிடுகிறார்…வாதம் மறுக்கப்படுகிறது…
காவல்துறையால் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்….
நீதி கேட்டு நீதி மன்றம் செல்கிறார் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தணும்னு ..வழக்கு கொடுக்கிறார் நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு , பிறகு ஒரு நாள் நீதி மன்றம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடுகிறது…
நீதிமன்றத்தில் வாக்குககள் எண்ணப்படுகிறது….
திடீரென்று எதிர்கட்சியினர் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை கோரி வழக்கு தொடுக்கின்றனர்…
இந்தியாவில் இதுவரை இல்லாத அதிசயமாக மறு முறை எண்ணிய முடிவுகள் அறிவிக்கப்படவில்லை…அதற்குள் ஐந்தாண்டு கடந்து விட்டது…ஆட்சியும் முடிந்து விட்டது…2021 தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் போட்டியிடுகிறார்… இம்முறை வெற்றி பெறுகிறார்…
அனைவரும் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர் …
ஸ்டாலின் தரவில்லை….
ஸ்டாலின் நேற்று அறிவிக்கிறார் “அப்பாவுதான் அடுத்த சபா நாயகர் என்று…
எந்த சட்டசபையில் அப்பாவுவை நுழைய விடாமல் நீதிமன்றம் தடுத்ததோ/கெடுத்ததோ, அதே அப்பாவு அடுத்த ஐந்தாண்டு சபையின் நாயகர்…அவர் உள்ளே நுழையும் போது 234 MLAக்களும் ( முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உட்பட) எழுந்து நிற்பார்கள்…
நீதி மன்றம் தராத நீதியை, மரியாதையை, தன் முடிவின் மூலம் தன் கட்சி தொண்டருக்கு தந்திருக்கும் ஸ்டாலின் , சாணக்யத்தனத்தில் தான் தன் தந்தைக்கு சளைத்தவனில்லை என்று நிரூபித்திருக்கிறார்…
இப்போ கூப்பிட்ட குரலுக்கு நின்று பதில் சொல்லும் அரசியல்வாதிகளில் ஒருவரான அப்பாவுவைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்! 69 வயசான அப்பாவு காங்கிரஸ் கட்சியில்தான் தன் பொலிட்டிக்கல் லைஃப்பை தொடங்கினார். ஜி.கே. மூப்பனார், தமிழ்மாநில காங்கிரஸை தொடங்கினப்போ பலரைப் போல் அதுலே ஐக்கியமாகி. 1996 சட்டசபைதேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அவரது முதல் தேர்தல் வெற்றி இதுதான். அப்போதிலிருந்தே கமிஷனுக்கு ஆசைப்படாம தன் பங்காக வரும் பணத்தையும் போட்டு பல நலத் திட்டங்கள் செஞ்சு தொகுதி மக்களைக் கவர்ந்தார்
அதை அடுத்து 2001ல் நடந்த தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனா, தமாகா – அதிமுக கூட்டணியில் இருந்த வேறு கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால், ஆவேசமான அப்பாவு, சுயேச்சையா போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிச்சிட்டார். அந்த அளவுக்கு ராதாபுரத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக அவர் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார். விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் பிரச்னைகளில் உண்மையான குரல் கொடுத்து வந்ததால் கிடைச்ச சக்சஸிது
இதுபோன்ற சூழலில், தமாகா மீண்டும் காங்கிரஸில் இணைந்தபோதிலும், அப்பாவு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆனா பாருங்க, தன்னோட தொகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் சிலரை அப்பாவு தீவிரமாக எதிர்த்ததால், அந்தக் கட்சியின் தலைமையுடன் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக வழக்குகள் பாய்ந்ததால், அப்செட் ஆன அப்பாவு, 2006ஆம் ஆண்டு, திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு அதே வருஷம் நடந்த அசெம்பளித் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டு வெற்றியும் பெற்றார். வழக்கம் போல் தன் எல் எல் ஏ பணிய செவ்வனே செஞ்சு வந்தார்
இதை அடுத்து 2016ஆம் வருஷம் அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். பரபரப்பான வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.
அதில், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துங்கோ-ன்னு உத்தரவிட்டது. அதன்படி ரீ கவுண்டிங்-கும் நடந்துச்சு.. உடனே இதனை எதிர்த்து ஆளுங்கட்ட்சி எம்எல்லே இன்பதுரை சுப்ரீம் கோர்ட்ல போட்ட வழக்கால், இன்னிவரை முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருக்குது.
இந்நிலையில்தான் நடந்து முடிந்த தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை சபாநாயகராக்கி கோர்ட் மூஞ்சிலே. கரி பூச வச்சிட்டார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !