பாமக கோட்டையைத் தகர்த்த திருமாவளவன் !

பாமக கோட்டையைத் தகர்த்த திருமாவளவன் ! பொதுத் தொகுதியில் ஜெயித்து காட்டிய விசிக ! அதுவும் பானைச் சின்னத்தில் !!

பா.ம.க., கோட்டையாக கருதப்படுகிற, திருப்போரூர் பொது தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அத்தொகுதியில் ஆய்வு நடத்த நிர்வாகிகளுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், நான்கு தனித் தொகுதிகள், இரண்டு பொது தொகுதிகளில், அக்கட்சி போட்டியிட்டது. பொதுத் தொகுதிகளான திருப்போரூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியும் நாகப்பட்டினம் தொகுதியில், ஆளூர் ஷாநவாஸும் வெற்றி பெற்றுள்ளனர்.

தனி தொகுதிகளான காட்டுமன்னார் கோவிலில், சிந்தனை செல்வன், செய்யூர் தொகுதியில், பனையூர் பாபு வெற்றி பெற்றுள்ளனர். திருப்போரூர் தொகுதியில், வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தொகுதியில் அடங்கிய திருக்கழுக்குன்றத்தில் தான், முதல் முறையாக வன்னியர் சங்கம் துவக்கப்பட்டது.

பா.ம.க., துணை தலைவரும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆறுமுகம், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் எனக்கருதி, பா.ம.க., தலைமை, ‘சீட்’ வழங்கியது. ஆனால், அவரை எதிர்த்த எஸ்.எஸ்.பாலாஜியும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றாலும், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் படித்த இளைஞர்களின் ஆதரவில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு பொதுத் தொகுதியில், அதுவும் பா.ம.க.,வை வெற்றி கொண்ட மகிழ்ச்சியில், திருமாவளவன் இருக்கிறார். பா.ம.க., கோட்டையான திருப்போரூர் தொகுதி கைவிட்டு போனதால், ராமதாஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காரணத்தை வெளில போய்த் தேடவேண்டாம்.
வன்னியர்களுக்கு 15 % வாக்குகள் தான்.ஆனா ராமதாஸ் திமுக அதிமுகன்னு மாறி மாறி கூட்டணி வைச்சு கட்சியைப் பலப்படுத்தாம ராமதாஸ் குடும்பத்த வளப்படுத்திக்கிட்டாங்க.10.5% சதவிகித உள் இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த சி.என்.ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தால் தேர்தலுக்கு முன்பாக சட்ட முன் வடிவு இயற்றப்பட்டது.ஆனால் இன்னமும் சட்டமாக்கப்படவில்லை.இது வன்னியர் சமுதாயத்தில் நம்பிக்கை வரவில்லை.ராமதாஸ் நம்மை ஏமாற்றுகிறார் என்று நம்பியதால் வன்னியர்கள் பாமகவுக்கு வாக்களிக்கவில்லை.