திமுகவில் இணைகிறார் ம.நீ.ம முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்?

மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய போது மிகவும் ஆர்வத்துடன் சேர்ந்தவர்களில் ஒருவர் Dr.மகேந்திரன். இவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கமல் கட்சியின் தூண்களில் ஒருவராக மகேந்திரன் மாறினார். இவரது வீட்டு விசேஷங்களுக்கு சென்று கமல் மிகவும் நெருக்கமானார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனது சொந்த ஊரான கோவையில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வியடைந்தார்.

இருந்தாலும் 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் பெற்று பிற கட்சியினரை ஆச்சரியப்பட வைத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இங்கு அவர் 36,855 வாக்குகள்  பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி விட்டனர்.

அதில் மகேந்திரனும் ஒருவர். தன்னுடைய ராஜினாமாவை தொடர்ந்து கமல் ஹாசனிடம் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டினார். இதனால் கோபமடைந்து மகேந்திரனை துரோகி என்று கமல் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மகேந்திரன் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக  தகவல் வெளியானது. மேலும் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) தலைவர் பதவியை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனுடன் கோவை மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை பலப்படுத்தும் பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாம்.

தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) சேர்மன் பதவியை மகேந்திரனுக்கு வழங்கலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மகேந்திரன் ஓகே சொல்லிவிட்டதாக மேற்கு மண்டல தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே மேற்கு மண்டலத்தில் அதிமுக ஸ்ட்ராங்காக உள்ளது. போதாத குறைக்கு பாஜகவுக்கு கூட கணிசமாக ஓட்டுக்கள் வருகின்றன. ஆனால் அனைத்து மண்டலமும் கை கொடுத்தாலும் மேற்கு மண்டலம் மட்டும் திமுகவுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

ஏன்னா கொங்கு  மண்டலத்தில்  அதிமுக எப்போதும் பலம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. அதனை இம்முறையும் நிரூபித்து விட்டது. கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது. இதனால் திமுக மீண்டும் சறுக்கியது. இந்த சூழலில் தான் கோவை மண்டலத்தில் ஒரு தலைவரை உருவாக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இங்குள்ள தொழிலதிபர்களுடன் மகேந்திரனுக்கு நல்ல பழக்கம் உண்டு. எனவே TIDCO தலைவர் பதவி கொடுத்தால் தொழிலதிபர்களுடன் நெருக்கம் ஏற்படும். பல்வேறு தொழில் திட்டங்களை அமல்படுத்தவும், அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பை பெருக்கவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் முடியும் என்று திமுக நம்புகிறது. காளை மாடுகள் ஆராய்ச்சியாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, மேற்கு மண்டலத்தில் ஆளுமைமிக்கவராக இருப்பதால் அவரை திமுகவில் சேர்த்துக்கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு எதிராக சீட்டு கொடுத்து போட்டியிட வைத்தது திமுக தலைமை. சிவ சேனாதிபதி தோல்வியடைந்திருந்தாலும் கூட அவருக்கு ராஜ்யசபா எம்பி உள்ளிட்ட வேறு ஏதாவது உயர் பதவிகளை கொடுத்து மேற்கு மண்டலத்தில் அவரை தொடர்ந்து வலுவான ஒரு உள்ளூர் தலைவராக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். தொழில்துறையினர் முக்கியம் என்பதால் கோவை மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் மகேந்திரனுக்கு “டிட்கோ” சேர்மன் பதவியை கொடுத்து திமுகவில் அவரை ஒரு தலைவராக வளர்த்தெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். அங்கு தொழில்களை நடத்தும் தொழிலதிபர்கள், ஓட்டுக்கள் எந்த பக்கம் செல்லும் என்பதை தீர்மானிக்கிறார்கள். ஏற்கனவே மகேந்திரனுக்கு தொழிலதிபர்களிடம் நல்ல பழக்கம் உண்டு.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாடு கழகத்தில் தலைவராக பதவியேற்றால், பல்வேறு தொழில் அதிபர்களுடன் இன்னும் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேற்கு மண்டலத்தில், பல்வேறு தொழில் திட்டங்களை அமல்படுத்தி திமுக அரசுக்கு மேற்கு மண்டலத்தில், மகேந்திரன் நல்லபெயர் வாங்கித் தருவார், என்று முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார். இதெல்லாம் வருங்காலங்களில் திமுகவுக்கு ஆதாயமாக மாறும் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தப்படுகிறதாகக் கூறுகிறார்கள். “மகேந்திரன் மட்டுமல்ல, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல்வேறு தலைவர்களும் விரைவில் திமுகவில் இணையப்போவதாக செய்தி வரத்தொடங்கி விட்டது.
மகேந்திரன் திமுகவில் இணைவது உறுதி என்கிற செய்தியை உறுதிப்படுத்தும் வகையில மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.என்ன சொல்லியிருக்கிறார்னா
Dr Mahendran R
@drmahendran_r

சுய மரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும், திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால், எழுத்தால் உலகறியச் செய்தவர்; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன்,5 முறை தமிழகத்தை ஆண்ட, ஐயா திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம்!

அப்படீன்னு பதிவிட்டிருக்கிறார்.
ராதாரவி ஒரு படத்தில் ஒரு டயலாக் சொல்வாரு கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்ங்கிற மாதிரி விரைவில் திமுகவில் இணையப் போகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் Dr.மகேந்திரன்.