அரசியல்

தமிழகத்திற்கு தனி ரயில்வே துறை! முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு! தமிழகத்திற்கு கடந்த ஒனறிய பட்ஜெட்டில் 10 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் மத்திய மோடி அரசு ஒதுக்கியிருந்தது. அதாவது ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா 1,000 மட்டும். எனவே தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்கள் என்னென்ன? அவற்றுக்கான நிதி தேவை எவ்வளவு? ரயில்வே திட்டங்கள் சரியாக, வகுக்கப்பட்ட கால வரையறையில் நிறைவேற்றப்படுகிறதா? என்பதையெல்லாம் கண்டறிந்து ஒன்றிய அரசுக்கு தெரிவித்து தேவையான நிதி ஒதுக்கீடு பெற மாநில அரசில் ஒரு ரயில்வே அமைச்சர் தேவை. கேரளாவில் 20 ஆண்டுகளாக ரயில்வே அமைச்சர் என மந்திரி இருக்கிறார். அவர்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் வாங்கி நிறைவேற்றிக் கொள்வதில் முன்னணியில் கேரளமும் கர்நாடகமும் உள்ளன. இவை இல்லாமல் K' ரயில் என ஒரு ரயில் போக்குவரத்தை கேரள அரசு மத்திய அரசின் ஒத்துழைப்போடு நடத்தி வருகிறது. இதன் வருமானம் முழுமையாக அந்த…
Read More

சசிகலாவைக் கட்சியில் இணைத்துக்கொள்வது பற்றி கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்’

சசிகலாவைக் கட்சியில் இணைத்துக்கொள்வது பற்றி கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்' என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலாவை காட்டமாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாலேயே, முக்குலத்தோர் சமூகத்தினரைச் சமாதானப்படுத்துவதற்காக பன்னீர் இப்படிப் பேசியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதும் பன்னீரை உஷ்ணமாக்கிவிட்டதாம். 'சசிகலா கால்ல யார் விழுந்தது?' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபப்பட்டிருக்கிறார் அவர். பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்கத்திலான கவசத்தை அ.தி.மு.க-வின் சார்பில் காணிக்கையளித்தார் ஜெயலலிதா. ஒவ்வொரு குருபூஜையின்போதும், அ.தி.மு.க-வின் பொருளாளர் இந்தத் தங்க கவசத்தை வங்கியின் லாக்கரிலிருந்து எடுத்து, தேவர் ஆலயத்தின் நிர்வாகிகளிடம் வழங்குவது வழக்கம். அந்த வகையில், தங்கக் கவசத்தை பெற்றுக் கொடுப்பதற்காக, நேற்று (அக்டோபர் 25-ம் தேதி) மதுரைக்கு வந்திருந்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் பொருளாளருமான பன்னீர்செல்வம். அப்போது, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர், சசிகலாவைக் காட்டமாக எடப்பாடி பழனிசாமி…
Read More
சசி., ஆதரவு ஓ.பி.எஸ். மீது ஒழுங்கு நடவடிக்கை?பதவி பறிப்பா? டிஸ்மிஸ்ஸா? எடப்பாடி கோஷ்டி அவசர ஆலோசனை! சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு அக்கட்சியில் மீண்டும் ஒரு புதிய பிளவுக்கு அச்சாரம்போட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இரட்டை தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்படுவது நீண்டகாலத்துக்கு சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். தற்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரலை ஓ.பி.எஸ். மறைமுகமான முன்வைக்க அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர். "மோதல் ஓயாது?" "ஓபிஎஸ்-ன் தம்பி, டிடிவி தினகரன் வீட்டு திருமண வரவேற்பில் பங்கேற்றும் இருக்கிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல..." ஓபிஎஸ்-ன் தம்பி,…
Read More
தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின் !

தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின் !

திமுக அரசுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த அமைச்சர் குடும்பம்- தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின் ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கொஞ்சம் அதிரவைத்திருக்கிறது தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரம். அரசு பணத்தை பகிரங்கமாக சூறையாடும் வகையில் டெண்டர்களில் அமைச்சரின் குடும்பத்தினர் தலையிட்டு திருத்தம் செய்திருந்ததைக் கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடைய வைச்சிருந்ததுன்னு சொல்லுது கோட்டை வட்டாரங்கள். பொதுவாக பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் பணிகளை செய்து முடிக்கவும் டெண்டர்களை அரசு தரப்பு வழங்கும். குறைவான விலையில் பொருட்கள் வழங்க, பணிகளை முடிக்க முன்வருவோருக்கு டெண்டர்கள் வழங்குவது இயல்பு தான்.இது எல்லா ஆட்சியிலேயும் நடக்கிற நடைமுறை தான். ஆனால் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்கள், தங்களது பினாமி நிறுவனங்களுக்கு டெண்டர்களை கொடுப்பதுல தான் சில அமைச்சர்கள் முயற்சி எடுத்து ஆதாயம் அடைவது வழக்கம். அப்படி செய்யும் பல அமைச்சர்கள் வசமாக வழக்குகளில் சிக்குவதும் உண்டு.  தமிழக…
Read More
இளங்கோவன் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைஞ்சிருச்சி

இளங்கோவன் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைஞ்சிருச்சி

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்பி.வேலுமணி, வீரமணி, விஜயபாஸ்கர் வரிசையில் அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில, திடீர் திருப்பமா எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைஞ்சிருச்சி. இதுக்கு முன்னால நடைபெற்ற ரெய்டுகளின் போது கிடைத்த சில ஆவணங்கள் மூலமா அந்த அமைச்சர்களோட இளங்கோவனுக்கு இருந்த தொடர்புகளை காட்டிக் கொடுத்திருக்குது. அந்த வகையில இளங்கோவன் வீட்டில் ரெய்டு நடந்தாலும், சோதனை முழுக்க முழுக்க எடப்பாடியை சிக்க வைப்பதற்கான ஆதாரங்களை தேடியே நடைபெறுவதாகச் சொல்றாங்க.. அதாவது சுருக்கமாக சொல்லணும்னா, எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து இளங்கோவன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறையை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியிருப்பது யாரும் எதிர்பார்க்காத திருப்பம்னு சொல்றாங்க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பதையும் தாண்டி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன். தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் ஆபந்தபாந்தவனாக அனாதை ரட்சகனாக இருந்தவர் இளங்கோவன்னு சொல்றாங்க. அதிமுகவின் மேல்மட்ட…
Read More
மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை திமுக அரசு எடுக்க வேண்டிய நேரம்

மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை திமுக அரசு எடுக்க வேண்டிய நேரம்

மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை திமுக அரசு எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய ரூ.126 கோடியை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் மகிழ்ச்சியளிக்குது. இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் முறையாகும். ஆந்திர அரசுக்கு சொந்தமான மின் வினியோக நிறுவனங்கள் தான் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மின் நிறுவனங்கள். கடந்த 3 மாதங்களில் ரூ.126 கோடியை மிச்சப்படுத்திய ஆந்திர மின் நிறுவனங்கள், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ரூ.2,342 கோடியை மிச்சப்படுத்தியுள்ளன.ஆச்சரியமா இருக்கா இல்லையா ஆனா அது தான் உண்மை. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4.55க்கு கொள்முதல் செய்யலாம்னு ஆந்திர அரசு அனுமதித்துள்ள நிலையில், அம்மாநில மின் வினியோக நிறுவனங்கள் ரூ.3.12க்கு கொள்முதல் செய்யுது. இது தான்…
Read More
சட்டசபை வெற்றியை உள்ளாட்சியிலும் தொடர்கிறதா திமுக?..

சட்டசபை வெற்றியை உள்ளாட்சியிலும் தொடர்கிறதா திமுக?..

ஆரம்பமே சறுக்கிய அதிமுக, பாமக.. சட்டசபை வெற்றியை உள்ளாட்சியிலும் தொடர்கிறதா திமுக?.. பின்னணி! ] சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட காரணத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் பெரும் தாமதத்திற்கு பின் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 9 மாவட்டங்களில் 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சட்டசபை தேர்தலுக்கு பின் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் இதில் பதிவானது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்…
Read More
 மீண்டும் தமிழக  அரசுப் பணியில் அமுதா ஐஏஎஸ்!

 மீண்டும் தமிழக  அரசுப் பணியில் அமுதா ஐஏஎஸ்!

  தமிழக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு பணியிலிருந்து அமுதா ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த அமுதா ஐ.ஏ.எஸ் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையினால் மத்திய அரசு பணியிலிருந்து அமுதா ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த அமுதா பெரியசாமி இளங்கலை விவசாய அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். 1994ஆம் ஆண்டு தமிழக ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட அவலங்களை திறம்பட எதிர்கொண்டாரு. இம்மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். சுய உதவிக் குழுக்களின் பங்களிப்புடன் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கப் பயிற்சி அளித்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பை தொடரச் செய்தார். ஆட்சியராக அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஏராளம்ன்னு…
Read More
ஏலம் போன `ஏர் இந்தியா’ – மத்திய அரசு, டாடா நிறுவனம்; யாருக்கு லாபம்?

ஏலம் போன `ஏர் இந்தியா’ – மத்திய அரசு, டாடா நிறுவனம்; யாருக்கு லாபம்?

``இந்திய முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் நல்வாழ்வைக் கருத்தில்கொண்டும், வளரும் இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கவும் இது போன்ற தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது." - மோடி இந்தியாவின் ஒரே பொதுத்துறை விமான சேவை நிறுவனமாக இருந்த `ஏர் இந்தியா' மீண்டும் டாடா நிறுவனத்திடமே சென்றது. பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறது டாடா சன்ஸ் குழுமம். மத்திய அரசின் இந்தச் செயலை `நமக்கிருந்த ஒரு பெரும் சுமை குறைந்தது’ என ஒருபுறம் வரவேற்றும், மறுபுறம் `சொந்தமாக விமான சேவை இல்லாத அரசாக இந்தியா மாறியிருப்பது அவமானம்' என விமர்சிக்கப்பட்டும்வருகிறது. உண்மையில் ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்டதில் யாருக்குத்தான் லாபம் என்பதைப் பார்ப்போம். 1932-ம் ஆண்டு தனியார் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட `ஏர் இந்தியா', 1953-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. `இந்தியாவின் முதல் விமான சேவை’ என்ற பெருமையோடு விண்ணில் பறந்த ஏர் இந்தியா நிறுவனம், உள்நாடு முதல்…
Read More
எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் !

எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் !

ஓபிஎஸ்க்கு எதிராக அதிரடி? அதிமுகவை புரட்டிப் போட வருகிறது 'சசிகலா புயல்'? குஷியில் ஓபிஎஸ் கோஷ்டி அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வரும் 16-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முதல் முறையாக சென்று மரியாதை செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அக்டோபர் 26-ந் தேதி எம்ஜிஆர் நினைவிடத்துக்கும் செல்ல உள்ளாராம் சசிகலா. இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்படலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். 4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்குப் பின்னர் தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தேர்தல் நேரத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுக தாமாகவே தம் வசமாகும் என எதிர்பார்த்தார் சசிகலா. அதுவும் நடக்கவில்லை. அதனால் ஆடியோ அரசியல் யுத்தத்தை கையில் எடுத்தார் சசிகலா. ஆயிரக்கணக்கான அதிமுக, அமமுக…
Read More