தமிழகத்திற்கு தனி ரயில்வே துறை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு!
தமிழகத்திற்கு கடந்த ஒனறிய பட்ஜெட்டில்
10 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் மத்திய மோடி அரசு ஒதுக்கியிருந்தது. அதாவது ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா 1,000 மட்டும்.
எனவே தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்கள் என்னென்ன?
அவற்றுக்கான நிதி தேவை எவ்வளவு?
ரயில்வே திட்டங்கள் சரியாக, வகுக்கப்பட்ட கால வரையறையில் நிறைவேற்றப்படுகிறதா? என்பதையெல்லாம் கண்டறிந்து ஒன்றிய அரசுக்கு தெரிவித்து தேவையான நிதி ஒதுக்கீடு பெற மாநில அரசில் ஒரு ரயில்வே அமைச்சர் தேவை.
கேரளாவில் 20 ஆண்டுகளாக ரயில்வே அமைச்சர் என மந்திரி இருக்கிறார்.
அவர்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் வாங்கி நிறைவேற்றிக் கொள்வதில் முன்னணியில்
கேரளமும் கர்நாடகமும் உள்ளன.
இவை இல்லாமல் K’ ரயில் என ஒரு ரயில் போக்குவரத்தை கேரள அரசு
மத்திய அரசின் ஒத்துழைப்போடு நடத்தி வருகிறது. இதன் வருமானம் முழுமையாக அந்த மாநில அரசுக்கே சொந்தம்.
அதாவது K ரயிலுக்கு தேவையான நிலம், மின்சாரம், இதர தேவைகளை மாநில அரசு வழங்கும்.மத்திய அரசின் ரயில் பாதையை மாநில ரயில் பயன்படுத்தி தனக்கான போக்குவரத்தை நடத்திக் கொள்ளும்.
இதுவல்லாமல், தேவைப்படும் இடங்களுக்கு மத்திய அரசிடம் ரயில் பாதை அமைக்க கோரி நிறைவேற்றி அந்த வழித்தடங்களில் மாநில அரசு ரயில் விட்டுக் கொள்ளலாம்.
கேரளாவின் K ரயில் போல் கர்நாடகமும் ரயில் போக்குவரத்தை நடத்துகிறது.
இது 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த ரயில் போக்குவரத்தை
மாநில ரயில்வே அமைச்சர் கண்காணித்து நிர்வாகம் செய்வார்.
தற்போது தமிழகத்திலும், மாநில அரசு சார்பில் ரயில் போக்கு வரத்தை துவங்க
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.விரைவில் அதற்கென
ஒரு துறை உருவாக்கப் பட்டு முதலில் அது முதல்வரின் நேரடி கண்காணிப்பில் அல்லது மாநில நிதி அமைச்சரின் கண்காணிப்பில் செயல்படும்
.பிறகு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.