இளங்கோவன் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைஞ்சிருச்சி

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்பி.வேலுமணி, வீரமணி, விஜயபாஸ்கர் வரிசையில் அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில, திடீர் திருப்பமா எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைஞ்சிருச்சி. இதுக்கு முன்னால நடைபெற்ற ரெய்டுகளின் போது கிடைத்த சில ஆவணங்கள் மூலமா அந்த அமைச்சர்களோட இளங்கோவனுக்கு இருந்த தொடர்புகளை காட்டிக் கொடுத்திருக்குது. அந்த வகையில இளங்கோவன் வீட்டில் ரெய்டு நடந்தாலும், சோதனை முழுக்க முழுக்க எடப்பாடியை சிக்க வைப்பதற்கான ஆதாரங்களை தேடியே நடைபெறுவதாகச் சொல்றாங்க.. அதாவது சுருக்கமாக சொல்லணும்னா, எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து இளங்கோவன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறையை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியிருப்பது யாரும் எதிர்பார்க்காத திருப்பம்னு சொல்றாங்க.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பதையும் தாண்டி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன். தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் ஆபந்தபாந்தவனாக அனாதை ரட்சகனாக இருந்தவர் இளங்கோவன்னு சொல்றாங்க. அதிமுகவின் மேல்மட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.இப்போ ரெய்டில் சிக்கியுள்ள இளங்கோவன் கூட்டுறவு வங்கியின் மாநில தலைவராக மட்டும் இல்லை சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் தலைவராகவும் இருக்கிறாரு.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மாவட்ட அதிமுக பொறுப்பாளராகவும் இவர் செயல்பட்டாரு. இவரை சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிழல்ன்னு தான் எல்லாரும் சொல்வாங்க. அதிமுக ஆட்சியில் அரசு விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அதே மரியாதை இளங்கோவனுக்கும் கொடுக்கப்படும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இளங்கோவனிடம் கலந்து பேசாமல் எடப்பாடி எந்த முடிவையும் எடுக்க மாட்டார்னு அடிச்சி சொல்றாங்க சேலம் மாவட்ட அதிமுக காரங்க..

தமிழக அளவில் கூட்டுறவு வங்கியின் மாநிலப் பொறுப்பில் பல வருடங்களாக இருந்து வர்றாரு இளங்கோவன். குறிப்பா அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் எல்லாமுமே இளங்கோவன் கட்டுப்பாட்டில் தான் இருந்துச்சு. போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா இவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அனுமதிப்பாருங்கிறாங்க.. அதற்கு காரணம் வரவு – செலவு விவகாரத்தில் இளங்கோவன் செம கில்லியாம்.. அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் மூலமான கார்டன் வருமானத்தை முழுக்க முழுக்க மேற்பார்வை செய்தது இளங்கோவன் தானாம். அப்புறம் அமைச்சர்கள் கொடுக்கும் கமிசன் தொகை சரியான அளவில் இருக்குதாங்கிறத கிராஸ் செக் செய்யவும் இளங்கோவனைத்தான் ஜெயலலிதா பயன்படுத்துவாராம் .

ஜெயலலிதா மட்டும் அல்ல சசிகலாவிற்கும் இளங்கோவன் நெருக்கமாக இருந்தார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சராக இருந்தாலும் கார்டனுக்கு இளங்கோவன் தான் செல்லப்பிள்ளை. எனவே சேலத்தில் அப்போது எடப்பாடி பழனிசாமியை விட இளங்கோவன் அதிகாரமிக்கவராக இருந்திருக்காரு.. மேலும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே இளங்கோவன் கண்காணிப்பில் தான் இருந்துள்ளார். இதற்கு காரணம் சசிகலாவிடம் வரவு செலவு கணக்குகளை எவ்வித பிசிறும் இல்லாமல் கேட்கும் போதெல்லாம் இளங்கோவன் கொடுத்து வந்தது தான்னு என்று சொல்லப்படுது. அதோடு பெங்களூர் சிறையில் சசிகலா இருந்தப்போ அவருக்கு சிறையில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க கோடிக்கணக்கில் பணம் கைமாறிய விவகாரத்திலும் இளங்கோவன் பெயர் தான் அடிபட்டுச்சு.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிஇருந்தப்போ தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தாரு. அப்போ கையில் கரன்சியாக வைத்திருந்த அமைச்சர்கள் எல்லாரும் ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டாங்க. ஆனாஅவங்க எல்லாரையும் பக்காவாக அரவணைச்சு பழைய ரூபாய் நோட்டுகள் எல்லாத்தையும் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்த குற்றச்சாட்டிலும் இளங்கோவன் சிக்கினாரு. அந்த வகையில் சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியை மையமாக வைத்து ஒரே நாளில் 600 கோடி ரூபாய் அளவிற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணையும் நடைபெற்றுச்சு. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமா அப்போதைய அமைச்சர்கள் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தவர் இந்த இளங்கோவன் தான்னும் ஒரு புகார் உண்டு.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியை மையமாக வைத்து சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. அப்போதே இது தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துனாங்க.. அப்போ இளங்கோவனிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு இளங்கோவனை மத்திய புலனாய்வு அமைப்புகள் எதுவும் டச் பண்ணலை. இதுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவனுக்கு இருந்த நெருக்கம் தான்.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் சோதனை.போட்டதுல ரூ.29.77 லட்சம் பணம், 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை..10 சொகுசு கார்கள்
2 வால்வோ பேருந்துகள்,- பறிமுதல் செஞ்சதா லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை. வெளியிட்டிருக்கு.

இளங்கோவன் வீட்டில் நடைபெறும் ரெய்டால், எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைவருமே இப்போ ஆடிப்போயிருக்காங்களாம். இதுக்கு காரணம் இளங்கோவனுடன் வரவு செலவு வைத்துக் கொள்ளாத அதிமுக அமைச்சர்களே இல்லையாம். அதனால் தான் ஸ்டாலின் என்ன ஸ்கெட்ச் போட்டிருக்காருன்னா இளங்கோவன் கிட்ட கிடைக்கிற ஆதாரங்களை வச்சு வேற யாரையெல்லாம் தூக்கலாம்னு முயற்சி பண்றாராம்.இந்த ரெய்டால எடப்பாடியார் தூக்கமில்லாம தவிக்கிறாராம்.