தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின் !

திமுக அரசுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த அமைச்சர் குடும்பம்- தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின் !

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கொஞ்சம் அதிரவைத்திருக்கிறது தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரம். அரசு பணத்தை பகிரங்கமாக சூறையாடும் வகையில் டெண்டர்களில் அமைச்சரின் குடும்பத்தினர் தலையிட்டு திருத்தம் செய்திருந்ததைக் கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடைய வைச்சிருந்ததுன்னு சொல்லுது கோட்டை வட்டாரங்கள். பொதுவாக பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் பணிகளை செய்து முடிக்கவும் டெண்டர்களை அரசு தரப்பு வழங்கும். குறைவான விலையில் பொருட்கள் வழங்க, பணிகளை முடிக்க முன்வருவோருக்கு டெண்டர்கள் வழங்குவது இயல்பு தான்.இது எல்லா ஆட்சியிலேயும் நடக்கிற நடைமுறை தான். ஆனால் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்கள், தங்களது பினாமி நிறுவனங்களுக்கு டெண்டர்களை கொடுப்பதுல தான் சில அமைச்சர்கள் முயற்சி எடுத்து ஆதாயம் அடைவது வழக்கம். அப்படி செய்யும் பல அமைச்சர்கள் வசமாக வழக்குகளில் சிக்குவதும் உண்டு.

 தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ அளவுக்கு 2 வகையான ஸ்வீட்கள், காரம் ஆகியவை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 1 கிலோ ஸ்வீட் ரூ500 என்ற வகையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்க உத்தரவிட்டார் அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆனால் அந்த இனிப்புகளும் காரமும் தரமில்லாதவை என்கிற சர்ச்சையும் அப்போது வெடிச்சது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இத்தகைய முறைகேடுகள் இருக்காதுங்கிறது எல்லோருடைய எதிர்பார்ப்பு. அரசு அதிகாரிகளும் இந்த எதிர்பார்ப்புடன்தான் இருந்து வர்றாங்க.. இந்த நிலையில் போக்குவரத்து துறையில் தீபாவளி இனிப்புகள் வழங்குவதற்கான டெண்டர் விநியோகம் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. கடந்த கால ஆட்சியைப் போல இல்லாமல் இந்த முறை அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகளை கொள்முதல் செய்யலாம்; அப்படி செய்தால் ஆவின் நிறுவனத்துக்கும் கணிசமான தொகை கிடைக்கும்; அரசுக்கும் குறைவான செலவு ஏற்படும்னு அதிகாரிகள் கருத்து தெரிவிச்சிருந்தாங்க. ஆனால் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் குடும்பத் தரப்பு, அப்படி எல்லாம் ஆவினில் இனிப்புகள் வாங்க வேண்டாம். 9 போக்குவரத்து கழகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 டன் இனிப்புகள் தேவை. இதை குறிப்பிட்ட ஒரு ஹோட்டல் நிர்வாகத்திடம் கொடுத்துடலாம்ன்னு சொல்லியிருக்கிறார். அப்போதும் அதிகாரிகள், டெண்டர் விட்டுதான் முறைப்படி கொடுக்க வேண்டும். அந்த ஹோட்டல் நிர்வாகத்தை விட குறைவான விலைக்கு ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் கேட்டால் என்ன செய்றதுன்னு கேள்வி எழுப்பி இருக்கிறாங்க. அப்போதான், ஆண்டுக்கு ரூ100 கோடி வருவாய் ஈட்டக் கூடிய நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்னு டெண்டர் விதிகளில் திருத்தம் கொண்டு வாங்கன்னு அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் சொல்லப்பட்டதாம்.  இதனடிப்படையிலேயேஆதாயத்துக்காக டெண்டர் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாம். அதாவது குறிப்பிட்ட அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் 1 கிலோ இனிப்பு ரூ600 என அரசு பணத்தை கொடுத்து வாங்கலாம் என்பதுடன் அமைச்சர் தரப்பின் முடிவு. இதில் 30% அமைச்சர் தரப்புக்கு கமிஷனாக தர வேண்டும் எனவும் கேட்கப்பட்டதாம். அரசு போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கும் நிலையில் இப்படி பணத்தை ஏதோ ஒரு தனியார் ஹோட்டலுக்கும் அமைச்சர் குடும்பத்துக்கும் பங்குபோட்டுக் கொடுப்பது சரியா? விடியல் தரும் அரசு என்று பாடுபடும் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிடமாட்டாராங்கிற குமுறலை போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வெளிப்படுத்தி வந்தாங்க. இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவும் விசாரணை நடத்துச்சு அத்தோட தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரம் அரசியலாகவும் சர்ச்சையாக வெடித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதனை வெளிப்படையாகவே விமர்சிக்கவும் செய்தனர். இது தொடர்பான ஆவணங்களையும் தமது சமூக வலைதளப் பக்கங்களில் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.சமூக வலைதளங்களிலும் தமிழக அரசின் டெண்டர் திருத்த விவகாரம் விவாதப் பொருளானது. தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யாமல் ரூ100 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம்தான் இனிப்புகள் வாங்குவேன் என அடம்பிடிப்பது ஏன் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் நிறுவனங்களிடம் இனிப்புகளை கொள்முதல் செய்யக் கூடாது; ஆவின் நிறுவனத்திடம்தான் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார்.

 ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே அவப்பெயரா? என்கிற ரீதியில் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்துதான் ஆவின் நிறுவனத்திடம்தான் இனிப்புகளை கொள்முதல் செய்யணும்னு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டாராம். முதல்வரின் இந்த உத்தரவு அமைச்சர் தரப்பை அதிர்ச்சி அடைய வைச்சிருந்தாலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவிச்சிருக்காங்க. ஆவினில் குறைவான விலைக்கு தரமான இனிப்புகள் கிடைக்கும் போது இதைவிட்டுவிட்டு தனிநபர் ஆதாயத்துக்காக அரசு பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் முதல்வர்ங்கிறாங்க போக்குவரத்துக் கழக ஊழியர்கள். மேலும் அரசு டெண்டர் விவகாரங்களில் அமைச்சரின் குடும்பத்தினர் சர்வ சாதாரணமாக தலையிடுவது தொடர்பாக தமது கடும் அதிருப்தியையும் முதல்வர் ஸ்டாலின் தரப்பு வெளிப்படுத்தியது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.எப்படியோ தகவல் கிடைச்சதும் ஆவின்லதான் ஸ்வீட் வாங்கணும்னு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைச்சிட்டாரு முதல்வர் ஸ்டாலின்.முதல்வர் உத்தரவுக்கு அப்புறம்தான் அதிகாரிகள் பெருமூச்சு விட்டாங்களாம்