08
Oct
உளவுத்துறை ஒரு ஆட்சியோட மூளைன்னு சொல்லலாம்.. தமிழ்நாடு முழுவதும் நடக்கிற விஷயங்களை உடனுக்குடன் முதல்வருக்கு தெரிவிக்கிறதுக்குத்தான் உளவுத்துறை பயன்படுத்தப்படுது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அதில சில பிரச்சினைகள் இருந்ததை விமர்சகர்கள் மட்டுமல்லாம ஸ்டாலினுக்கு நெருக்கமான பலரும் எடுத்துச் சொன்ன நிலையில உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை ஜெயலலிதா பாணியில் உளவுத்துறையில் அரங்கேற்றியிருக்கிறாருன்னு சொல்றாங்க. தமிழக அரசியல் வரலாற்றில் உளவுத்துறையை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தான். ஆனால் கருணாநிதியின் உளவுத்துறை மேல்மட்ட அளவிலான விஷயங்களை மட்டும் கையிலெடுத்தது. அடிமட்டத்தில் வட்டச் செயலாளர்கள் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரை போட்ட ஆட்டங்களை கண்காணித்து உளவுத்துறை தகவல் அளிக்கவில்லையா, இல்லை அளிக்கப்பட்ட தகவல்களை சரியாக கவனிக்கப்படவில்லையான்னு தெரியலை. .இதன் விளைவு 2006-11 ஆட்சிக்குப்பின் திமுகவுக்கு பெருமளவில் பாதிப்பு வார்டு அளவிலான கட்சிக்காரர்களாலேயே ஏற்பட்டதுன்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க. உளவுத்துறையை முழுமையாக நம்பியவர் ஜெயலலிதா. எந்த அளவுக்குன்னா உளவுத்துறையை டிஜிபி அந்தஸ்து அதிகாரி…
