29
Nov
எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன் ! எடப்பாடியே எதிர்பார்க்கலை இந்த அதிர்ச்சிய.அதுவும் இவ்வளவு நாளாக அமைதியா இருந்திட்டு இப்ப திடீர்னு பிரச்சினையக் கிளப்புறாரேன்னு எடப்பாடி புலம்புறாராம்.அதிமுக கூட்டத்தின் அனல் இன்னமும் அடிச்சிகிட்டே தான் இருக்குது.. இதையடுத்து அக்கட்சிக்குள் என்னதான் நடக்குது? சீனியர்களின் அடுத்தடுத்த மூவ்கள் என்னங்கிற எதிர்பார்ப்புகளும் எகிறி வருது. அதிமுகவின் மா. செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கடந்த 24-ம் தேதி நடந்து முடிந்தது.. ஏகப்பட்ட முட்டல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், களேபரத்துடன் இந்த கூட்டம் நடந்து முடிந்தாலும், அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலை, கூட்டம் நல்ல முறையில் மிக அமைதியாக நடந்து முடிஞ்சுதுன்னு ஜெயக்குமார் அப்படியே பேசி சமாளிச்சத நாம் பார்த்தோம். வழக்கமாக எந்த கூட்டம் நடத்தப்பட்டாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்துமோதல்களும், அதிருப்திகளும் வர்றது சகஜம்தான். ஆனால், இந்த முறை கட்சியின் சீனியர்கள் அன்வர் ராஜா செங்கோட்டையனின் ஸ்டண்ட்கள் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுது. இவங்கள்ல எடப்பாடி…
