03
Sep
கோடநாடு வழக்கு: சயானிடம் நடந்த மறுவிசாரணை அறிக்கை இன்று உதகை கோர்ட்டில் தாக்கல்-சிக்குவது எடப்பாடியா? கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கி உயிர் தப்பிய சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் நடத்தப்பட்ட மறு விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கோடநாடு விவகாரத்தில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி சயான் வாக்குமூலம் தந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானதால் நாளைய விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கோடநாடு எஸ்டேட் பங்களா. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக கோடநாடு பங்களாவுக்கு தோழி சசிகலாவுடன் செல்வது வழக்கம். இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏராளமான ஆவணங்கள், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வரும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் 4…
