06
Jul
Infinity Movie Review in Tamil: மென்பனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். ‘இன்ஃபினிட்டி’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். படத்தின் கதை படத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். உண்மையான கொலையாளி யார்? எதற்காக இத்தனைக் கொலை நடந்தது? என சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் ‘இன்ஃபினிட்டி’…
