டெல்லி “சிக்னல்”.. வெலவெலக்கும் அதிமுக.. ரெடியாகும் சசிகலா..!

மேட்டரே வேறயாமே.. பறந்து வந்த டெல்லி “சிக்னல்”.. வெலவெலக்கும் அதிமுக.. ரெடியாகும் சசிகலா..! By Hemavandhana Updated: Thursday, February 10, 2022, 14:33 [IST] சென்னை: சசிகலா செம தெம்பில் இருக்கிறாராம்.. சசிகலாவின் இந்த குஷியும், தெம்பும் அதிமுக மேலிடத்துக்கு கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறதாம். இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட் அதிரடிகளுக்கு எப்போதுமே பெயர் போனவர் சசிகலா.. ஆனால், சிறைக்கு போய் திரும்பி வந்ததில் இருந்தே வித்தியாசமான போக்கை கையாண்டு வருகிறார்.. எதிலும் பொறுமையை கையில் எடுத்துள்ளார்.. by TaboolaSponsored Links [New Batch Launch] M.Tech in Data Science SRM, Chennai முக்கியமாக, அதிமுக மேலிடத்தை அணுகாமல், மாறாக தொண்டர்களை அணுக தொடங்கினார்.. அமமுக நிர்வாகிகளைவிட, அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் கவனம் செலுத்தினார்.. பார்க்க வரட்டுமா அம்மா? நன்றி மறக்காத விஜயசாந்தி.. சசிகலா சொன்ன சறுக்கல் முதலில் ஆடியோக்கள், அடுத்து அறிக்கைகளை வெளியிட்டு தன் முக்கியத்துவத்தை உணர்த்தி கொண்டிருக்கிறார்.. தொண்டர்களுக்கு தெம்பூட்டிக் கொண்டிருக்கிறார்.. அடித்தளத்தை பலமாக்கி கொண்டிருக்கிறார். ஆனால், பாஜக மேலிடத்தின் ஆதரவு அதிமுகவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் கிடைத்து கொண்டிருப்பதும், தன்மீதான நம்பிக்கை பாஜக மேலிடத்துக்கு குறைவாக இருப்பதும்தான் காரணம் தன்னுடைய அரசியல் சறுக்கலுக்கு காரணம் என்பதை சசிகலா லேட்டாகவே உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. பாஜக இப்படிப்பட்ட சமயத்தில்தான் 2 மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசினார் சசிகலா.. ரஜினியோ, சசிகலாவிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசியிருக்கிறார்… ஆனால், அந்த சில நிமிட சந்திப்பிலேயே கண்கலங்கியபடி பேசினாராம் சசிகலா. பாஜக மேலிடத்தில் தன்னை பற்றி சிபாரிசு செய்யுமாறு கேட்டதாகவும், சசிகலாவுக்கு உதவி செய்ய லதா ரஜினிகாந்த் முன்முயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் கசிந்தன.. ரஜினிகாந்த் இப்படிப்பட்ட சூழலில்தான் 4 நாட்களுக்கு முன்பு விஜயசாந்தி, சசிகலாவை சந்தித்து பேசினார்.. விஜயசாந்தி வெறும் நடிகை என்றால் இது ஒரு விஷயமாகவே யாருக்கும் தெரியாது.. ஆனால், அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்பதால் இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் அதிகமாக பூசப்பட்டது.. எதிர்பார்ப்புகள் ஏராளமாய் எகிறின.. அரசியல் காரணங்களுக்கான சந்திப்பு இது இல்லை என்று வழக்கம்போல காரணங்கள் இதற்கும் சொல்லப்பட்டன. “சின்னம்மா எனக்கு அம்மா போல.. நான் அவருக்கு மகள் போல” என்று பாசத்தை பிழிந்தார் விஜயசாந்தி. மேட்டரே வேற ஆனாலும் இந்த சந்திப்பில் நடந்த மேட்டரும், அந்த சந்திப்புக்கு பின்பு நடந்த மேட்டரும் வேற என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்… செய்தியாளர்களிடம் அன்றைய தினம் விஜயசாந்தி பேசும்போது, “விரைவில் நல்லது நடக்கும், அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது நல்லதே நடக்கும்” என்று ஒரு பஞ்ச் வைத்து விட்டுப்போனார் இல்லையா.. அந்த பஞ்ச் தான் இப்போது டெல்லியில் ஒர்க் அவுட் ஆகி உள்ளதாம். ஜேபி நட்டா சசிகலாவை சந்தித்து விட்டு சென்ற விஜயசாந்தி, சசிகலா விசயம் தொடர்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவிடம் பேசினாராம்.. அப்போது, ஹெச்.எம். ஜி-யை சந்திக்க சசிகலா விரும்புகிறார்.. (ஹோம் மினிஸ்டர் அமித்ஷாவைதான் ஹெச்.எம். என்று சொல்வார்கள்) ஆனால், அவரை சந்திப்பதற்கு முன்பாக உங்களை சந்திக்க விரும்புகிறார். அவருக்காக 20 நிமிடம் நேரம் ஒதுக்க இயலுமா ஜி? என்று கேட்டிருக்கிறார் விஜயசாந்தி. Ads by பச்சை சிக்னல் அதற்கு ஜே.பி.நட்டாவோ, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடியட்டும், பார்க்கலாம் என்றாராம்.. இந்த நம்பிக்கை மிகுந்த வார்த்தையை சசிகலாவிற்கு விஜயசாந்தி உடனே பாஸ் செய்ய, புதிய உற்சாகத்தில் சசிகலா இருக்கிறாராம.. பாஜக மட்டும் சசிகலாவுக்கு லேசாக பச்சைக் கொடியை காட்டிவிட்டால், அதிமுக மொத்தமாகவே தன்னுடைய கைக்குள் வந்துவிடும் என்பதே சசிகலாவின் கடந்த 6 மாத கால பிளான் இருந்து வருவதாக தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/why-did-actress-vijayashanthi-met-vk-sasikala-and-what-will-bjp-plan-about-admk/articlecontent-pf652002-448334.html