07
May
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இனி தன் வழி தனி வழி என்கிற முடிவிற்கு வந்துள்ளதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் காட்டுகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நீண்ட இழுபறிக்கு பிறகே அறிவிக்கப்பட்டார். முதலில் எடப்பாடி பழனிசாமியை ஏற்க தயக்கம் காட்டிய ஓபிஎஸ் பிறகு ஒரு வழியாக ஏற்றுக் கொண்டார். இதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு தொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியே எடுத்தார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடங்கி, வேட்பாளர் தேர்வு வரை எடப்பாடியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. தென் மாவட்டங்கள் மற்றும் சில தொகுதிகளில் மட்டுமே ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுக்க முடிந்தது. ஆனால் தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்கள் தோல்வியை தழுவினர். அதிலும் ஓபிஎஸ் பொறுப்பில் இருந்த தென் மாவட்டங்களில் அதிமுக படு தோல்வியை…
