அதென்ன முத்துவேல்னு பதறிய மோடி, விளக்கிய நிர்மலா சீத்தாராமன் !

முத்துவேல் என்றால் என்ன? வீரவேல் தெரியும், வெற்றி வேல் தெரியும் அதென்ன முத்துவேல்னு பதறிய மோடி, விளக்கிய நிர்மலா சீத்தாராமன்

டெல்லி உயர் அதிகாரிகளின் வட்டாரங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழா.

நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலில் அசாம் தவிர பாஜக மிக முக்கியமான 3 மாநிலங்களில் தோல்வியடைந்தாலும் அங்கெல்லாம் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பவர்களிடம் தோற்றிருக்கிறது, தமிழ்நாட்டில் மட்டும் தான் எதிர்க்கட்சியிடம் தோற்றிருக்கிறது.

எப்படியாவது அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக்
கொள்ளும்னு தான் பாஜக வட்டாரமே நம்பியிருந்ததாம். அதற்காகவே 40 தொகுதிகள் கேட்டவர்கள் 20 தொகுதி என்று இறங்கி வந்தார்களாம். அப்படியிருந்தும் வெற்றி பறிபோனதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் 18 இடங்களை வென்றதில் கடுப்பாகயிருக்கிறார்களாம்.காங்கிரஸ் ஜெயிக்கவே கூடாதுன்னு பாஜக திரைமறைவு வேலைகளெல்லாம் செஞ்சது.அதையும் மீறி 18 இடங்கள்ல காங்கிரஸ் ஜெயிச்சத பாஜகவால ஜீரணிக்கவே முடியல.
முகஸ்டாலின் பதவியேற்றபோது இதுவரை இல்லாத வழக்கமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான் என தன்னுடைய மூன்று தலைமுறை பெயரையும் சொல்லி மு.க.ஸ்டாலின் பதவியேற்றது அதிகாரிகள் வட்டாரத்தில் வரவேற்பையும் எதிர்ப்பார்ப்பையும் கிளப்பியிருக்கிறது.
பதவியேற்பை டிவியில் பார்க்காதவர்கள் கூட சமூகவளைதளங்கில் அதைப் பார்த்துவிட்டு அதற்கான காரணங்களை
தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் அலுவலக அதிகாரிகள் வட்டாரமும் இதில் தப்பவில்லை. தினசரி நிகழ்வுகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறவர்கள் இதையும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுவரை கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் என்றளவில் மட்டுமே தனக்கு அறிமுகமாகியிருக்கும் ஸ்டாலின் சொன்ன முத்துவேல் என்ற வார்த்தையை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய வெற்றிவேல், வீரவேல் வார்த்தைகளோடு இணைத்துப் பார்த்து தான் பேசிய வார்த்தைகள் ஏன் பதவியேற்பில் எதிரொலித்திருக்கிறது என்று பதட்டமாகியிருக்கிறார் பிரதமர். அதிகாரிகள் இது குறித்து தந்த விளக்கம் திருப்தியில்லாமல் போகவே தமிழ் தெரிந்த நிர்மலா சீத்தாராமனை தொடர்புக் கொண்டு கேட்க…அவர் தான், முத்துவேலுக்கும் வெற்றிவேல் வீர வேலுக்கும் எந்த தொடர்புமில்லைஜி ஒண்ணும் டென்ஷனாகாதீங்கஜின்னு என்பதையும் அது கருணாநிதியின் தந்தைப் பெயர் என்பதையும் விளக்கியிருக்கிறார். அதன் பின்னர் திருப்தியடைந்த மோடி ஸ்டாலினின் இந்த செய்கையை நிர்மலாவிடம் பாராட்டவும் செய்திருக்கிறார்.இந்த இடத்தில ரஜினி டயலாக் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்லே.டெல்லிவரைக்கும் அதிருதுல்லெ.

இதுவரை ஸ்டாலின் குறித்து தனக்கு மாநில பாஜகவிடம் இருந்து வந்த தகவல்கள் அனைத்திலும் இத்தனை தவறுகளா என்று நிர்மலாவிடம் கேள்வி கேட்ட பிரதமர் மோடி இனி வருங்காலங்களில் ஸ்டாலினை சமாளிக்க என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும் என்பதை விரைவில் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததன் விளைவாகவே ஆக்சிஜன் ஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் வந்த கோரிக்கையை ஏறத்தாழ முழுமையாய் செயல்படுத்தியிருக்கிறார்.

முதல்வராகிவிட்ட மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை ஒட்டியே மத்தியரசின் நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தேவையற்ற அநாவசிய சர்ச்சைகள் ஏற்படாதபடி மத்தியரசு நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் துறைரீதியிலான அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்தே வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம்.

இந்த உத்தரவினால் ஆச்சரியமடைந்த அதிகாரிகளை, தனக்குரிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டிய சாதுர்யமும் குஷிப்படுத்தியிருக்கிறது. இதனால் தமிழ்நாடு பக்கமே கடந்து 10 வருடமாக தலைக்காட்டாமலிருந்த பல நேர்மையான அதிகாரிகள் கோவிட் காலத்துக்கு பிறகு மெதுவாக சென்னைக்குள் நுழைய ஆர்வமாகியிருக்கிறார்கள் என்று மத்தியரசின் மாநில உளவுத்துறை பொறுப்பாளர் தெரிவித்திருக்கிறார்.நேர்மையான நாணயமான ஆட்சி நடக்கணும்னா நேர்மையான அதிகாரிகள் இருந்தால் தான் முடியும்.இது திமுக ஆட்சியா என்னப்பா இது நம்பவே முடியலயேன்னு சொல்ற அளவுக்கு நல்லாட்சி நடக்கும்னு சொல்றாங்க.நாங்களும் அதைத்தான் விரும்பறோம்.