முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது?

 நல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அண்ணா பெரியார் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு கோட்டைக்கு வந்தார்.

முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது?

முதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்

ஏழைகள் வயிற்றில் பால் வார்த்த கையெழுத்து – ‘ஆவின்’ பால் விலை.. லிட்டருக்கு ‘3’ ரூபாய் குறைப்பு

முதலமைச்சரானால் அடுத்த 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படும் என தாலுகா தாலுகாவாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய நிலையில் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் தனி துறை ஒன்றை உருவாக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்

 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை தலைமை செயலகத்தில் உருவாக்கம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்தூம் அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமனம்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. ! தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் – 

முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த சூப்பர் ஐஏஎஸ் டீம்.. உதயசந்திரன் உட்பட 4 பேர் முதல்வரின் செயலாளர்களாக நியமனம்

முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி கல்வித்துறையில் பல முன்னெடுப்புக்களை கொண்டுவந்து வெகுவாக புகழடைந்தவர்.
அமைச்சரவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதிகாரிகள் குழு ஒரு முதல்வருக்கு முக்கியம்.என்னதான் அமைச்சரவை ஒரு திட்டத்தை பற்றி முடிவெடுத்தாலும் அதை செயல்படுத்துவது அந்த துறை அதிகாரிகள் தான். தலைமைச் செயலாளர் யார் என்பது இந்த விஷயத்தில் முக்கியத்துவம் தருவதாக இருக்கும். இது தவிர முதல்வரின் அலுவலகத்தில் யார் யார் அதிகாரிகளாக இருக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் விரைவாகவும், சிறப்பாகவும் இருப்பதை தீர்மானிக்கும்.

எனவே முதல்வரின் செயலாளர் பதவி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக பணியாற்றியவர் இவர். ஒரு கட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடவும் அதிகமாக பாராட்டுகளை பெறத் தொடங்கியிருந்தார்.

டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் பல புதுமைகளை தேர்வாணையத்தில் செய்து காட்டியவர். அரசு தேர்வுகளுக்கு இணையதளத்திலேயே விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என பல உத்திகளை கையாண்டார்.செயலாளர் நல்ல பெயர் வாங்கியதைக் கண்டு பொங்கியெழுந்த செங்கோட்டையன் அவரை தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மாற்றினார். அங்கும் கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார். ஈரோடு மாவட்ட ஆட்சியாளராக இருந்தவர், சமச்சீர் கல்வி வடிவமைப்பில் உதயச்சந்திரன் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இதே போல மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள், ஸ்டாலினின், முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். உமாநாத் , எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதல்வரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உமாநாத் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். மாவட்ட நிர்வாகத்தில் நிறைய சீரமைப்பு செய்து பெயர்பெற்றார். தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் உமாநாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

எம்.எஸ்.சண்முகம் 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரி. அருங்காட்சியக ஆணையராக பதவி வகித்து வருகிறார். பாரத் டெண்டர் பிரச்சினை வந்தபோது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார். பாரத் டெண்டர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். இதன் காரணமாகத்தான் அவர் அருங்காட்சியகத் துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டார் என்று விமர்சனங்கள் உண்டு . அவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் தனது பக்கத்தில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜ், தொழில்துறை கமிஷனராக பதவி வகித்தார். தொழில் மற்றும் வணிக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார் . அவர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை அமுதா ஐஏஎஸ்சுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டவர்.குறுகிய காலமே இருந்த நிலையில், சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது இந்த டீம்.ஆக மொத்தம், ஸ்டாலின் டீமிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவருமே, நேர்மைக்கும், திறமைக்கும் பெயர் பெற்றவர்கள்.