அரசியல்

நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.!

நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.!

ஒன்றிய அரசின் தடுப்பூசிக் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி , நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல்ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக ஒன்றிய அரசே நடத்தும்னு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட  அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் ஒன்றிய அரசு தனது தடுப்பூசி கொள்முதலின் முழு விவரத்தையும் தேதி வாரியாக பிரமாண பத்திரமாக 2 வாரங்களில் சமர்ப்பிக்கணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு அடுக்கடுக்கான…
Read More
பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது.!

பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது.!

தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒண்ணு இணைய தளம் முழுக்க வைரலாகிக்கிட்டு வருது. இதையடுத்து வடஇந்தியர்கள் பல பேரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனப் பத்தி இணையத்தில தேடிக்கிட்டே இருக்காங்க. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலாயிடுச்சி. முக்கியமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதியை வாங்கிக்கொண்டு, சரக்கு சேவை வரி நிலுவை தொகையை தர மறுப்பது குறித்து இவர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கு.. பல மாநில அரசுகள் சரக்கு சேவை வரி நிலுவை தொகை குறித்தும், ஒன்றிய அரசின் போக்கு குறித்தும் பேச தொடங்கிட்டாங்க. நம்ம பிடிஆர் புள்ளையார். சுழி போட்டிருக்கார். நம்ம நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். சரக்கு சேவை வரி குழுக் கூட்டத்திற்கு கூட முதல்வர் ஸ்டாலின் அவரைத்தான் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்து இருந்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின்…
Read More
HLL பயோடெக் கம்பெனி திறக்காததற்கு யார் காரணம் ? பீஜேபியும் அதிமுகவும் ஏன் நடவடிக்கை எடுக்கலை ?

HLL பயோடெக் கம்பெனி திறக்காததற்கு யார் காரணம் ? பீஜேபியும் அதிமுகவும் ஏன் நடவடிக்கை எடுக்கலை ?

HLL பயோடெக் நிறுவனம் HLL Lifecare) என்ற கேரள அரசுக்கு சொந்தமான (State owned) மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த HLL லைஃப்கேர் நிறுவனம் என்பது முன்னாள் ஹிந்துஸ்தான் லேடக்ஸ் (Hindustan Latex Limited) நிறுவனமே ஆகும். ஆரம்பத்தில் கருத்தடை சாதனங்கள் தயாரிப்பதில் புகழ்பெற்றிருந்தது. நிரோத், உஸ்தாத், மூட்ஸ், மாலா-டி (Mala-D) போன்ற கருத்தடை சாதனங்கள் இந்த HLL-ன் புகழ்பெற்ற தயாரிப்புகளே. இந்த HLL ஆனது 55 ஆண்டுகளுக்கு முன்னர் 1966ல் இந்திரா காந்தி அம்மையார் முதல்முறையாக பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மருத்துவர் சுசீலா நய்யார். இந்த மருத்துவர் சுசீலா நய்யார் அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் மருத்துவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தை தவைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். இந்த HLL நிறுவனம். ஆரம்பத்தில் கருத்தடை சாதனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்திய இந்த HLL நிறுவனம் பின்னர் படிப்படியாக பிற துறைகளிலும்…
Read More
`தமிழ்நாட்டில் மின் தடைக்கு யார் காரணம்? மோதும் கட்சிகள் – அதிர வைக்கும் பின்னணி

`தமிழ்நாட்டில் மின் தடைக்கு யார் காரணம்? மோதும் கட்சிகள் – அதிர வைக்கும் பின்னணி

`தமிழ்நாட்டில் மின் தடைக்கு யார் காரணம்? மோதும் கட்சிகள் - அதிர வைக்கும் பின்னணி `தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு இந்த கட்சிதான் காரணம் என ஆளும் தி.மு.க அரசும் அ.தி.மு.கவும் பரஸ்பரம் குற்றம்சுமத்தி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் `ஒப்பந்ததாரர்கள் மோதல் உள்பட பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன' என்கின்றன மின் ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது தமிழ்நாடு மின் வாரியத்தில்? சென்னை அண்ணா சாலையில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ` மின் பராமரிப்புப் பணிகளை கடந்த ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது மின் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை 10 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்' என்றார். மேலும், `மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671…
Read More
அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்படத்தான் போகுது!

அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்படத்தான் போகுது!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியையே சந்திக்கும் என்பதே சசிகலாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. திமுக குறைந்த பட்சம் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றும் அவர் கணக்கு போட்டு வைத்திருந்தாராம் . தேர்தலில் எடப்பாடி பழனிசாமி , ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் தோற்பார்கள் என்றும் சசிகலா நினைத்துக் கொண்டிருந்தார் . அதிமுக அமைச்சர்களை தோற்கடிக்கணும்னு திமுக திட்டம் போட்டு செயல்படுத்தியதை சசிகலா ரகசியமாகத் தெரிந்து கொண்டார். அப்படி ஒரு தேர்தல் முடிவு வந்தால் அது தனது அரசியல் ரீ எண்ட்ரிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதுதான் சசிகலாவின் கணக்காக இருந்தது. அதாவது தேர்தலில் படு தோல்வி அடைந்தால் இயல்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் பார்வை தன் பக்கம் திரும்பும் என்பது சசிகலாவின் எதிர்பார்ப்பு . ஆனால் தேர்தல் முடிவுகள் சசிகலாவின் எண்ணத்திற்கு மாறாக நடந்து விட்டது. கணிசமான 66 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று…
Read More
சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றாரா ? இல்லை தோற்கடிக்கப் பட்டாரா ?

சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றாரா ? இல்லை தோற்கடிக்கப் பட்டாரா ?

மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர்  சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றாரா ? இல்லை தோற்கடிக்கப் பட்டாரா ? வெற்றி பெற்றால் முதல் பெண் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளரிடம் எப்படித் தோற்றுப் போனார் ? மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போது திமுகவின் துணை பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதி களமிறக்கப்பட்டார். சி.கே.சரஸ்வதி , வயது : 76 ( 1-3-1945 ) தந்தை : கனகாச்சல கவுண்டர் . தாய் : நஞ்சம்மாள் . கணவர் : எஸ்.எஸ்.சின்னுசாமி . மகள் : கருணாம்பிகை . மகன் : சிவ்குமார் . படிப்பு : எம்.பி.பி.எஸ் . , டி.சி.எச் . | தொழில் : மருத்துவர் . எஸ்.எஸ்.சி. மருத்துவ , கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை…
Read More
கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்று ஸ்வீப் அடித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்று ஸ்வீப் அடித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள்ல 9 தொகுதிகள்ல அதிமுகவும் ஒரு தொகுதியில பிஜேபியும் ஜெயிச்சிருக்கு. கொங்கு மண்டலத்தில திமுகவின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் ? 1996 சட்டமன்றத் தேர்தலில், கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதித் தொகுதிகளைக்கூட கைப்பற்ற முடியலை. அதுக்கு என்ன காரணம் ? சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைஞ்சாச்சு.. தமிழகத்தில் பெரும்பாலும் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தை மட்டும் மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க இங்கு வலிமையுடன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. முக்கியமாக கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்றுள்ளது. கோவையை முழுவதுமாக இழப்பது இது தி.மு.க-வுக்கு முதல்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான்வருது. 1996 சட்டமன்றத் தேர்தலில்…
Read More