பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது.!

தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒண்ணு இணைய தளம் முழுக்க வைரலாகிக்கிட்டு வருது. இதையடுத்து வடஇந்தியர்கள் பல பேரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனப் பத்தி இணையத்தில தேடிக்கிட்டே இருக்காங்க.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலாயிடுச்சி. முக்கியமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதியை வாங்கிக்கொண்டு, சரக்கு சேவை வரி நிலுவை தொகையை தர மறுப்பது குறித்து இவர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கு.. பல மாநில அரசுகள் சரக்கு சேவை வரி நிலுவை தொகை குறித்தும், ஒன்றிய அரசின் போக்கு குறித்தும் பேச தொடங்கிட்டாங்க. நம்ம பிடிஆர் புள்ளையார். சுழி போட்டிருக்கார்.

நம்ம நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். சரக்கு சேவை வரி குழுக் கூட்டத்திற்கு கூட முதல்வர் ஸ்டாலின் அவரைத்தான் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்து இருந்தார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பொருளாதார புலமை காரணமாக வடஇந்திய ஊடகங்கள் பலவற்றில் இவர் விவாதத்திற்கு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு அரசின் குரலாக வடஇந்திய ஊடகங்களில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசப்பட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களை வடஇந்திய ஊடகங்களுக்கு கொண்டு செல்வது, ஒன்றிய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முக்கியமான குரலாக மாறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்தியா டுடே சேனலில் ராஜ்தீப் சர்தேசி நடத்திய விவாதத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இதில் தடுப்பூசிக்கு யார் காசு கொடுக்க வேண்டும், மாநில அரசு கொடுக்கணுமா? இல்ல ஒன்றிய அரசு கொடுக்கணுமாங்கிற ? கேள்வி வைக்கப்பட்டது. இதுக்கு நம்ம நிதியமைச்சர் பி.டி.ஆர். சொன்ன பதில்தான் இணைய தளத்தில் வைரலாய்டு வருது.

இந்த விவாதத்தில் பேசிய  பி.டி.ஆர் , ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருது என்ற கேள்வி உள்ளது. உண்மையிலேயே ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருது. வானத்தில் இருந்து வரலை. ஒன்றிய அரசுக்கு வரும் பணம் எல்லாம் மாநில அரசின் வரிதான். இது மக்களின் வரிப் பணம்.

குஜராத் முதல்வராக மோடி அவர்கள் இருந்த போது சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்றேன். இது ஒன்றிய அரசின் பணம் கிடையாது. இது மாநில அரசு வழங்கும் மக்களின் பணம். மக்களின் பணத்தை வசூலித்து மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குது. இதை யார் எப்படி செலவழித்தாலும் அது மக்களின் பணம் என்பதை முதலில் ஒன்றிய அரசு உணரணும்.

ஒன்றிய அரசு ஒண்ணும் தங்கள் பரம்பரை சொத்துக்களை விற்று மக்களுக்கு செலவு செய்யவில்லை. மக்களிடம் வாங்கிய வரிப்பணத்தை, மாநிலங்களிடம் வாங்கிய பணத்தை சரியாக, முறையாக செலவு செய்யுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒழுங்காக செலவு செய்யுங்கள் என்றுதான் சொல்றோம். ஒன்றிய அரசுதான் உலகம் முழுக்க ஒப்பந்தபுள்ளிகளை கோரி, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

சர்வதேச ஒப்பந்தங்களை மேற்கொள்றதில ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிக சக்தி இருக்கு. மாநில அரசு வெளிநாட்டு கடன்களை பல நாடுகளில் இருந்து வாங்க முடியாது. சாதாரண பட்ஜெட் பணிகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி இன்றி நாங்கள் கடன் வாங்க முடியாது. அப்படி இருக்கும் போது ஒன்றிய அரசுதான் இதில் தலையிட வேண்டும்.

இது மக்களின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்களிடம் வசூலித்த பணத்தில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடணும்னு தான் கேட்கிறோம்ணு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது விவாதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவாதம் தேசிய அளவில் ஹிட் அடித்த நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், யாரென்று டிவிட்டரில், கூகுளில் பலர் கேட்கவும், தேடவும் தொடங்கினர்.

ஆணித்தரமாக, பொருளாதார அறிவோடு பிடிஆர் பேசுவதைக் கேட்டு பல மாநில மக்கள் கூகுளில் நேற்றுமுன்தினம் முதல் தேடத் தொடங்கினர். அதிலும் நேற்று முன்தினம் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட யார் இந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்னு கூகுள்ல தேடுனாங்களாம். அதோட அமெரிக்காவில் பிஎச்டி, எம்.பி.ஏ படித்தவர் நம் நிதியமைச்சர் என்பதையும் பார்த்துட்டு பலபேரு ரொம்ப ஆச்சரியப்பட்டு டிவிட்டரில் டுவீட் செய்யத் தொடங்கிட்டாங்களாம்.

தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு இலவசமாக வழங்க வேண்டுமென்ற விவாதம் தற்போது தீவிரமாக நடந்து வருது. அதோடு கூட சரக்கு சேவை வரி நிலுவைத் தொகையைத் தர வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருது. இந்த சூழ்நிலையில தான் நம்ம தமிழ்நாட்டின் குரல், வடஇந்தியாவில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கு.

இந்திய பொருளாதாரத்தை சீர் குலைத்து, பொருளாதார வளர்ச்சி குறியீட்டை அதலபாதளத்துக்கு வீழ்ச்சியடைய செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நிதியமைச்சரிடம், இனியாவது பாடம் கற்க வேண்டுமென்றும்ங்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நிதியமைச்சர்னா ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவாரு, அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிதாகத் தான் இருக்கும். விஷயம் தெரிஞ்சாத்தான பத்திரிகையாளர் கிட்ட பேசுவாரு.

ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது கிடையாது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றோர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். எப்படீன்னா ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பிச்சு வந்திடுச்சு.

தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் ஒரு மாநிலத்தின் நிதி நிலைமையை கவனிப்பது உண்மையில் தமிழ்நாட்டிற்கு வலிமை.

இப்போ ! நம்ம நிதியமைச்சரருக்
கெதிரா ஏன் இத்தனை விமர்சனங்கள் ?
ஏன்னா அவரிடம் பந்தா இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டுன்னு பேசுறாரு. அதிமுக நிதியமைச்சர்கள் சொல்லுங்க எசமான்னு கையக்கட்டிகிட்டு நிக்கிறதில்ல.நேருக்கு நேரா நின்னு ஒன்றிய அரசின் நிதியமைச்சர கேள்வி கேக்குறதுனாலத்தான் இந்த விமர்சனங்கள் வருது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமனால் பதில் தரமுடியவில்லை. ஆனா என்ன பண்றாங்கன்னா கோவா அமைச்சரையும் வானதி சீனிவாசன் போன்ற சங்கிகளையும் வைத்து நிதியமைச்சரை சீண்டிப்பார்க்கிறாங்க. அவரு அசரவேயில்ல.
இதையெல்லாம் கடந்து வரும் அளவிற்கு உளவியல் தெரியாதவர் அல்ல. நிதியமைச்சர். வானதியை ஒரு பிறவிப் பொய்யர் என்று பதில் அளிப்பதன் மூலம் அவர் தனிப்பட்ட வானதிக்கு பதில் தரவில்லை. ஒரு உளவியல் ரீதியாக அந்த வார்த்தையின் ஆழத்தை எண்ணி சிரித்து கொண்டிருக்கிறார்கள். நிதியமைச்சரின் இந்த சொல்லாடல் ஒட்டுமொத்த சங்கிகளின் டி.என்.ஏ.வையே சிரிக்க வைக்கிறது.

அடுத்து கோவாவுக்கு ஏதோ இழுக்கை ஏற்படுத்திவிட்டது போல் அம்மாநில மவுன் கோடின்கோ நிதியமைச்சர் பிடிஆர் மன்னிப்பு கேகணும்னு எகிறினார். அதனை தனது இடது கையால் சாதரணமாக கையாள்கிறார் நிதியமைச்சர். உனக்கு என்ன பதில் சொல்வது ? நான் கோவா மக்களுக்கு உனது முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன் என்று அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பு கோவா இளசுகளிடையே டிரெண்டிங் ஆயிட்ருக்கு.

“நான் என் மாநிலத்திற்காக பேசவில்லை. கோவாவின் மாநில உரிமைக்காகவும் தான் பேசுகிறேன்” என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்.

ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதி நிர்வாகத்தை ஒன்றிய கட்டுபாட்டில் இருந்து விடுவியுங்கள் என்று அவர் எழுப்பும் கூக்குரல் பற்றி பாமரனும் அறிந்து வைத்திருக்கிறான்.

இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. இன்னும் கேட்டால் தமிழ்நாடு முதல் மாநிலமாக கூட இருக்க கூடும். நமது மாநிலத்தில் இருக்கும் பல நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்கள் மும்பையில் இயங்குவதால் வருவாய் செலவு கணக்குகள் அங்கிருந்து தாக்கல் செய்யப்படுவதால் மகாராஷ்டிராவுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறது.

இப்படி எல்லா வளமும் கொண்ட ஒரு மாநிலத்தின் லகானை ஒன்றிய அரசு பிடித்து வைத்திருப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. கூட்டாட்சி தத்துவத்தின் படி இயங்கவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்கிறார் நிதியமைச்சர் பி டி ஆர்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த இந்த விவகாரத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு எழுப்பியிருக்கிறார் நம்ம பிடிஆர்
இதே சிந்தனையுடைய பஞ்சாப், மஹாராஷ்டிரா,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ள ஆரம்பிச்சிட்டாங்க

இது மத்திய அரசுக்கு புதிய உதறலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஆகவே தான் நிதியமைச்சர் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்.

காய்த்த மரம் தான் கல்லடி படும்ப்பாங்க. ஒன்றிய அரசு வீசும் கற்களைகொண்டு அழகாக ஒரு மாளிகையை அமைக்கும் வித்தை இவருக்கு இருப்பதாக சொல்கிறார்கள். இவர் அதிகம் பேசவில்லை . அறிவுபூர்வமாகவே பேசுகிறார்.
PTR அவர்களின் குடும்ப பாரம்பரியத்துக்கும் அவரின் கல்வி தகுதிக்கும் அரசியல் பொருளாதார நிர்வாக அனுபவத்திற்கும் சவுக்கடி போன்ற பதில்களுக்கும் இந்த சங்கிகள் அவரிடம் நேருக்கு நேராக நேர்மையான முறையில் விவாதிக்க முடியாது.அதனால் பின்புற வாசல் வழியா என்ன செய்யலாம்னு ஒன்றிய அரசு யோசிப்பதாகச் சொல்கிறார்கள்.