மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றாரா ? இல்லை தோற்கடிக்கப் பட்டாரா ? வெற்றி பெற்றால் முதல் பெண் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளரிடம் எப்படித் தோற்றுப் போனார் ?
மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போது திமுகவின் துணை பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதி களமிறக்கப்பட்டார்.
சி.கே.சரஸ்வதி , வயது : 76 ( 1-3-1945 ) தந்தை : கனகாச்சல கவுண்டர் . தாய் : நஞ்சம்மாள் . கணவர் : எஸ்.எஸ்.சின்னுசாமி . மகள் : கருணாம்பிகை . மகன் : சிவ்குமார் . படிப்பு : எம்.பி.பி.எஸ் . , டி.சி.எச் . | தொழில் : மருத்துவர் . எஸ்.எஸ்.சி. மருத்துவ , கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு கல்வி , படிக்கப்பட மருத்துவ உதவிகளை செய்து வருகிறார் . ஜாதி : கொங்கு வேளாள கவுண்டர் . முகவரி : ஆனந்தம்பாளையம் , மொடக்குறிச்சி , ஈரோடு . கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் உள்ளார் .பாஜக சார்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடும் சி.கே . சரஸ்வதி, ஒரு புது வித தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார். முழங்கால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, இலவசமாக அந்த சிகிச்சையை வழங்குவதாக அவர் கூறியுள்ளார். பாஜக சார்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடும் சி.கே . சரஸ்வதி, ஒரு புது வித தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார். முழங்கால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, இலவசமாக அந்த சிகிச்சையை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
“தொகுதியில் பலர் முழங்கால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகளாக இருப்பதால் அவர்களால் விலையுயர்ந்த சிகிச்சையை பெற முடியவில்லை என்றும் நான் கேள்விப்பட்டேன். பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலுக்குப் பிறகு, இலவச சிகிச்சை மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சைக்காக எனது மருத்துவமனைக்கு வரலாம்” என்று டாக்டர் சரஸ்வதி கூறினார்.
76 வயதான இந்த பாசமிகு மருத்துவர் போட்டியிடும் மொடக்குறிச்சி அதிமுகவின் ஒரு கோட்டையாக இருந்து வருகிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக இப்போது இங்கு ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளாக இந்த தொகுதியை தக்க வைத்துள்ள அதிமுக (AIADMK), இம்முறை பாஜக-வுக்காக இத்தொகுதியை விட்டு கொடுத்துள்ளது.
முன்னாள் திமுக அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக சரஸ்வதி போட்டியிடுகிறார். பாஜக மற்றும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கைகளை குறிப்பிட்டுக் காட்டிய சரஸ்வதி, மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர பலவகையான நேர்த்தியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என புகழ்ந்தார்.
திறமையான கிராமப்புற இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் திறம்பட போட்டியிட பயிற்சி அளிக்கபடுவார்கள் என்று சரஸ்வதி கூறியுள்ளார். கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு வளாகங்களை அமைத்துத் தருவதாகவும், ஜல்லிக்கட்டு வீர்ரகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டை உறுதி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அனைத்து அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் கல்வியை அறிமுகப்படுத்துவது அவரது மற்ற வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜனதாவும் திமுகவும் நேருக்கு நேர் மோதும் தொகுதி என்பதாலேயே திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்ட மொடக்குறிச்சி தொகுதி, 2021 தேர்தலில் கவனம் ஈர்த்த தொகுதியாக இருந்தது.1967 முதல் இத்தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் இதுவரை திமுக 3முறையும், அதிமுக 7 முறையும், காங்கிரஸ் மற்றும் சம்யுக்தா சோசலிச கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1977 ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் திமுகவில் சேர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போது மாநில சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. பி. சிவசுப்ரமணியன் 77,067 வாக்குகளுடன் வெற்றிபெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி. சச்சிதானந்தம் 74,845 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இந்த முறை, மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போது திமுகவின் துணை பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதி, அமமுகவின் டி.தங்கராஜ், மக்கள் நீதி மய்யத்தின் ஆனந்தம் ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஜி. பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தொகுதிக்கு பாஜக வேட்பாளர் புதியவர். அதிமுக வாக்குகளை நம்பியே களமிறக்கப்பட்டார். ஆனால், தொகுதி கூட்டணி கட்சிக்குப் பறிபோன விரக்தியில், தேர்தலில் அதிமுகவினர் சரிவர ஒத்துழைப்பு பார்க்கவில்லை என்ற தகவல் திமுகவுக்கு சாதகமானதாக கருதப்பட்டது. மேலும் கட்சியில் சீனியர் என்பதாலும், தேர்தலுக்கான நெளிவு சுளிவுகளை நன்கறிந்தவர் என்பதாலும், சுப்புலட்சுமி ஜெகதீசனின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதியும் பரபரப்பாக உற்றுநோக்கப்பட்டது. தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், பா.ஜ.க சார்பில் டாக்டர் சரஸ்வதியும் அந்தத் தொகுதியில் பிரதான வேட்பாளர்களாகக் களம் கண்டனர்.இருவரும் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் சரஸ்வதி வெற்றி பெற்றார். `வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகராகும் வாய்ப்பு சுப்புலட்சுமிக்கு கிடைக்கப் போகிறது’ என்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில், தற்போதைய தேர்தல் தோல்வி குறித்து சுப்புலட்சுமியிடம் பேசினோம்.
“மொடக்குறிச்சி தொகுதி முழுக்கவே விவசாயிகள் நிறைந்த பகுதி. பாசன வசதிகள் இருப்பதால், இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் ஏராளமானோர் விவசாயக் கடன் வாங்கியிருந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பாக, `விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ எனத் தமிழக முதல்வர் அறிவித்தார். இதனால், விவசாய மக்கள் பலரும் பயனடைந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய வாக்காளர்கள் பெரும்பாலானோர் அ.தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த பா.ஜ.க-வுக்கு வாக்களித்துள்ளனர்.
எனவே, பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. அதேநேரம், ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் பெருவாரியான மக்கள் எனக்கும் வாக்களித்தனர். என்னுடைய வெற்றியைத் தடுக்க முன்கூட்டியே சில மோசடி வேலைகள் நடந்துள்ளன. என்னுடைய தொகுதியில் 2,600 தபால் வாக்குகள் பதிவாகின. அதில், 571 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதில், 350 வாக்குகள் எனக்குப் பதிவானவை.
தபால் வாக்களிக்கும் கவரில், உறுதிப்படிவம் (confirmation letter) ஒன்று இருக்கும். அதில் வாக்காளர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். அந்தப் படிவத்தில் குறிப்பிடப்படும் நான்கு இலக்க எண்ணும், வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு இலக்க எண்ணும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டு எண்களும் மாறுபட்டு இருந்தால் அந்தத் தபால் வாக்கு செல்லாது. பெரும்பாலும் இந்த எண்களை அதிகாரிகள்தான் குறிப்பிடுவார்கள். ஆளும் கட்சியுடன் சேர்ந்து, என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே சில அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரித்த சில அதிகாரிகள், வாக்குச்சீட்டில் இருக்கும் எண்ணை உறுதிப்படிவத்தில் எழுதாமல், மனம் போன போக்கில் மாறுபட்ட இலக்க எண்களாக எழுதியிருந்தனர். எனக்குப் பதிவாகியிருந்த 350 வாக்குகளில் இப்படி மாறுபட்ட எண்களை எழுதி, அவற்றையெல்லாம் செல்லாத வாக்குகளாக மாற்றிவிட்டனர். இதையெல்லாம் நேற்று கண்கூடாகப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
தபால் வாக்குகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். இது தொடர்பாக நீதி கேட்டு நீதிமன்றம் செல்லப் போகிறோம். தற்போதைய காலச்சூழலில் உடனடியாக சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது. எனவே, என்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேநேரம், சில அதிகாரிகளின் இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்கக்கூடாது. இதுபோன்று தவறு செய்யும் அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் வகையில் புதிய திருத்தங்கள் உருவாக நிச்சயம் போராடுவேன்” என்றவர்.
அங்கு மொடக்குறிச்சி, கொடுமுடி என இரண்டு ஒன்றியங்கள் இருந்தன. இதில் மிகப்பெரிய ஒன்றியமாக மொடக்குறிச்சி உள்ளது. இங்கிருந்த 2 நிர்வாகிகளும் சுப்புலட்சுமியிடம் முகம் கொடுத்துப் பேசியதில்லை. இவர்கள் இரண்டு பேரையும் நீக்குவதற்கு தி.மு.க தலைமையிடம் சுப்புலட்சுமி கடுமையாகப் போராடியதால், இந்த இரண்டு ஒன்றியங்களையும் ஐந்து ஒன்றியங்களாக மாற்றினர். ஆனால், அந்த ஐந்து பேரும் சுப்புலட்சுமிக்கு எதிரானவர்கள் என்பதுதான் கொடுமை. கடந்த 20 ஆண்டுகளாக தொகுதிக்குள் நடந்த எந்த நடவடிக்கையிலும் சுப்புலட்சுமியும் பங்கேற்றதில்லை. இந்தமுறை சீட் வாங்கியது குறித்துப் பேசும்போதும், `தளபதி நிற்கச் சொன்னார். நிற்கிறேன்’ என்றார். ஒன்றிய நிர்வாகிகளோடு 15 ஆண்டுகாலமாக இருந்த பகையும் சுப்புலட்சுமியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. இதுகுறித்து தலைமையிடம் அவர் புகார் தெரிவித்திருக்கிறார்” என்கிறார்.