16
Jun
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார். மக்களவைத் தேர்தலிலும் இதுபோன்ற மெகா கூட்டணியை அமைக்க அவரால் முடியும் என்கிறார்கள். பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும். இதுபோன்ற கூட்டணியை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. ஏராளமான பிரதமர் முகங்கள் இருக்கும் இந்திய அரசியல் களத்தில் முக்கியமான நபராக திகழ்பவர் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர். அதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்காகவும் பணியாற்றி முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார். அண்மையில் பாஜகவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அவர் அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். பாஜக மீதான…
