நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.!

ஒன்றிய அரசின் தடுப்பூசிக் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி , நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல்ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக ஒன்றிய அரசே நடத்தும்னு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட  அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இதில் ஒன்றிய அரசு தனது தடுப்பூசி கொள்முதலின் முழு விவரத்தையும் தேதி வாரியாக பிரமாண பத்திரமாக 2 வாரங்களில் சமர்ப்பிக்கணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தது.அதோடு ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை நியாயமற்றது, பகுத்தறிவற்றது. 18 லிருந்து 44 வயது வரையுள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி அளிக்காத ஒன்றிய  அரசின் கொள்கை தவறானது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி தடுப்பூசி தேவையோ அதேபோல் 18-44 வயது கொண்டவர்களுக்கும் தடுப்பூசி இலவசமாக தேவை. 18-44 வயது கொண்டவர்களுக்கு தடுப்பூசி போட கட்டணம் வசூலிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் நியாயமற்றது, பகுத்தறிவற்றது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையா விமர்சனம் செய்திருந்தது.,ஒன்றிய  அரசின் தடுப்பூசி இலவசமாக அளிக்காத கொள்கை காரணமாக சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தனியார் மருத்துவமனைகளிலும், சில மாநிலங்கள்ல காசு கொடுத்து தடுப்பூசி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய  அரசு தனது தடுப்பூசி கொள்கையை மறுசீராய்வு செய்யணும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாக இந்த கொள்கை இருக்கு. நீதிமன்றம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது . ஒன்றிய  அரசு தனது தடுப்பூசி கொள்கை குறித்த புதிய பிராமண பத்திரத்தை தாக்கல் செய்யணும். ஒன்றிய  அரசின் தடுப்பூசி பாலிசி குறித்த அனைத்து விவரங்களையும், கோப்புகளையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கணும். தங்களின் தடுப்பூசி கொள்கையை ஒன்றிய  அரசு மறுசீராய்வு செய்யணும்ணு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. இரண்டு வாரங்களில் இந்த அனைத்து விவரங்களும் அடங்கிய பிரமாண பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மூலம் தாக்கல் செய்யப்படணும்ணு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.

உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு தனது தடுப்பூசி கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல் ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக ஒன்றிய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நிலையில , ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றி உள்ளது. இனிமேல் ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும்.  ஜூன் மாதம் முதல் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும். மாநிலங்கள் தங்களது நிதியிலிருந்து தடுப்பூசிக்கு செலவிட தேவையில்லை. தடுப்பூசி பற்றக்குறை நாடு முழுக்க விரைவில் தீர்ந்துவிடும்னு பிரதமர் மோடி அறிவிச்சிருக்காரு. பிரதமர் மோடி திடீர்னு மனசு மாற என்ன காரணம்னு பாத்தா அடுத்த வருஷம் உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்கள்ல தேர்தல் நடக்க இருக்கு. ஏற்கனவே உபியில தடுப்பூசி விவகாரத்தில யோகி ஆதித்யநாத் பேரு ரிப்பேராயிடுச்சி.இதே நிலைமை நீடிச்சா 5 மாநிலத்திலயும் ஜெயிக்கிறது கஷ்டம்னு அந்தந்த மாநில பிஜேபி தலைவர்கள் சொன்னதன் காரணமாத்தான் பிரதமர் மோடி இந்த அறிவிப்ப வெளியிட்டிருக்காரு.

தடுப்பூசி விவகாரத்தில் பல மாநில அரசுகள்  ஒன்றிய அரசே தடுப்பூசி வாங்கி தரணுங்கிற கோரிக்கைகளை வைச்சாங்க.. இது சம்பந்தமா கேரள முதல்வர் பினராயி விஜயன் என்ன பண்ணார்னா  பாஜக ஆளாத 11 மாநிலங்களுக்கு கடிதம் எழுதினாரு. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.11 மாநில அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கணும். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கி அதை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக, முறையாக பங்கீடு செய்யணும்னு முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைச்சார். இதற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்திச்சு.. முக்கியமாக எந்த மாநிலத்துக்கும் வெளிநாடு டெண்டர் கிடைக்காத நிலையில் இதே கோரிக்கையை மாநில அரசுகள் வச்சாங்க., இப்போ மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்றுள்ளது..

கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய திமுக அரசு உலகளாவிய டெண்டர் கோரிய நடவடிக்கையை அதிரடி சரவெடி , சிக்சர்னு நம்ம ஊரு ஊடகங்கள் கூவிகிட்டிருந்த நிலையில அது இப்போ புஸ்வாணமா போயிடுச்சி.  கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது, முதல்ல 60 வயசுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது பிறகு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுட்டு வந்தாங்க. . இந்த நிலையில மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது . இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்துறதுக்காக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக குடுத்தாங்க. ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை மாநிலங்கள் , சுயமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக்கணும்னு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.

இதன்படி மாநிலங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசியும் சீரம் நிறுவனத்திடமிருந்து கோவிஷீல்டு தடுப்பூசியையும் வாங்கிட்டு வர்றாங்க. . தமிழக அரசும் இதே பாணியில் தான் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி வந்தது . ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுனால  மாநிலங்கள் கேட்கும் அளவிற்கு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களால் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து கொடுக்க முடியலை . இந்த நிலையில் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக அரசு , தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு உலகளாவிய டெண்டர் கோரியது .
இதனை திமுக ஆதரவு ஊடகங்கள் வழக்கம்போல் அதிரடி , சரவெடி என கொண்டாடித் தீர்த்தன . ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னன்னா இந்தியாவில் இதுவரை மூன்றே மூன்று கொரோனா தடுப்பூசிக்கு மட்டுமே ஒன்றிய அரசு அனுமதி கொடுத்திருக்கு . அந்த வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை இந்திய தயாரிப்புகள் . இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கெடச்சிருக்கு . அந்த வகையில் பார்த்தால் இந்த மூன்று தடுப்பூசிகளை மட்டுமே இந்தியாவில் மக்களுக்கு செலுத்த முடியும் . எனவே எந்த ஒரு மாநில அரசாக இருந்தாலும் இந்த மூன்று தடுப்பூசிகளை கொள்முதல் செய்தால் மட்டுமே மக்களுக்கு செலுத்த முடியும் .
ஆனால் திமுக அரசு எந்த அடிப்படையில் கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் கோரியது என்பது இங்கு புரியாத புதிராகவே இருக்குது.இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாத அதைப் பத்தி முழுமையா விசாரிக்காம ரொம்ப ஓவரா திமுக ஆதரவு ஊடகங்கள் சவுண்டு வுட்டாங்க.டெண்டர் காலம் முடிவடைந்த நிலையில கூட எந்த ஒரு நிறுவனமும்  தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்க முன்வரலை . ஏன்னா உலக அளவில் பிரபலமாக உள்ள ஃபைசர் , மாடர்னா போன்ற நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு இதுவரை இந்தியாவில் அனுமதி கொடுக்கப்படலை. எனவே அந்த நிறுவனங்களால் நிச்சயம் டெண்டரில் பங்கேற்க முடியாது . அது மட்டுமல்ல ஃபைசர் . மாடர்னா நிறுவனங்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுக்க தயாராக இருக்கு.

ஆனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கேட்க கூடாதுன்னு நிபந்தனைகளை விதித்து அந்த 2 நிறுவனங்களும் தடுப்பூசியை தர மறுத்து வருது . அதே சமயம் டெல்லி மற்றும் பஞ்சாப் நிறுவனங்கள் நேரடியாக ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி கொள்முதல் குறித்து பேசினாங்க. . ஆனால் அந்த இரண்டு நிறுவனங்களும் தாங்கள் நேரடியாக ஒன்றிய அரசுடன் தான் டீலிங் பேசுவோம்ணு கைவிரித்துவிட்டன. நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் உலகளாவிய டெண்டரில் எந்த நிறுவனங்களும் பங்கேற்காத சோகம் ஏற்பட்டுள்ளது . மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொடுக்கவே போதுமான நிறுவனங்கள் இல்லாத நிலையில் தமிழக அரசு அதாவது திமுக அரசு உலகளாவிய டெண்டர் கோரியது  எப்படி ? மக்களுக்கே வெளிச்சம் ?

இலவச தடுப்பூசி.. விஷயத்தில தனியாருக்கும் கட்டுப்பாடு.. விதிச்சிருக்கு ஒன்றிய அரசு.உச்ச நீதிமன்றமும், மாநில அரசுகளும் கடுமையாக விமர்சனங்களை வைத்த நிலையில ஒன்றியஅரசு தனது தடுப்பூசி கொள்கையை மாற்றியுள்ளது. இதனால ஒன்றிய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்க போகுது.இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருது. கோவாக்சின், கோவிட்ஷீல்ட் என்று இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டாலும் ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையால் மாநில அரசுகள் கடுமையாக திணறிட்டு இருந்தாங்க.

ஒன்றிய அரசு போதுமான தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய தவறுனதுனால , மக்களுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போட முடியலை. மாநில அரசுகளும் சர்வதேச டெண்டர் விட்டு, அதனால் எதுவும் பலன் கிடைக்காம கஷ்டப்பட்டு கிட்டு இருந்தாங்க..இந்த நிலையில்தான் ஒன்றிய அரசு தனது தடுப்பூசி கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாகவும், இனிமேல் ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக ஒன்றிய அரசே நடத்தும்னு சொல்லியிருக்காரு. அதாவது இலவச தடுப்பூசி 18+ வயசுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் போடப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி 75% மத்திய அரசு மூலம் வாங்கப்பட்டு மாநில அரசுகளுக்கு தரப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்  25% தடுப்பூசிகளை தனியார் வாங்கிக்கலாம். ஜூன் 21 முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும்.

மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்வதன் மூலம் 100% பணிகளை ஒன்றிய அரசே மேற்கொள்ளும்.அதோடு இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தனியார் மருத்துவமனைகள் தங்கள் தடுப்பூசி விற்பனையில் 150 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும். அதாவது தடுப்பூசி விலையை விட கூடுதலாக 150 ரூபாய் வரை மட்டுமே சர்வீஸ் சார்ஜ் வாங்கணும் . ஒன்றிய அரசின் இந்த திட்டம் காரணமாக மக்கள் பல்வேறு பயன்களை அடைவார்கள்.. 18+ வயது கொண்ட எல்லோருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். சர்வதேச தடுப்பூசி டெண்டரை ஒன்றிய அரசு கோரும், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொண்டு வருவது எளிமையாகும். அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகள் வேகமாக இந்தியா வர வாய்ப்புள்ளது. மாநில அரசுகளுக்கு கூடுதல் விலைக்கு தடுப்பூசி கொடுத்த சீரம், பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள், குறைந்த விலைக்கு ஒன்றிய அரசுக்கு கொடுக்கும் வாய்ப்புள்ளது. சர்வீஸ் சார்ஜ் கட்டுப்பாட்டால் தனியார் மருத்துவமனையில் கூடுதல் விலைக்கு தடுப்பூசி விற்க முடியாது.ஆனால் அதே சமயம் மாநிலங்களுக்கு எப்படி தடுப்பூசி பிரித்து கொடுக்கப்படும் என்ற கேள்வியும் இப்போ வருது. பாகுபாடு இன்றி தடுப்பூசி தரப்படுமா? பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படுமாங்கிற கேள்வியும் வருது.

தற்போதைய கொரோனா நெருக்கடிய தமிழக அரசு சமாளிச்சிட்டாலும் செங்கல்பட்டு HLL பயோடெக் நிறுவனத்த ஒன்றிய அரசுகிட்டேருந்து வாங்குவாங்களா ? இல்ல ஒன்றிய அரசே நடத்துமா ? ஏன்னா இன்னமும் ஒன்றிய அரசு பதிலே சொல்லல ? ஆனா பாரத் பயோ டெக் நிறுவனத்துகிட்ட HLL ல போய்ப் பாத்துட்டு வந்து ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கு ஒன்றிய அரசு ? இந்த பிரச்சினைல ஒன்றிய அரசு ஜெயிக்கப் போகுதா இல்ல நம்ம தமிழக அரசு ஜெயிக்கப் போகுதாங்கிற தமிழக மக்கள் ஆர்வத்தோட எதிர்பாத்திட்டிருக்கங்க ?