அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்படத்தான் போகுது!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியையே சந்திக்கும் என்பதே சசிகலாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. திமுக குறைந்த பட்சம் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றும் அவர் கணக்கு போட்டு வைத்திருந்தாராம் . தேர்தலில் எடப்பாடி பழனிசாமி , ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் தோற்பார்கள் என்றும் சசிகலா நினைத்துக் கொண்டிருந்தார் . அதிமுக அமைச்சர்களை தோற்கடிக்கணும்னு திமுக திட்டம் போட்டு செயல்படுத்தியதை சசிகலா ரகசியமாகத் தெரிந்து கொண்டார். அப்படி ஒரு தேர்தல் முடிவு வந்தால் அது தனது அரசியல் ரீ எண்ட்ரிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதுதான் சசிகலாவின் கணக்காக இருந்தது. அதாவது தேர்தலில் படு தோல்வி அடைந்தால் இயல்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் பார்வை தன் பக்கம் திரும்பும் என்பது சசிகலாவின் எதிர்பார்ப்பு .
ஆனால் தேர்தல் முடிவுகள் சசிகலாவின் எண்ணத்திற்கு மாறாக நடந்து விட்டது. கணிசமான 66 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று சசிகலாவை முதுகில் குத்திய எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக ஆகிவிட்டார். . அதிலும் கோவை , சேலம் மாவட்டங்களில் திமுகவால் ஒரு தொகுதியை தவிர வேறு எதிலும் வெல்ல முடியவில்லை இதே போல் ஈரோடு , திருப்பூர் , நாமக்கல் மாவட்டங்களிலும் அதிமுக வெற்றிக் கொடியை நாட்டியது . மதுரை , நெல்லையிலும் கூட அதிமுக வேட்பாளர்கள் வென்றனர் . சென்னை , திருவள்ளூர் தவிர்த்து வட மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவிற்கு எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர் இதனால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தையோ அவரது அரசியல் நடவடிக்கைகளையோ அதிமுகவில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உருவாகி விட்டது . மேலும் கட்சியை எடப்பாடி – ஓபிஎஸ் தவறாக வழி நடத்திவிட்டதாக கூறுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லாத நிலை உருவாகி உள்ளது . பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும் கௌவுரவமான தொகுதிகளில் வெற்றி என்பது அதிமுகவில் தலைமைக்கு பஞ்சம் இல்லை என்பதையே காட்டுகிறது . எடப்பாடி பழனிச்சாமியெல்லாம்ஒரு தலைவரா என்று கேட்ட கட்சிக்காரர்கள் முதல் மாற்றுக்கட்சியினர் வரைக்கும் வாயடைச்சுப் போயிருக்காங்க.
கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை எடப்பாடி மீண்டும் நிரூபித்து விட்டார் . அந்த பிம்பத்தை உடைக்கத்தான் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை எறக்கி விட்ருக்கார். இப்படியெல்லாம் நடக்கும்னு சசிகலா கொஞ்சம் கூட எதிர் பாக்கலை. இதனால் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் ரீ எண்ட்ரி எளிமையாக இருக்கும்னு கணக்கு போட்ட சசிகலாவிற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது . அதே போல் சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவின் பினாமியாக களம் இறங்கிய தினகரன் படு தோல்வியைத் தான் சந்தித்தார் . தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தாலும் தன்னோட பேச்சைக் கேக்காம தினகரன் கட்சி போட்டியிட்டதில் சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை. தினகரன் இப்ப பழைய தினகரனா இல்லை என்பதை சசிகலா தெரிந்து வைத்திருக்கிறார்.
யாரையும் மதிப்பதில்லை.
இரண்டாம் கட்டத் தலைவர்களின் ஆலோசனையைக் கேட்பதேயில்லை.ஆர்.கே.நகர்ல ஜெயிச்ச ஒடனே மண்டைக் கர்வம் அதிகமாகிவிட்டது.தினகை நம்பிப் பிரயோஜனமில்லை என்பதை சசிகலா நன்கு உணர்ந்திருக்கிறார். அவரது கட்சியும் பல்வேறு இடங்களில் டெபாசிட்டை இழந்தது . இனி தினகரனின் எதிர்காலமும் அமமுகவின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்.
தினகரனின் தோல்வி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் சசிகலாவை மாத்தி யோசிக்க வைத்ததோடு அரசியல் ரீ எண்ட்ரிக்கு வேறு திட்டங்களை வகுக்க வைத்துள்ளது . இதனால் தான் அவர் தற்போது நிதானமாக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். முதலில் அதிமுகவின் டாப் லெவல் நிர்வாகிகளின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளவே அமமுக பிரமுகர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள் இது தவிர சென்னையில் சில முக்கிய சந்திப்புகளையும் சசிகலா நிகழ்த்தியுள்ளதாக சொல்கிறார்கள் தனது அரசியல் வருகையின் போது இந்த முறை தன்னுடன் யார் யார் எல்லாம் நிற்கப்போகிறார்கள் தன்னுடைய வலது கரமாக இந்த முறை யாரை முன்னிறுத்துவது என்பது போன்ற யோசனைகளை சசிகலா தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதலே சிந்திக்க ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார்கள்
தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அதிமுகவில் பெரிய அளவில் மாற்றங்களை செய்துவிட முடியாது என்பதையும் சசிகலா உணர்ந்துள்ளார் . அதே நேரம் ஓபிஎஸ் ஸால் எடப்பாடிக்கு எந்த பயனும் இல்லை என்பதையும் சசிகலா தெரிந்து வைத்துள்ளார் இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அதிமுகவில் தனது ரீ எண்ட்ரி குறித்து எடப்பாடியிடம் சமரசம் பேசுவது தான் சசிகலாவின் முதல் திட்டமாக இருக்கும் என்கிறார்கள் . ஆனால் இதனை எடப்பாடி எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது கூடிய சீக்கிரம் தெரிந்து விடும்.ஓபிஎஸ்ஸை முற்றிலுமாக ஓரங்கட்டுவதற்கு.
சசிகலாவைச் சேர்த்துக் கொள்ளலாமா ? அல்லது நமக்கு கொடச்சல் கொடுக்கிறதுக்காகவே ஓபிஎஸ் சசிகலாவைச் சந்திப்பாரா ? அப்படி சந்தித்தால் அவரை கட்சியை விட்டு நீக்குவதற்கு கட்சி சட்ட திட்டங்களில் வழி இருக்கான்னு ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கிறாராம்.எப்படியோ கூடிய சீக்கிரம் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்படத்தான் போகுது! இதை திமுக வேடிக்கை பார்க்குமா ? அல்லது நமக்கெதுக்கு வேண்டாத வம்புன்னு ஒதுங்கிக் கொள்ளுமா ? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் !!