அதிமுகவுக்கு இது சோதனையான காலகட்டம் ?

அதிமுகவுக்கு இது சோதனையான காலகட்டம்னு நெனைக்கிறேன்.அடுத்தடுத்த பிரச்சனைகளில் அதிமுக மேலிடம் சிக்கி வருது.. கொடநாடு விவகாரம், புளியந்தோப்பு கட்டிடம்னு இரண்டுமுக்கிய விவகாரங்களை திமுக கையில் எடுத்திருக்குது.. இதில் இருந்து அதிமுக எப்படி மீண்டு வரும் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பியிருக்கு.. ஆட்சி அமைத்து 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் திமுக, தன்னுடைய அதிரடியை காட்ட துவங்கியாச்சு.. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைனு அதிமுக கண்டனம் தெரிவிச்சுது.ஆனா திமுக அசரலை.எல்லாம் சட்டப்படி தான் நடக்கும்னு ஸ்டாலின் உறுதியா சொல்லிட்டாரு. ஆனால், அதிமுக மேலிடத்தையே அசைத்து பார்க்கும்படியான ஒரு அஸ்திரத்தை திமுக கையிலெடுத்திருக்கு அதுதான், கொட நாடு விவகாரத்தை தூசி தட்டியிருக்குது திமுக அரசு.. கொடநாடு விவகாரம் சூடுபுடிக்க ஆரம்பிச்சதுமே உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன ரகசியமா சந்திச்சு எடப்பாடிக்கு எதிரான எவிடென்ஸ் எல்லாத்தையும் வாங்கிகிட்டாராம்.எடப்பாடிய காலி பண்ண இதுதான் நேரம்னு டிடிவி எவிடென்ஸ் எல்லாத்தையும் குடுத்திட்டு அசெம்பிளியிலேயே பேசிருங்கன்னும் சொல்லிஅனுப்புனாராம்.எந்த திமுக ஜெயலலிதா சசிகலா ஜெயிலுக்கு போகக் காரணமா இருந்ததோ அதே திமுகவோட சேர்ந்து எடப்பாடிய காலி பண்றதுக்கு உள்ளடி வேலை பாத்திருக்காராம் டிடிவி தினகரன்.வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்குன்னா அதிகபட்ச ம் மூணு வருஷம் தண்டனை கெடைக்கும்.ஆனா கொலைக் கேசுன்னா ஆயுள்தண்டனையே கெடைக்குமே அதனாலத்தான் எடப்பாடி பதட்டத்தில இருக்காரு.முதலமைச்சர் பதவியக்குடுத்த சசிகலாவுக்கும் தினகரனுக்கும் துரோகம் பண்ணுனாரு. இப்போ டிடிவியோட நேரம் பதிலுக்கு எடப்பாடிக்கு ஆப்பு வைச்சிட்டாரு. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்ததாக முக்கிய குற்றவாளியான சயன் தெரிவிச்சதுமே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிகிச்சு.  இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டாலும், ஓபிஎஸ், வேலுமணி என 5 முக்கிய மாஜிக்களுக்கு சிக்கல்னும் சொல்றாங்க. ஆனால், அதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தை பெரிதாக்கிட்டாரு. நேற்று முன்தினம் சட்டசபையை புறக்கச்சாரு.. தர்ணாவிலும் அதிமுகவினருடன் ஈடுபட்டாரு.. திமுகவை கண்டிச்சு காரசாரமாக பேட்டியும் தந்தாரு… அப்போதும் கலக்கம் தீராமல், அவசர அவசரமாக ஆளுநரைப் போய் முக்கிய தலைவர்கள் சந்திச்சாங்க… திமுக எங்களை பழிவாங்குதுன்னு புகாரும் தந்தாங்க.. எப்பவுமே சிரிச்சுக்கிட்டே பேசும் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரம் கிளம்பியதில் இருந்து இப்போது வரைக்கும் அப்செட்டில் இருப்பதாகவே தெரியுது. இந்த அதிர்ச்சி அடங்குறதுக்குள்ள நேற்றைய தினம் ஓபிஎஸ்ஸுக்கு செக் வைச்சிட்டாங்க… நேற்றைய தினம் இந்த கட்டிடத்திற்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசனும், சேகர்பாபுவும் நேரில் சென்றபோதே ஓரளவு விஷயம் புரிந்துபோச்சி செய்தியாளர்களை சந்திச்ச அவங்க இவ்விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவங்க மேல நடவடிக்கை எடுக்கப்படும்னு கோரஸா சொன்னாங்க அதுக்கேத்த மாதிரி புளியந்தோப்பு கட்டிட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க ணும்னு திமுக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் சொல்லியிருப்பது மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கி இருக்குது. கொடநாடு விவகாரத்தை பொறுத்தவரை, ஸ்டாலினுக்கு ஹைகோர்ட் கடிவாளம் போட்டாகிவிட்டது என்றுதான் அதிமுக மேலிடம் நினைத்தது.. ஆனால் திமுக அரசோ, இரட்டிப்பு வேகத்தோடு இந்த வழக்கின் விசாரணையை தொடங்கும்னு எடப்பாடி பழனிசாமி கொஞ்சமும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.. எடப்பாடி செஞ்ச ஒரே தப்பு இந்த கொடநாடு வழக்கை அவரு முதலமைச்சரா இருக்கும் போதே முடிச்சிருக்கணும்.அப்படி செய்யாம விட்டதோட விளைவை இப்ப சந்திக்கிறாரு. தங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதிமுக தலைமையிடம் சொல்லலாம்.. ஆனால், தலமைக்கே பிரச்சனையா இருக்கேன்னு நெனைச்சாரோ என்னவோ, ராஜேந்திரபாலாஜி ஸ்டிரைட்டாக சுப்ரீம்கோர்ட்டுக்கே போய்ட்டாரு. இவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்குது..
இந்த வழக்கை விதிமுறைகளை பின்பற்றாம சென்னை ஹைகோர்ட் விசாரிக்குதுன்னு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செஞ்சிருக்காரு. வருமானத்திற்கு அதிகமா ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக போடப்பட்ட வழக்கு அது.. பால்வள துறையில் முறைகேடு செஞ்சிருந்தாலும், இந்த வழக்கில்தான் ராஜேந்திர பாலாஜி சிக்க போறார்னு  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது, திமுக அரசு மீதான பயத்தையே வெளிப்படுத்தியிருக்குது.. எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் நம்பிக்கையாக இருந்தார்..என்ன நம்பிக்கைன்னா அதிமுகவில் மத்தவங்க சிக்குவாங்களே தவிர, தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயாதுன்னு நெனைச்சிருந்தாரு.. அதனால்தான், பீதியில் இருந்த மாஜிக்களுக்கே தைரியம் சொல்லிகிட்டிருந்தாரு.. இப்போ, ஸ்டாலின் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தலையில் கைவைச்சிட்டாரு. இது இயற்கையா நடந்ததா? அரசியலா என்பது உறுதியாக தெரியாது… ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் சிக்கலில் சிக்குனதுனால, அவங்ககிட்ட ஒருவித பதற்றத்தை காண முடியுது… நேற்று முன்தினம்  பேரவை புறக்கணிப்பு, தர்ணால ஆரம்பிச்சி ஆளுநர் சந்திப்பு வரை அதைத்தான் வெளிச்சம் போட்டு காட்டுது… இதில், தனியார் தொலைக்காட்சிகள் செய்தியால் தனியா சிக்கிக்கிட்ட ஓபிஎஸ் என்ன செய்யப்போறார்ங்கிறது  அனைவரது கேள்வியா இருக்குது… இதில் இன்னொரு தகவலும் கசிஞ்சி வருது.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடக்கப்போகும் விளைவுகளை உணர்ந்துதான், டெல்லியின் பாதுகாப்பை கேட்டு, அதிமுக மேலிடம் தூது போனதாகவும் சொல்லப்படுது.. ஆனால் சில அமைச்சர்களின் ஊழல், சொத்துக்குவிப்புக்கு பாஜக உதவியாக இருப்பதாக ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் இருக்குது.. அதோட வேலுமணி ரெய்டு விவகாரத்திலும் சப்போர்ட் செய்து தன்னுடைய எதிர்ப்பை காட்டியது.. இந்த கோபமும் மக்களிடம் இருக்கிறதை பாஜக மேலிடம் நல்லாவே தெரிஞ்சி வைச்சிருக்குது.. அதனால்தான், அதிமுக மேலிட பிரச்சனைகள் தொடர்பாக யாரும் உதவ கூடாதுன்னு பாஜக மேலிடம் கைவிட்டுவிட்டதாக தெரியுது… இப்போ பாஜகவும் கைவிட்ட நிலையில் அதிமுக என்ன செய்ய போகுது? ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் தங்களை எப்படி குற்றமற்றவர்கள்னு நிரூபிக்கப் போறாங்க? திமுக அடுத்து என்ன செய்யும்? என்பதெல்லாம் அந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் தான் தெரியும்.அதுவரைக்கும் நாம வேடிக்கை தான் பார்க்க முடியும்.