12
Aug
1996ல்கூறை வீட்டில் குடியிருந்த எஸ்.பி.வேலுமணியின் இன்றைய நிலையப் பாத்தீங்களா..! புகழ், பணம் சம்பாதிக்க வேண்டும்னா சினிமா அல்லது அரசியல் இரண்டு மட்டும் தான். சினிமா கைவிட்டுவிட்டது. அடுத்து அரசியல்தான் என முடிவுக்கு வந்தவர் அதிமுக ஆதரவாளராக மாறினார். சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி... இன்று செய்திகளில் பரபரப்பாக பேசப்படும் பெயர் எஸ்.பி.வேலுமணி. 5 அக்டோபர் 1969 ல், குனியாமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தில் பிறந்தவர். அப்பா பழனிசாமி சாதாரண மில் தொழிலாளி. அதே நேரத்தில் குனியமுத்தூர் நகராட்சி கவுன்சிலராகவும் வெற்றி பெற்றவர். மயிலாத்தாள் சத்துணவு அமைப்பாளர். எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசன். தம்பி செந்தில்குமார். சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் எம்.ஏ.எம்.ஃபில் படித்து முடித்தவுடன் சினிமாவில் நுழைந்து பெரிய நட்சத்திரம் ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வண்டியேறினார். சென்னையில் தெருத்தெருவாக அலைந்து சினிமா வாய்ப்புத் தேடினார். சில படங்களில் துணை நடிகராகவும் தலைகாட்டியிருக்கிறார். பெரிய பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஏங்கினார். ஆனால் துக்கடா…
