ராஜேந்திர பாலாஜியைக் கைவிட்ட பாஜக ? காய் நகர்த்தும் விஜிலென்ஸ்..! ராஜேந்திர பாலாஜி அடுத்த டார்கெட் !

ராஜேந்திர பாலாஜியைக் கைவிட்ட பாஜக ? காய் நகர்த்தும் விஜிலென்ஸ்..! ராஜேந்திர பாலாஜி அடுத்த டார்கெட் !

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிமுக கட்சியில் இருந்து கொண்டு பாஜவுக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து பேசிய அமைச்சர்களில் முதலிடத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தாரு .அதிமுக ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சொத்து குவிப்புக்கான முகாந்திரம் எதுவும் இல்லைன்னு அப்போ இருந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் 2 நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு காரணமா மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததுடன் வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு  புகாரில் விடுபட்ட ஆவணங்களைத் திரட்டி வருவதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு  தொடர்ந்தாரு. அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியிருக்கிறாருன்னும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும்னு மனுவுல குறிப்பிட்டிருக்காரு. வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது,  லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லைன்னும் இதனால் அவர் மேல லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லைனு, அதனால் விசாரணையை தொடர வேண்டியதில்லைன்னு சொல்லி, வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாக சொல்லப்பட்டிருந்தது. அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்  என்ன சொன்ன்னார்னா,  ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு  அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது  வருமானம்  உள்ளதுன்னு கோர்ட்ல சொன்னாரு. இதுனால தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த  நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லைன்னு சொல்லி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது  நீதிபதியாக  எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணை தள்ளிவைக்க  வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு  புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை நடத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையும் துவங்கியுள்ளது. இதனால், பயந்துபோன ராஜேந்திர பாலாஜி  அதிமுக தலைமை என்னை எந்த விதத்திலும் காப்பாற்றும்  என்று தெரியவில்லை. இவர்களை நம்பி பிரச்னையில் சிக்குவதைவிட பேசாமல் பாஜகவில் இணைந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியானது.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வார் என்று விருதுநகரில் ஸ்டாலின் பேச, தாங்கள் நினைத்தால் தற்போதே ஸ்டாலின் குடும்பத்தையே புழல் சிறையில் அடைக்க முடியும்னு ராஜேந்திர பாலாஜி கவுண்டர் டயலாக் விட்டார். அதுமட்டுமில்லாம ஒண்டிக்கு ஒண்டி வர்றியான்னு ஸ்டாலினுக்கு சவால் விட்டாரு ராஜேந்திர பாலாஜி. அப்போது முதல் ராஜேந்திர பாலாஜியை பெயர் சொல்லாமல் கோமாளி என்று அழைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார் ஸ்டாலின்.

திமுக அரசின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லி சென்று சில முக்கிய நபர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லைன்னு சொல்றாங்க..

கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதிமுகவின் இரண்டு அமைச்சர்களைத்தான் மிகுந்த கோபத்துடன் விமர்சித்து வந்தார். அவர்களில் ஒருவர் தான் ராஜேந்திர பாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்த உடன் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வார் என்று விருதுநகரில் ஸ்டாலின் பேச, தாங்கள் நினைத்தால் தற்போதே ஸ்டாலின் குடும்பத்தையே புழல் சிறையில் அடைக்க முடியும் என்று ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்தார். அத்துடன் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார் ராஜேந்திர பாலாஜி. அப்போது முதல் ராஜேந்திர பாலாஜியை பெயர் சொல்லாமல் கோமாளி என்று அழைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார் ஸ்டாலின்.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த  சில நாட்களிலேயே ஸ்டாலினை பாராட்டி பேட்டி கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி. கூடவே என்ன சொன்னார் னா நான் இப்ப பக்குவப்பட்டுட்டேன் இனி அதிரடி அரசியல் செய்யப்போவதில்லை என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டார். இதன் மூலம் தன் மீதான ஆளும் அரசின் கோபம் குறையும் என்று ராஜேந்திர பாலாஜி எதிர்பார்த்தார். ஆனால் ஆவின் நிறுவனத்தில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்ற முறைகேடுகளை அதிகாரிகள் தோண்டி எடுத்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக முக்கிய அதிகாரிகள் பலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஆவினில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தான் ராஜேந்திர பாலாஜி டெல்லி புறப்பட்டுச் சென்றார். வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போதைக்கு ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த நாளே அந்த தகவலை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார்.

ஆனாலும் கூட தற்போதும் டெல்லியிலேயே ராஜேந்திர பாலாஜி முகாமிட்டுள்ளார். இதற்கிடையே மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்திய நிலையில் பாஜக முக்கிய பிரமுகர்கள் சிலரையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். அது கட்சியில் சேர இல்லை என்றாலும் கூட தனக்கு பாதுகாப்பாக இருக்க உதவுமாறு சில கோரிக்கைகளை ராஜேந்திர பாலாஜி முன் வைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் பாஜக தரப்பில் இருந்து சாதகமான எந்த சிக்னலும் ராஜேந்திர பாலாஜிக்கு கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனிடையே, எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணியை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பைல்களை லஞ்ச ஒழிப்புத்துறை தூசி தட்டியுள்ளதாக சொல்கிறார்கள்.

விஜயபாஸ்கர், வேலுமணி பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் தப்பிய நிலையில் ராஜேந்திர பாலாஜியை எப்படியும் லாக் செய்ய வேண்டும் என்கிற மும்முரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வருகிறது.

Related posts:

அமைச்சர்கள் தங்கமணி-எஸ்.பி.வேலுமணி மோதல்; இ.பி.எஸ்.ஸுக்கு இடியாப்பச் சிக்கல்…
கனிமொழிக்கு தரப்படும் முக்கியமான டாஸ்க்.. திமுக பிளான்?
திமுக+தேமுதிக+பாமக+நாம்தமிழர்?..கூட்டணிக்கான அச்சாரமா?
"லூஸ்-டாக் வேண்டாம்".பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?'
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். !
பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி தமிழகத்திற்கு வர உள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் ?