ஸ்டாலினுக்கு வந்த மேலிட போன்.. வேற வழியேயில்லை.. பவரை கையில் எடுத்த ஆளுமை.. பரபரக்கும் டெல்லி
டெல்லி: சோனியா காந்தி மிக முக்கியமான அதிரடி பிளான் ஒன்றை கையில் வைத்திருக்கிறாராம்.. அதை வைத்தே இனி டெல்லி அரசியல் மூவ் ஆகும் என்று தெரிகிறது.
அடுத்தடுத்து மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க போகிறது.. முக்கியமாக எம்பி தேர்தலை நோக்கி தேசிய அரசியல் நகர்ந்து வருகிறது..
கடந்த மாதம், பிரசாந்த் கிஷோரும், ராகுல்காந்தியும் சந்தித்தனர்.. பிறகு பிரசாந்த் கிஷோரும் சரத்பவாரும் சந்தித்தனர்.. மம்தாவும் சோனியாவும் சந்தித்தனர்..
மம்தா
அதாவது எதிர்க்கட்சிகள் ஒன்றுகூட பேசி வருகின்றன.. முக்கியமாக, எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையில் மம்தாவே இறங்கி உள்ளார்.. இப்படி ஒரு முன்னெடுப்பை, முன்பு ஒருகாலத்தில் சந்திரபாபு நாயுடுதான் செய்தார்.. இந்த முறை மம்தா ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், இப்போது வேறு ஒரு தகவல் கசிந்து வருகிறது.. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒற்றை அணியாக கட்டமைக்க சோனியா முயற்சி செய்வதாக தெரிகிறது..
மூத்த தலைவர்கள்
காரணம், நடக்க போகும் உபி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற முடிவில் உள்ளது.. இதற்காக பிரியங்கா ஆயத்தமாகி வருகிறார்.. அதனால்தான், தேர்தல் பணிகளை மேற்கொள்ள சிறப்பு தேர்தல் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி இப்போதே அமைத்துவிட்டது.. 38 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இதில் மூத்த தலைவர்களும் முன்னாள் மத்திய அமைச்சர்களான சல்மான் குர்ஷித், ராஜீவ் சுக்லா, ஆர்பிஎன் சிங், அஜய் குமார் லல்லு போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.. இந்த தேர்தல் குழுவுக்கான ஒப்புதல் தலைவர் சோனியாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
போன்
மற்றொரு விஷயம், மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த கையோடு எதிர்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பை நடத்த சோனியா முடிவு செய்துள்ளாராம்.. குறிப்பாக, சரத் பவார், மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் சோனியா இதற்காகவே போனை போட்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது… ஆனால், இந்த சந்திப்புக்கான தேதி இன்னும் உறுதியாகவில்லையாம்..
பேரணி
தலைவர்களின் தேதி கிடைப்பதை பொறுத்து இந்த சந்திப்பு நடக்ககூடும் என்கிறார்கள்.. சுருக்கமாக சொல்லப்போனால், ராகுல் காந்தி இப்போதுதான் ஃபார்முக்கு வந்து கொண்டிருக்கிறார்.. அவரது தலைமையிலான நாடாளுமன்றத்தை நோக்கிய சைக்கிள் பேரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவை தொடர்ந்து அப்படியே எடுத்து சென்று, அதை வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒற்றை அணியாக கட்டமைக்க சோனியா முயற்சி செய்கிறார் என்கிறார்கள். மேற்கண்ட லிஸ்ட்டில் ஸ்டாலின் தவிர்க்க முடியாத தலைவர் என்பதையும் மறுப்பதற்கில்லை..
ஆட்சி
மிக குறுகிய காலத்தில் தேசிய அளவில் பிரபலமான முதல்வராகி உள்ளார்.. ஆட்சியில் நல்ல பெயர் எடுத்து வருகிறார்.. இந்த 2 மாசத்திலேயே 2 முறை டெல்லிக்கு சென்று தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார்.. திமுகவின் வளர்ச்சி பாஜகவை சற்று அசைத்து பார்த்தே வருகிறது.. அதனால்தான், ஸ்டாலினை “தொட” முடியாமல், அதிமுகவை காப்பாற்ற முடியாத சூழலில் பாஜக மேலிடம் தயங்கி வருகிறது..
நிர்ப்பந்தம்
அதனால் தேசிய அரசியலையும் ஸ்டாலினையும் பிரித்து பார்க்க முடியாத நிர்ப்பந்தமும், யதார்த்தமும் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கு எதிராக ஆளுக்கு ஒருபக்கம் நின்று குரல் கொடுப்பதைவிட, ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் அதற்கு வலிமை அதிகரிக்கும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்ததே ஸ்டாலின்தான்..
தேசிய அரசியல்
இதை வலியுறுத்தியே 13 மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்… அந்த வகையில் ஸ்டாலினை தவிர்த்துவிட்டு தேசிய அரசியல் நகராது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் சோனியா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறார் என்றால், பாஜக அளவுக்கு அதிகமாக வளர்ச்சி பெற்று விட்டதா? மக்களின் ஆதரவை முழுமையாக பெற்றுவிட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது..
பெரும்பான்மை
பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.. ஆட்சியிலும் பலமாக உள்ளது.. மதத்தின் அடிப்படையில், சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக விதைத்த வெறுப்பு அரசியல் இன்னமும் பெரும்பாலான மாநிலங்களில் நிலவி வருகிறது.. வெறும் அதிகார பலத்தை மட்டுமே வைத்துக்கொண்டுதான் புதுச்சேரி, கர்நாடகா என தென்மாநிலங்களிலும் கால் வைத்தும் வருகிறது.
பெகாசஸ் விவகாரத்துக்கு இன்றுவரை ஒரு பதிலும் இல்லை.. இப்படி பாஜகவின் சறுக்கல்கள் எத்தனையோ இருப்பினும், பாஜகவின் வலிமை வடமாநிலங்களில் பெருகி கொண்டே போகிறது என்ற மாற்று கருத்தையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்… பாஜக மண்ணை கவ்வ ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகளின் திட்டம் ஈடேறுமா? அல்லது பாஜக வழக்கம்போல் அசுர பலத்துடன் மேலேறி சென்று கொண்டே இருக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!