திமுக புள்ளிகளுக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்..!

திமுகவை வழிக்குக் கொண்டு வர தூசு தட்டப்படும் பழைய வழக்குகள்..! தயாராகும் சிபிஐ, வருமான வரித்துறை..! திமுக புள்ளிகளுக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்..!

 திமுகவின் முக்கிய கஜானாக்களில் ஒருத்தர்னு சொல்லப்படுற எம்பியை முதல்ல சிபிஐ குறிவைச்சிருக்கிறதா டெல்லியிலிருந்து தகவல்கள் வருது.. இதே போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேரடியாக மோதி வரும் திமுக வின் மிக முக்கிய எம்பியின் செயல்பாடுகளும் சிறப்பு கண்காணிப்பில் இருப்பதாகச் சொல்கிறாங்க.மேற்குவங்க பாணியில் ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல்களை கொடுக்க அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டி கையில் எடுக்கும் பணிகளில் டெல்லியில் மும்முரமாக நடைபெர்றதா டெல்லி பாஜக வட்டாரத்தில் பரபரப்பா பேசப்படுது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை மிக முக்கியமான அரசியல் கட்சியாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார் அமித் ஷா என்கிறார்கள். அதனால் தான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மாநிலத் தலைவராக்கப்பட்டுள்ளார். இதே போல் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கு மிக முக்கியமான இலாக்காக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவை தமிழகத்தில் வலுவாக்கும் அதே அளவிற்கு ஆளும் கட்சியான திமுகவை பலம் இழக்கச் செய்வதும் அவசியம்னு பாஜக மேலிடம் திட்டம் போடுது.மேற்கு வங்கத்தில் கடந்த 2016 தேர்தலின் போது வெகு சொற்பமான எம்எல்ஏக்களே பாஜகவிற்கு இருந்தாங்க. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளைச் ஜெயிச்சு பாஜக, அடுத்து அங்கு ஆட்சி அமைக்கிற அளவுக்கு வளர்ந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக எதிர்கட்சி அந்தஸ்தில் தான் அமர முடிஞ்சது. கடந்த முறையை காட்டிலும் பெருவாரியான இடங்களில் பாஜக எம்எல்ஏக்கள் ஜெயிச்சிருக்காங்க. இதற்கு காரணம் கடந்த ஐந்து வருடங்களாக மம்தா அரசுக்கு கொடுத்த நெருக்கடிகள் தான்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சர்களையே சிபிஐ கைது செய்தது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை வைத்து தான் மேற்கு வங்கத்தில் மம்தாவின் இமேஜை பாஜக டேமேஜ் செய்தது. இதற்கு வசதியாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நெருங்கிய உறவினர்கள் முதல் கட்சியின் சீனியர்கள் வரை பலரை நிதி நிறுவன மோசடி வழக்கில் சேர்த்தது சிபிஐ. இதே பாணியில் தமிழகத்திலும் ஏதேனும் விவகாரம் சிக்குமா என்று சிபிஐ காத்து இருப்பதாக சொல்லப்படுது.அதோடு ஏற்கனவே திமுக எம்பிக்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீது கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அப்படியே நிலுவையில் இருக்குதும். அந்த வகையில் அப்படிப்பட்ட வழக்குகளை இப்போ சிபிஐ அதிகாரிகள் தோண்டி எடுத்துக்கிட்டிருப்பதாக சொல்றாங்க.. தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிபிஐ தனது நடவடிக்கையை தொடங்கும்னு அடிச்சி சொல்றாங்க.. அதற்கு ஏற்ற வகையில் டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி சில முக்கியமான தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு பாஸ் பண்ணிட்டு வந்ததா சொல்றாங்க.

அதன் அடிப்படையில் தான் திமுகவின் கஜானாக்களில் ஒருவர் என்று கூறப்படும் எம்பியை முதலில் சிபிஐ குறிவைச்சிருக்கிறதா சொல்றாங்க. இதே போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேரடியாக மோதி வரும் திமுக வின் மிக முக்கிய எம்பியின் செயல்பாடுகளும் சிறப்பு கண்காணிப்பில் உள்ளதாக சொல்கிறார்கள்.என்ன தான் நேர்மையான ஆட்சி நடத்துனாலும் கடந்த கால பாவங்கள் காலைச்சுத்திகிட்டு தான் இருக்கும்.இதை வச்சுதான் திமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக திட்டமிடுது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை திமுக டேமேஜ் பண்ணி பிரச்சாரம் பண்ணுனத மோடியும் அமித்ஷாவும் மறக்கலை.திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் எங்க இருக்காங்கன்னு தேட வேண்டியதாய் போச்சு.அடுத்த அடிமை பாஜகவுக்கு கெடச்சிடுச்சு.

Related posts: