ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் பனிப்போர் !

 ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் பனிப்போர் நடந்துகிட்டிருக்கிறதாதைலாபுரம் வட்டாரங்கள் சொல்லுது.
அப்பாவுக்கும் புள்ளைக்கும் இடையே அண்மைக் காலமாக சம்பிரதாய ரீதியான பேச்சுக்கூட இல்லையாம்.
களத்திற்குப் போகச் சொல்லி ராமதாஸ் பலமுறை சொல்லியும் அன்புமணி கேக்கிற மாதிரி இல்லை என்கிறார்கள் ராமதாஸூக்கு நெருக்கமானவர்கள்.
சின்னவரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சுதந்திரமும் கொடுத்தால்தான் பெரிய ஐயா எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படும்னு சொல்றாங்க அன்புமணிக்கு நெருக்கமானவர்கள்.
“அன்புமணி முதல்வராகணும். இதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு கேளுங்கள்.’. மகனுக்காகப் பொதுவெளியில் டாக்டர் ராமதாஸ் இப்படி உருகினாலும், உள்ளுக்குள் இருவருக்கும் இடையில் மிகப் பெரிய பனிப்போரே நடந்துகிட்டிருப்பதாகத் தைலாபுரம் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.எண்பதுகளில் வன்னியர் சங்கமாக உருவெடுத்துப் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறிய இந்த இயக்கம் ஆரம்ப கட்டத்தில் வட மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது நிஜம். இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள், ஐந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் பாமகவிற்கு இனி கிடைக்காத வசந்த காலங்கள். ’ஆனால் பாமகவின் அரசியல் செல்வாக்கால் அந்தக் குடும்பத்திற்கு மட்டுமே பலன்’ என்பதை ஐயா பின்னால் அணி திரண்டவர்கள் கொஞ்ச காலத்திலேயே உணர ஆரம்பிக்க, கட்சிக்கு சனி திசை ஆரம்பமானது.

இப்போ குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்குன்னு சொல்றாங்க
அதாவது முன்னணித் தலைவர்கள் அடுத்தடுத்து விலகுனதுனால வெறுத்துப்போன ராமதாஸ், ‘குடும்பத்தினரை அரசியலுக்குக் கொண்டுவர மாட்டேன்’ என்கிற தனது வாக்குறுதியையும் மீறி அன்புமணியை அரசியலில் களமிறக்கினார். ஆரம்ப கட்டத்தில் எல்லாமே சரியாத்தான் போச்சு. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு தற்போது மிகப் பெரிய மோதலாக விசுவரூபம் எடுத்திருக்குது. தந்தை மகனுக்கு இடையே அண்மைக் காலமாக சம்பிரதாய ரீதியான பேச்சுக்கூட இல்லையாம். ராமதாஸ் மனைவி சரஸ்வதி, அன்புமணி
மனைவி சௌமியா மூலம்தான் தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றனவாம்.
இது தொடர்பாக ராமதாசுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரிச்சா என்ன சொல்றாங்கன்னா “அடிப்படையில் பெரிய ஐயாவுக்கு நேரெதிரானவர் சின்னவர். கட்சி ஆரம்பித்த புதிதில் காடு, மேடு, மழை வெயில் என எதையும் சட்டை செய்யாமல் சுற்றியவர் பெரிய ஐயா. போகிற இடங்களில் வசதிகளையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். ஆனால் சின்னவரோ தனது மிடுக்கான அலங்காரம் கொஞ்சமும் கலைந்துவிடக் கூடாது என்பதில் குறிப்பாக இருப்பார். பச்சையாகச் சொல்வதானால் சொகுசுப் பேர்வழி. இதனால்தான் கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளே முழுவதுமாக முடங்கிக் கிடந்தவர், இப்போது நாடாளுமன்றம் நடக்கும்போதும் அதையே தொடருகிறார். களத்திற்குப் போகச் சொல்லிப் பெரிய ஐயா பலமுறை சொல்லிப்பார்த்தும் சின்னவர் கேட்பதாக இல்லை. இதனால் டென்ஷனான பெரியவர் இந்த முதிர் வயதிலும் ஊருக்கு ஊர் கிளம்பிப் போய் மைக் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். காடுவெட்டி குரு மறைந்த பிறகு தலைமைக்கும், அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையிலான தொடர்பு அறுந்துபோய்விட்டது. இதனால்தான் கட்சிக்கு மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்குன்னு’’ ஆதங்கப்பட்டார்கள்.

அதேநேரம் அன்புமனிக்கு நெருக்கமானவர்கள் என்ன சொல்றாங்கன்னா, “பெரியவரின் காலத்திற்குப் பொருந்தாத அணுகுமுறைகள்தான் கட்சியின் இன்றைய பரிதாப நிலைக்குக் காரணம். உதாரணத்திற்கு ’மக்கள் தொலைக்காட்சி’யை எடுத்துக்கொள்ளுங்கள். நேற்றைக்கு வந்த சேனல்கள் எல்லாம் புதிது புதிதாக நிகழ்ச்சிகளை நடத்தி பட்டயைக் கிளப்பும்போது இங்கே சதாசர்வ காலமும் தெருக்கூத்துதான். பழைய ஆட்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஐயா போடும் எல்லாத் திட்டங்களும் புஸ்வாணமா போகுது. சின்னவரிடம் கட்சியை முழுமையாக ஒப்படைச்சிட்டு போதிய சுதந்திரமும் கொடுக்கச் சொல்லுங்கள். அப்போது ஐயா எதிர்பார்க்கும் மாற்றம் நிஜமாகவே நடக்கும். இதையெல்லாம் செய்யாவிட்டால் வரும் காலங்களிலும் ஏமாற்றம்தான் மிஞ்சும் ங்கிறாங்க.

“ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்ப்பாங்க ஆனால், தலைமைப் பீடத்தில் இருக்கும் ‘ஐயா’க்கள் ரெண்டுபட்டால் நாங்கள் என்ன செய்றதுன்னு தலையில் அடித்துக்கொள்கிறார்கள் பாட்டாளிச் சொந்தங்கள்.