கனிமொழிக்கு சபரீசன் கொடுத்த அலர்ட்: என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?

Manikandaprabu S | Samayam TamilUpdated: 13 Dec 2021, 12:32 pm
1334
Subscribe

தென் மாவட்ட அமைச்சர் ஒருவர் கனிமொழி குறித்து முதல்வரிடம் போட்டுக் கொடுத்துள்ள விவகாரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

 

கனிமொழி, சபரீசன்

ஹைலைட்ஸ்:

  • கட்சியினரை, பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது
  • கனிமொழி மீதான புகார் சபரீசன் மூலமே பாஸ் ஆனதுதான் இதில் சுவாரஸ்யம் என்கின்றனர்என்னைப் பற்றியே என் அண்ணனிடம் புகார் அளித்துள்ளார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கனிமொழி வருத்தம்

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டதுமே, அம்மாவட்டத்தில் முகாமிட ஆரம்பித்த அவர், இன்று வரை தூத்துக்குடி முழுவதும் பரபரப்பாக சுற்றி தீவிரமாக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் எந்த திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் கனிமொழிதான் அதில் சீஃப் கெஸ்ட்.

தூத்துக்குடியோடு மட்டும் சுருங்கி விடாமல் தென் மாவட்ட திமுகவின் முகமாக மாறும் முயற்சிகளையும் கனிமொழி மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில், கனிமொழியின் பேக்போனாக அவரது வெற்றிக்கு அயராது பாடுபட்டவர் கீதா ஜீவன். மறைந்த இ.பெரியசாமி மற்றும் அவரது மகள் கீதா ஜீவன் ஆகியோருக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கையும் கனிமொழியின் வெற்றியாக மாற்றினார் கீதா ஜீவன்.

அதன் பிரதிபலனாக தூத்துக்குடியில் எம்.எல்.ஏ. சீட்டை கீதா ஜீவனுக்கு பெற்றுத்தந்த கனிமொழி, அவருக்கு அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொடுத்து அழகு பார்த்தார். தொடர்ந்து இரட்டை சகோதரிகளாகவே கனிமொழியும், கீதா ஜீவனும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கனிமொழியின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கீதா ஜீவனின் முகத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு நகமும் சதையுமாக இருந்தவர்கள் மீது யார் கண் பட்டதோ என்கிறார்கள் தூத்துக்குடி திமுகவினர்.

அண்மைக்காலமாகவே கனிமொழிக்கும், கீதா ஜீவனும் டேர்ம்ஸ் சரியில்லையாம். கட்சி நிர்வாகம், நிர்வாகம் என அனைத்தையுமே தூக்குத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பெரிதும் கட்டுப்படுத்துவதாக கனிமொழி மீது புகார் வாசிக்கிறார்கள் கீதா ஜீவன் தரப்பினர். தெற்கின் முகமாக தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் கனிமொழி தூத்துக்குடியில் தனக்கான அடித்தளத்தை வலுவாக நிறுவவும் காய்களை நகர்த்தி வருகிறாராம். இதனால், ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் என்று பிளவுபட்டுக் கிடந்த தூத்துக்குடியில், தற்போது கனிமொழியின் அணி என்று மூன்றவதாக ஒரு அணி உருவாகியிருப்பதாகவும் சொல்கிறார்கள் அம்மாவட்ட திமுகவினர்.

இதனால் கனிமொழி மீது மனக்கசப்பில் இருக்கும் கீதா ஜீவன் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து முதல்வர் ஸ்டாலினிடமே நேரடியாக புகார் தெரிவித்து விட்டதாக கூறுகின்றன அறிவாலய வட்டாரத் தகவல்கள். “மேடம் என்னை சரியாக செயல்படவிடுவதில்லை. ஏதாவது பண்ணுங்க” என்று ஸ்டாலினிடம் கீதா ஜீவன் புகார் தெரிவித்ததாக அந்த தகவல்கள் கூடுகின்றன.

ஆனால், கனிமொழி மீது கீதா ஜீவன் அளித்த புகார் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலம் கனிமொழியிடம் பாஸ் செய்யப்பட்டதாம். ஆனால், கனிமொழி எந்த ரியாக்‌ஷனும் அதற்கு கொடுக்கவில்லை என்கின்றன சிஐடி நகர் வட்டாரங்கள். இருந்தாலும், எத்தனையோ முறை சர்ச்சைகளில் சிக்கிய அவரை நான் காப்பாற்றியிருக்கிறேன். என்னைப் பற்றியே என் அண்ணனிடம் புகார் அளித்துள்ளார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கனிமொழி வருத்தப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலைஞரின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளை தெளிவாக எடுத்துக்கூறும் திறமை, கட்சியினரை, பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது. ஆனால், கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி வர வேண்டும் என்பதால், கனிமொழியை தூத்துக்குடிக்குள் முடக்கஸ்டாலின்  குடும்பத்தினர் தெளிவாக இருக்கும் நிலையில், கனிமொழி மீதான புகார் சபரீசன் மூலமே பாஸ் ஆனதுதான் இதில் சுவாரஸ்யம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.