தீபாவளிக்கு ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது ! பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் !!

தீபாவளி பண்டிகையின்போது ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில், தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தீபாவளி அன்று மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது தவறானது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளின்போது தமிழர்கள் மது அருந்தக் கூடாது’ என்று கூறியுள்ளார்.