கண்ணசைத்த ‘மேலிடம்’! உற்சாக ஓபிஎஸ்! கையை பிசையும் எடப்பாடி ?

கண்ணசைத்த ‘மேலிடம்’! உற்சாக ஓபிஎஸ்! கையை பிசையும் ’சேலம்’அதிமுகவில் நடைபெற்று வரும் அதிகார மோதல்களுக்கு இடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் நிலையில் “மேலிடம்” சில முக்கிய வாக்குறுதிகளை அளித்து இருப்பதாகவும் இதனால் அவரது தரப்பு உற்சாகம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜுலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ், அவரது மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், அவரது ஆதவாளர்கள் என அடுத்தடுத்து நீக்கப்பட்டனர்.  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை.. அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி! அதிரடி அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் இதனையடுத்து கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிரடி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து தான் நீக்குவதாகவும் அறிக்கை வெளியிட்டு வருவதோடு தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்று வருகிறது. தலைமைக்காக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய வட்ட அளவிலான செயலாளர்களையும் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. புதிய பட்டியல் இதற்கான பட்டியல் ஏற்கனவே தயாராக ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து புதிய பட்டியல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்காக இப்படி பன்னீர்செல்வம் செய்கிறார் என்ற காரண புரியாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குழப்பத்தில் உள்ளது. சட்ட ஆலோசகர்கள் அளித்த தகவலின் படி ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை தாங்கள்தான் என தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.  இந்நிலையில் தற்போது தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து, தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூட்டம் நடத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு அவருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் தான் உருவாகி வருகிறது. உதாரணமாக ஆதரவாளர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை டெண்டர் முறைகேடு வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குட்கா வழக்கு, டெல்லி சென்ற எடப்பாடி பிரதமர் சந்திக்க மறுத்தது உள்ளிட்டு அடுத்தடுத்த சிக்கல்கள் உருவாகி வருகிறது, பின்னணியில் யார்? இதற்கு பின்னணியில் யார் இருப்பது என புரியவில்லை என்றாலும் இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது என்கின்றனர் அவரது தரப்பு ஆதரவாளர்கள். இந்நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஓ பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை விமான நிலையம் செல்லும் பிரதமரை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிலையில் நேரடியாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் மறைமுகமாக அவருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் தனது பழைய செல்வாக்கை மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வம் உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்று ஓ பன்னீர்செல்வத்தை இன்று விமான நிலையத்தில் மோடி தனியாக சந்தித்து உள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் உடல்நிலை குறித்தும் விசாரித்து உள்ளார். 5-10 நிமிடங்கள் ஓ பன்னீர்செல்வத்திடம் மோடி பேசியதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த 10 நிமிடம் எடப்பாடிக்கு ஏன் கிடைக்கவில்லை. எடப்பாடியை ஏன் மோடி சந்திக்க தொடர்ந்து மறுக்கிறார் என்ற விவாதத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பல விதமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

கேள்வி 1 – எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதற்கு இன்னும் மோடி வாழ்த்து சொல்லவில்லை. அப்படி என்றால் மோடி இதை விரும்பவில்லையா?

கேள்வி 2- ஓ பன்னீர்செல்வத்தை தனியாக பார்த்த மோடி, எடப்பாடியை பார்க்கவில்லை. அப்படி என்றால் டெல்லி பாஜக எடப்பாடிக்கு எதிராக இருக்கிறதா?

கேள்வி 3 – திடீரென எடப்பாடிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, சி விஜயபாஸ்கர் ஆகியோர் ரெய்டிலும், விசாரணையிலும் சிக்கி இருப்பது ஏன்? டெல்லி பாஜக எடப்பாடி டீம் மீது கோபத்தில் இருக்கிறதா?

கேள்வி 4 – சமீபத்தில் ஜிஎஸ்டி சதவிகித உயர்வை எடப்பாடி விமர்சனம் செய்து, அதை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாக டெல்லி பாஜகவும், மோடியும் எடப்பாடி மீது கோபத்தில் இருக்கிறார்களா?

கேள்வி 5 – கடந்த சில நாட்களாகவே காங்கிரசுடன் எடப்பாடி நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நெருக்கம் குறித்த செய்திகளால் எடப்பாடி டீம் மீது மோடி அதிருப்தியில் இருக்கிறாரா? ஆகிய கேள்விகள் எழுந்துள்ளது.