பாசகவின் தேர்தல் அறிக்கை.. !

பாசகவின் தேர்தல் அறிக்கை..

தமிழர்களுக்கு 1.5 இலட்சம் வேலை வாய்ப்பு…!!!

எப்படி?

நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை… அது போலவா??? மத்திய அரசு நிறுவனங்கள்ல தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை குழி தோண்டி பொதைச்சாச்சு ?

தமிழகத்தை மேம்படுத்துவோம்..!

எப்படி?

அஞ்சு வருஷமா மதுரை எய்ம்ஸ்சில் அடையாளமா ஒரே ஒரு செங்கல் இருக்கே அது மாதிரியா சார்…
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா சார் ??

தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..!

எப்படி?

ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா?? ஏற்கனவே இந்து கோயில்கள் வருமானத்தையும் கோயில் நிலங்களையும் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆட்டையப் போட்ட மாதிரியா சார் !!

தமிழர்களை பாதுகாப்போம்..!

எப்படி?

தூத்துக்குடியில் வாழ்வாதரத்தை காக்க போராடிய மக்களை கொன்று குவித்தீர்களே அது போலவா?

நிதி உதவி அளிப்போம்..!!!

எப்படி?

ஓக்கி புயலில் ஒப்பாரி வைத்து அழுதோமே..
கஜா புயலில் கதறி துடித்தோமே..
எங்கள் பிள்ளைகள் பிச்சை எடுத்தார்களே.. திரும்பிக் கூட பார்க்கவில்லையே.. அது போலவா???

விவசாயத்தை பாதுகாப்போம்..!

எப்படி?

உழவர்களின் 4 பைசா வட்டியை 11 பைசா உயர்த்தினீர்களே..
பணக்காரர்களின் 8 இலட்சம் கோடியை தள்ளுபடி செய்து விட்டு.. உழவர்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லையே.. அது போலவா???

தமிழை வளர்ப்போம்..!!!

எப்படி ?

தமிழகத்தில் இயங்கும் அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழே இல்லை..
தமிழக எம்பிகளுக்கு இந்தியில் கடிதம் வருது…சமஸ் கிருதத்திற்கு 650 கோடி தமிழுக்கு 22 கோடி.அது போலவா??

ஆளும் ஆதிக்கமே..

கேழ்வரகில் நெய் என்றவுடன் நம்புவதற்கு இது சனாதன மண் இல்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்….
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகிற்கு பறைச்சாற்றிய எங்கள் தமிழினத்தின் மூத்தோன் எங்கள் பாட்டன் அய்யன் திருவள்ளுவர் பிறந்த மண்…!

இது தந்தை பெரியாரின் சமூகநீதி மண்… பகுத்தறிவு மண்…

இந்த தேர்தல்,
பாசிசத்தின் இறுதி பரப்புரை! இதையும் மீறி நம் மக்கள் பாரதீய சனாதன கட்சிக்கு வாக்களித்தால் அவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.