திருமாவளவனின் அரசியல் அஸ்திவாரத்தை அசைக்க துவங்கிய பா.ஜ.க அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தட்டிக் கொடுத்ததன் காரணமாக விடுதலை சிறுத்தைகளை அதிகம் அடிக்க துவங்கியிருக்கிறார். சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் பாஜக இடையேயான மோதல் முற்றியுள்ளது. கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் பாஜகவை பற்றி கருத்துக்கள் கூறுவதும், பாஜகவினர் அதற்கு பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. இந்த நிலையில் திருமாவளவன் கடந்த வாரம் பாஜக பற்றி குறிப்பிடுகையில் ஒருபோதும் பாஜகவுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைக்காது என கூறினார். மேலும், ‘சிறுத்தை தன் உடம்பில் உள்ள கரும்புள்ளிகளை கூட மாற்றிக்கொள்ளுமே தவிர, பாஜக தன்னுடையை கொள்கையை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவின் சங்பரிவாரர்கள் புத்தி ஒருபோதும் மாறாது.. அது சாதீயவாத புத்தி.. அது சனாதன புத்தி.. அது மாறவே மாறாது.. அந்த பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களைத்தான் எதிர்க்கின்றோம்… அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்றாலும், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை’ என்றார் திருமாவளவன். திருமாவளவன் இப்படி ஆவேசமாக பேசிய அடுத்த இரு தினங்களில் அண்ணாமலை அதற்க்கு பதிலடி தரும் விதமாக, ‘தி.மு.க.விலிருந்து விடுதலைச் சிறுத்தைகளை நீக்குவதற்கு முன்பாக தாமே வெளியேறும் முடிவுக்கு திருமாவளவன் வந்திருக்கிறார். அவர் தைரியமாக வெளியே வரட்டும். திருமாவளவன் அவர்களின் கண்முன்னாலேயே விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தொகுதியில் திருமாவளவன் டெபாசிட் கூட வாங்க முடியாதுன்னு அண்ணாமலை ஆக்ரோஷமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குறிப்பாக திருமாவளவனை தாக்கி பேசினார். ‘ஏன் இவ்ளோ சவுண்டு விடுவீங்க? திமுக தொரத்திவிட்ருச்சான்னு- அண்ணாமலை கேட்ட ஒரே கேள்வியால் கப்சிப்புன்னு பம்மிய திருமாவளவன்! இப்படி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பாஜக குறிப்பாக அண்ணாமலை தாக்கி பேசுவதற்கு பின்னாடி அமித்ஷா இருப்பதாக தகவல்கள் வந்திருக்குது.. சமீபத்தில் டெல்லி போய்ட்டு வந்த அண்ணாமலைக்கு ரகசிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னணியில் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினர் பாஜக சித்தாந்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தறது அவதூறு பரப்புறது, மோடி எதிர்ப்பு அலையை மக்கள் மத்தியில் உருவாக்குறது போன்ற விஷயங்கள தமிழகத்தில் செய்துகிட்டு வர்றாங்க. ‘சமீபத்தில கூட திருமாவளவன் என்ன பண்ணுனாருன்னா ஐயா இந்த அண்ணாமலை தொல்லை தாங்க முடியலங்க எதாவது நடவடிக்கை எடுங்கன்னு- காவல்துறையிடம் அலறிக்கொண்டு ஓடினாரு சட்ட திருமாவளவன்! இவர்கள் இரு திராவிட கட்சிகளிடம் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வாங்கிக்கிட்டு ஒற்றை இலக்கத்தில் எம்.எல்.ஏ, எம்.பிக்களை வைச்சுகிட்டு அரசியல் செய்து கிட்டு வர்றாங்க.இவங்களோட வாக்கு வங்கியை உடைக்கணும், இவங்க அரசியலை அசைக்கணும், இவங்க கூட்டணியை உடைக்கணும், இவங்கள திராவிட கட்சிகளின் நிழலை விட்டு அனுப்பினால் அவங்களாகவே தேய்ஞ்சு போய்டு வாங்க. இப்படி அவர்களை அரசியல் ரீதியாக தனிமை படுத்தினால் கண்டிப்பாக தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு அது பெரிய உறுதுணையாக இருக்கும்ன்னு சொன்னதாகவும் தகவல் கிடைச்சிருக்குது. விசிக போன்ற இடதுசாரிகளின் அரசியல் கூட்டணி உடைந்தால் மட்டுமே 2024 தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற முடியும் எனவே அவர்களின் வாக்கு வங்கியை சரியுங்கள்ன்னு அண்ணாமலைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தட்டிக் கொடுத்ததாக தெரியுது. இப்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த தைரியத்தினால் எப்போதும் இல்லாத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பாஜக குறிப்பாக திருமாவளவனை அண்ணாமலை தாக்க துவங்கியுள்ளார்.இது மட்டுமல்லால் தடா பெரியசாமி போன்ற பட்டியல் அணி நிர்வாகிகள் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூக நீதி என்ற பெயரில் நடத்தும் அரசியல் நாடகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் அண்ணாமலை வேலைகளை துவங்கியுள்ளார். இப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அஸ்திவாரமான பட்டியல் இன மக்கள் வாக்கு வங்கியில் கைவைத்த காரணத்தினால் திருமாவளவன் தரப்பு சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்தப்பக்கம் திமுக கூட்டணி எந்த சமயமும் துரத்த நினைக்கும் வேளையில் அடுத்தபடியாக நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படி கூட்டணிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டது அண்ணாமலை அடித்த முதல் அடியின் வெற்றியாக பாஜகவினரால் பார்க்கப்படுது.
அண்ணாமலையோட திடீர் தாக்குதல எதிர் பார்க்காத காரணத்தினால் அலறி போய் தற்போது திருமாவளவன் ‘அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லீங்க’ங்கிற ரீதியில் விளக்கம் கொடுத்திருக்காரு. தமிழகத்துல இன்னைக்கு இருக்குற நிலைமைக்கு பாஜகவை நினைச்சு தூங்காம இருக்குற அரசியல் தலைவர்கள் பட்டியல்ல திருமாவளவன் முதல் இடத்துல இருக்கார். அந்த அளவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவன் தூக்கத்தை கெடுத்துகிட்டு வர்றாரு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவன் நடத்துன போராட்டத்தை பத்தி அசால்ட்டா ஒரே வரில முடிச்சுட்டார். அண்ணாமலை என்ன சொன்னாருன்னா, ‘திருமாவளவன் அண்ணன், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியில் வருவதற்கு ஒரு காரணத்தைத் தேடுறாரு. அவர் ஒரு புது அரசியலை ஸ்டாலின் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயல்கிறார். கூட்டணியிலிருந்து வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வாருங்கள். வெளியில் வருவதற்குக்கூட தைரியம் இல்லாமல் பேசுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணன் திருமா அவர்கள், வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வரலாம். சாக்குப் போக்கு சொல்வது ஏன்னு தெரியலை. திட்டுவதற்கெல்லாம் ஒரு கூட்டமா அவர்களுடைய தோழர்களே ஒரு கடையை உடைச்சிட்டு, மருத்துவமனையில் படுப்பதைப்போல் எல்லா கட்சிகளும் இருக்கும்னு அவர்கள் நினைக்கிறார்கள்’ அப்டின்னு சொன்னாரு. திருமாவளவன் சமூகநீதி, பட்டியலின மக்கள் உரிமை, பாசிச பாஜக அப்டின்னு கத்தி பேசினதையெல்லாம் 30 செகண்ட்ல அண்ணாமலை சின்னாபின்னமாக்கிட்டாரு. என்னடா நம்ம இப்படி மக்களை கூட்டி கத்தி பாஜகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துறோம் அதுக்கு கோவப்பட்டு பதில் அறிக்கை விடுறதுதானே உலக நியாயம்? இது என்ன சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு.அத விட்டுட்டு இப்படி நாம கூட்டணிக்குத்தான் கத்துறோம்ன்னு சிம்ப்ளா முடிச்சுட்டாரே அண்ணாமலை அப்டின்னு சுதாரிச்சுட்டு அடுத்து திருமாவளவன் ஜகா வாங்க ஆரம்ப்பிச்சுட்டார். திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சில திருமாவளவன் கலந்துகிட்டாரு. அப்போ செய்தியாளர்களை சந்திச்சு பேசிய அவர், ‘திமுக கூட்டணி 2019 லிருந்து வலுவா இருக்குது. ஆனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றாங்க விடுதலை சிறுத்தை கூட்டணியில் இருந்து வெளியேற போகுதுன்னு பஜக தலைவர் உட்பட சிலர் பேசிக்கிட்டுத் திரியறாங்க. ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டி காட்டுகிறோம். ஆனால் எங்கள் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக தெளிவாக உள்ளோம். அகில இந்திய அளவில் திமுக கூட்டணி வலிமை பெற வேண்டும் என்பது தான் எங்களோட நிலைப்பாடு’ அப்டின்னு ஜகா வாங்கிட்டாரு. நமக்கு கிடைத்த எம் பி சீட் எங்கே கூட்டணி மாறி சென்றால் கிடைக்காமப் போய்டுமோங்கிற அச்சத்தில் இருக்கும் திருமாவளவனுக்கு அண்ணாமலை கேட்ட கேள்வியில ஆடிப் போய் இது என்னடா வம்பாபோச்சு அப்டின்னு நினைக்க வச்சுடுச்சு. அரசியல் ரீதியாக திருமாவளவனுக்கு எங்கே அடித்தால் வலிக்கும்ன்னு நன்கு உணர்ந்த ஒரே தலைவராக தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கின்றார் என இப்பொழுதே பாஜகவினர் சொல்லிக்கிட்டு வர்றாங்க. அதுக்குத் தகுந்தார் போல் தான் அண்ணாமலை பேசியதற்கு தற்பொழுது திருமாவளவன் பம்மி பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தற்பொழுது திமுக கூட்டணியில் எம்.பி ஆக இருக்கிறார், மேலும் இன்னும் ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட வேண்டும் என்பது திருமாவளவனின் தீர்க்கமாக எண்ணமாக இருந்தது. காரணம் இன்னும் காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவாகவில்லை, மேலும் காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ஜெயிக்கும் நம்பிக்கையும் இல்லை. திமுகவும் அதிக அதிருப்தியை மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருப்பதால் எப்படியும் இந்த முறை தனக்கு எம்.பி சீட்டு கிடைத்தாலும் ஜெயிக்கப் போவதுமில்லை, அதேபோல் வழக்கமான நமது சிதம்பரம் தொகுதியை நமக்கு திரும்ப கிடைத்தாலும் கண்டிப்பாக நம்மை பாஜக போன்ற வலதுசாரிகள் ஜெயிக்க வைக்க போவதில்லை என முடிவெடுத்த திருமாவளவன் எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டு வந்து அதிமுக கூட்டணியில் இணைந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இதன் காரணமாகவே திமுகவை மறைமுகமாக எதிர்த்து அவ்வப்போது கருத்துக்கள் கூறி வந்தார். மேலும் பாஜகவிற்கு சவால் விடுவதாக கூறிக்கொண்டு ‘பதவி என் தலை முடிக்கு சமம்’ என மறைமுகமாக சவால் விட்டார். இப்படி மறைமுகமாக திமுகவை எதிர்த்து விட்டு மறுபுறம் அதிமுக கூட்டணியில் இணைய சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார் திருமாவளவன். அதன் ஒரு பகுதியாக இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து செய்தி தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டார். இப்படி திமுக கூட்டணிகள் இருந்து எப்பொழுது கழன்று விடலாம் என சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.மேலும் வரும் 2024 தேர்தலை மையமாக வைத்து அதிமுக கூட்டணியில் எப்போது இணையலாம் என சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த திருமாவளவனுக்கு தற்பொழுது அதிமுக பாஜக இடையே உருவான சண்டை சந்தோஷத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் திருமாவளவனுக்கு சிலர் அளித்த தகவலின் பெயரில் ‘அதிமுக பாஜக சண்டை என்பது தற்காலிகமானது, அவர்கள் இன்று உரசி கொள்வார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள்! மேலும் பாஜக கட்சி கூட்டணி முடிவுகளை மேலே இருந்து எடுக்கிறது எனவே மேலிருந்து டெல்லி மேலிடத்திலிருந்து எடப்பாடி அவர்களுக்கு ஒரு போன் அடித்து இதெல்லாம் எதுவும் வேண்டாம் அமைதியாக கூட்டணியை கவனித்துக் கொள்ளுங்கள்’ என கூறினால் கண்டிப்பாக எடப்பாடி அதனை கேட்பதை தவிர வேற வழியில்லை எனவே இப்படி தற்காலிக பிரச்சனைக்கு நாம் சந்தோஷப்படுவது வீணானது என திருமாவளவன் தெரிந்து கொண்டார். இதுவே நாம் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அது நடக்கப் போவதில்லை என திருமாவளவனுக்கு டெல்லியில் இருந்து செய்தி கிடைத்துள்ளதாம். இதனை தொடர்ந்து இனிமே நமக்கு திமுக கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என திருமாவளவன் முடிவெடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக கூட்டணியே சிறந்தது என்று ரீதியில் பேசி உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பத்திரிக்கையாளரிடம் அளித்த நேர்காணல் ஒன்றில், ‘தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைவது அரசியல் தலைகீழாக நடக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது’ என கூறியுள்ளார். தொடர்ந்து விசிக-அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக திருமவளவனிடம் அந்த பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, ‘திமுக கூட்டணியில் விசிக நல்லணிக்கத்தோடு இருக்கிறோம். எந்த உரசலும் இல்லை. திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் விசிக வலுவாக இருக்கிறோம்’ என திருமாவளவன் குறிப்பிட்டார். ‘எனக்கு உன்ன விட்டா வேற ஆள் கிடையாது உனக்கும் என்னை விட்டால் வேறு ஆள் கிடையாது’ என திருமாவளவன் தற்பொழுது திமுக கூட்டணியிடம் சரணடைந்த விவகாரம் அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது