அதிமுகவில் சசிகலா ? திமுகவில் மு.க.அழகிரி ?

அதிமுகவில் சசிகலாவை 100 சதவீதம் சேர்க்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே . பழனிசாமி அறிவித்து , தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார் . மு.க.அழகிரியைத் திரும்பக் கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து திமுக தலைவர் எதுவுமே தெரியாததுபோல மனம் சாதிக்கிறார் . அரசியல் பாதை எவ்வளவு கரடு முரடானது என்பதற்கு இவை நல்ல எடுத்துக்காட்டுகள் . பெங்களூருவில் இருந்து சென்னை தியாகராய நகர் வரையில் சசிகலாவுக்கு தொண்டர்கள் அளித்த மக் வரவேற்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . இதேபோன்ற பயணத்தையும் , வரவேற்பையும் தமிழக அரசியல் ஏற்கெனவே பார்த்திருக்கிறது . அலைக்கற்றை வழக்கில் கனிமொழி சிறையில் இருந்து  திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இருந்து சிஐடி காலனி வரை வரவேற்பு வின கொடுக்கப்பட்டது . விமான நிலையத்துக்கே கருணாநிதி நேராகச் சென்று கனிமொழியை வரவேற்று அழைத்து வந்தார் . முதல் அதிமுகவில் ஏற்பட்டுள்ள வேதியியல் மாற்றங்களில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பவராக மு.க.ஸ்டாலின் காணப்படுகிறார் . திமுகவில் நிகழ்ந்திருப்பது இயற்பியல் மாற்றம் என்றும் அதிமுகவில் ஏற்படுவது வேதியியல் மாற்றம் என்றும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகிவிட்டோம் என்பதையே மறந்து சாதாரண தொண்டர்போல , –பெங்களூருவில் இருந்து கிளம்பிவிட்டார் ( சசிகலா ) இனி அதிமுகவில் நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும் என்று  சசிகலா வருகைக்கு கிட்டத்தட்ட ரன்னிங்கமென்டரியே ஸ்டாலின் கொடுத்தார் . புதுச்சேரி ஒரு விரலை நீட்டி பிறரைக் குற்றம்சாட்டும்போது , மூன்று விரல்கள் நம்மை நோக்கியே இருப்பதை மறக்கக்கூடாது என்று அண்ணா கூறியதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது . அதிமுகவில் சசிகலா மூலம் மூண்டுள்ள நெருப்பைப் பார்த்து மு.உஸ்டாலின் மகிழ்ச்சி அடைகிறார் . திமுகவியமுக அழகிரி மூலம் ஏற்கெனவே தெருப்பு : மூண்டு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது .

சசிகலாவோ இன்னும் முழுமையாக வாய் திறக்காமல் உள்ளார் . ஆனால் , மு.க. அழகிரியோ திமுகவுடனான குறிப்பாக மு.க ஸ்டாலினுடனான , தன் குமுறல்களை மனம் திறந்து ஏற்கெனவே தெரிவித்து விட்டார் -திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் , அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என்று ஸ்டாலினிடம் கூறினேன் , இதை மறுக்க முடியுமா என்று மு.க. அழகிரி கேள்வி எழுப்பினார் . இதற்குப் பிறகும் முக அழகிரியைத் திமுகவில் சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் மறுப்பது ஏன் ? கருணாநிதி தனது கடைசிக் காலங்களில் அழகிரியை கட்சிக்குள் சேர்க்க நினைத்தார் . அது கட்சியினர் அனைவருக்கும் தெரியும் . அப்படியும் சேர்த்துக்கொள்ளப்படாதது ஏன் என்றால் மு.க அழகிரி மீது முகஸ்டாலினுக்கு இருக்கும் அச்சம்தான் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள் , திமுகவுக்குள் அழகிரி வந்துவிட்டால் , எங்கே தனக்குள்ள அதிகாரம் பறிபோய்விடுமோ என்கிற ஸ்டாலினின் அச்சம்தான் காரணம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது திமுகவின் சாதாரண தொண்டர்கள் கூட அறிந்ததுதான் . இதே ஸ்டாலின்தான் , சசிகலா வருகையால் எடப்பாடி பழனிசாமி அச்சப்படுகின்றார் என்கிறார்.தென் மண்டலப் பகுதியில் திமுகவின் அசைக்க முடியாத தூணாக இருந்தவர் மு.க அழுகிரி திருமங்கலம் இடைத்தேர்தல் , மதுரை மாநகராட்சி தேர்தல் உள்பட பல தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார் எத்தனையோ பேர் மத்திய , மாநில அமைச்சர்களாகவும் , மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆவதற்கும் காரணமாக இருந்தவர் முக அழகிரி திமுகவில் தன்னை இணைத்து கொள்ளுமாறு ? 7 ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படிக் கேட்பவர் வேறு யாரும் இல்லை . மு.க.ஸ்டாலினின் சொந்த அண்ணன் . தனது சொந்த அண்ணனின் குரலுக்குச் செவிமடுக்காத நிலையில்தான் , அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியடைந்து வருகிறார் ” என்று அதிமுகவினர் கேலி பேசுகிறார்கள் . தன்னை ஸ்டாலின் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பது அழகிரிக்கு நன்றாகவே தெரியும் . ” மு.க.ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது . எனது ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக விடமாட்டார்கள் ” என்று சூளுரைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார் அழகிரி , தனிக் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என்றாலும் நேர்முக எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டலப் பகுதியில் திமுகவைத் தோல்வி அடையச் செய்வதற்கான வேலைகளுக்கு அழகிரி தயாராகி வருகிறார் . இதற்கு திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் , சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது . கருணாநிதி மறைவுக்குப் பிறகு சென்னையில் மு.க.அழகிரி அமைதிப் பேரணி நடத்தி தனது பலத்தைக் காட்டியதில் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளில் அவர்கள் தொடர்ந்து மறைமுகமாக உதவுகின்றனர் . சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அவர்கள் அழகிரியை ஆதரிக்க உள்ளனர் . இதனால் , திமுகவுக்கு தேர்தலில் பெருத்த நெருக்கடி ஏற்பட உள்ளது . அதிமுகவில் சசிகலாவாலும் , திமுகவில் அழகிரியாலும் எழுந்துள்ள பிரச்னையை பொதுவாகப் பார்க்கும்போது அண்ணன் – தம்பி பிரச்னையாக அல்லது குடும்பப் பிரச்னையாகக் கூடத் தோன்றலாம் . ஆனால் , தேர்தல்களில் இதுபோன்ற பிரச்னைகள்தாம் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவையாக அமைந்து விடுகின்றன .