அதிமுக அடிமடியில் கை வைத்த சசிகலா.. அதிர்ந்த எடப்பாடி

30 எம்எல்ஏக்களாமே”.. மாஸ்டர் பிளான் டெல்லி.. அதிமுக அடிமடியில் கை வைத்த சசிகலா.. அதிர்ந்த எடப்பாடி

30 எம்எல்ஏக்களாமே.. இதுவரை மறைமுகமாகவே அரசியல் செய்து வந்த சசிகலா, தற்போது களத்தில் அதிரடியாக குதித்துள்ளார்.. எடுத்த எடுப்பிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு பகீர் கலக்கத்தையும் தந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அரசியல் பயணத்தை அதிரடியாக துவக்கவிருக்கிறார் சசிகலா. அதனை வெளிப்படையாக அவர் சொன்னதைத் தொடர்ந்து, சசிகலாவின் சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் தொடர்புகொண்டு விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்.  ஓய்வு பெற்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சசிகலாவின் சிபாரிசில் முக்கியத் துறைகளில் கோலோச்சியவர்கள். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருந்து வருகிறார்கள். பட்டென இப்படி முடிவு எடுத்துட்டாரே சசிகலா.. அதிரும் எடப்பாடி பழனிசாமி.. புருவத்தை உயர்த்தும் திமுக செல்வாக்கு சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு அவருக்கும் சம்பளம் வாங்காத ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். அவர்களிடம் எதிர்கால அரசியல் குறித்து சமீபத்தில் சசிகலா விவாதித்துள்ளார்.. அப்போது, “உடனடியாக தனிக்கட்சி துவக்க வேண்டும்… அதன் மூலம் என்னுடைய செல்வாக்கை நிரூபித்துக் காட்டினால்தான் அதிமுக என்னிடம் வரும் என என்னுடைய நலன் விரும்பிகளும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளும் வலியுறுத்துகிறார்கள்” என்பதை ஆலோசகர்களிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. ஆனால், ஆலோசகர்களோ சசிகலாவின் இந்த கருத்தை ஏற்கவில்லையாம்.. சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு அவருக்கும் சம்பளம் வாங்காத ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். அவர்களிடம் எதிர்கால அரசியல் குறித்து சசிகலா விவாதித்துள்ளார்..  ஆனால், ஆலோசகர்களோ சசிகலாவின் இந்த கருத்தை ஏற்கவில்லையாம்..  தனிக்கட்சி என்பது போகாத ஊருக்கு வழி சொல்வது. ஏற்கனவே தினகரன் கட்சி ஆரம்பித்து என்ன நிலை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் தனிக்கட்சி துவக்குவது இன்றைய சூழல்களுக்கு சரிபட்டு வராது. அதிமுகவின் தலைமைக்கு நீங்கள் வரவேண்டும். அதற்கு என்ன வழிகள்? என்ன யுக்திகள்? என்பதை ஆராய்வதுதான் ஆரோக்கியமானது. அதிமுகவில் உங்களுக்கு தடையாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். எடப்பாடிக்கு ஆதரவு அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, டெல்லியின் ஆதரவு எடப்பாடிக்கு முழுமையாக கிடைத்தது. ஆனால், ஆட்சி இழப்புக்கு பிறகு எடப்பாடிக்கு டெல்லி ஆதரவு குறைந்து போனது. அவருக்காக லாபி செய்தவர்கள் பலரும் விலகி விட்டனர். இந்த சூழலில்தான் பாஜகவை சேர்ந்த தமிழக முக்கிய தலைவர் அதுவும் எடப்பாடி சமூகத்தை சேர்ந்தவர் டெல்லியில் காய்நகர்த்தி வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து எடப்பாடிக்கு ஆதரவான மனநிலையை டெல்லியில் உருவாக்குகிறார் தமிழக பாஜக பிரமுகர். இந்த பாசத்தை உடைத்து டெல்லியின் ஆதரவை முழுமையாகப் பெற முயற்சியுங்கள். டெல்லியின் ஆதரவு இருந்தால் மட்டுமே அதிமுகவுக்குள் நீங்கள் நுழைய முடியும். அதிமுகவில் நுழைந்தால் மட்டுமே உங்களின் அரசியல் பயணம் வெற்றியாகும். அதைத் தவிர்த்து எடுக்கப்படுகிற எந்த முயற்சியும் அரசியல் ரீதியாக உங்களுக்கு வெற்றியைத் தராது” என்று மிக எளிமையாக சசிகலாவுக்கு புரியும் வகையில் பாடம் எடுத்திருக்கிறார்கள் ஆலோசகர்களான அந்த அதிகாரிகள்.  குறிப்பா, “அதிமுகவின் உள்கட்சி தேர்தலை நடத்தி முடித்து பொதுக்குழுவை கூட்டி, ஒற்றைத் தலைமைக்கு அதிக அதிகாரம் என்பதாக மாற்ற முயற்சிக்கிறார் எடப்பாடி. அதற்குள் சசிகலா முந்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சசிகலா மீது டெல்லியும், அதிமுகவும் கவனம் செலுத்த வேண்டுமாயின் அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு அவரது பக்கம் திரும்ப வேண்டும். அதனால் டெல்லியின் உதவியை நாடுவதற்கு முன்பாக, கணிசமான எம்எல்ஏக்களை உங்கள் பக்கம் கொண்டு வாருங்கள்” என்ற யோசனையையும் சசிகலாவுக்கு ஆலோசகர்கள் சொல்லியுள்ளனர். 22 எம்எல்ஏக்கள் அதன்படி, அதிமுக எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. கட்சி தலைமைக்கு எதிராக மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்தால் கட்சி தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த வகையில் தற்போது சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதில் 22 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாக சசிகலாவை ஆதரித்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் அவர்கள் மீது பாயாது.  அதனால் 30 எம்எல்ஏக்களை குறி வைத்து சசிகலா தரப்பு பேர அரசியலை கையில் எடுத்துள்ளது. சசிகலா வலையில் அதிமுக மீன்கள் அதிக எண்ணிக்கையில் சிக்கினால்… சசிகலா மீது டெல்லியின் பார்வை விழும் என்று கணித்திருக்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள். ஒரு முடிவோடுதான் உள்ளாராம் சசிகலா… இப்போது, நேரடியாகவே சசிகலா அதிரடியில் இறங்கி உள்ளதுடன், டெல்லி மேலிடத்தின் கவனத்தையும் தன் பக்கம் திசைதிருப்பும் பிளானை கையில் எடுத்துள்ளதால், எடப்பாடி தரப்புக்கு லேசான கலக்கம் ஏற்பட்டுள்ளதாம்.. காரணம், அடுத்து என்ன செய்யபோகிறார் என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!