05
May
(ICMAI, earlier known as ICWAI) ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐ.சி.எம்.ஏ.ஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சிபடிப்பாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். ICWA அடிப்படைப் படிப்பு FOUNDATION COURSE சேர்க்கைத் தகுதி 17 வயது பூர்த்தியடைய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முறையில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம்(போஸ்டல் கோச்சிங்) போஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.2000 விவரக் கையேடுக்கு ரூ.150(பதிவுக் கட்டணம் இல்லை) அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட டிடி(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் வங்கி வரைவோலை(DD) சான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ் நகல் சான்றளிக்கப்பட்ட 10+2…
