கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

சிமென்ட் கான்கிரீட்டுக்கு மாற்றாக,புதிய கான்கிரீட் கலவை ! சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு !!

சிமென்ட் கான்கிரீட்டுக்கு மாற்றாக,புதிய கான்கிரீட் கலவை ! சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு !!

சிமென்ட் கான்கிரீட்டுக்கு மாற்றாக, சுண்ணாம்பு மற்றும் நிலக்கரி சாம்பல் பயன்படுத்தி, புதிய கான்கிரீட் கலவையை, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாடு முழுவதும் கட்டுமான பணிகளுக்கு, சிமென்ட் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. சிமென்ட், தண்ணீர் மற்றும் சில ரசாயனம் பயன்படுத்தி, சிமென்ட் கான்கிரீட் தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாற்று கலவையை, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பிரிவு கண்டறிந்துள்ளது.ஸ்விட்சர்லாந்து நிறுவனம் ஒன்றுடன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், சென்னை ஐ.ஐ.டி.,யின், சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் மனுசந்தானம் தலைமையிலான குழுவும் இணைந்து, ஆராய்ச்சி செய்து, இந்த கலவையை கண்டுபிடித்துள்ளது. சுண்ணாம்பு, களிமண் மற்றும் நிலக்கரி சாம்பல் பயன்படுத்தி, நீண்ட காலம் வலுவாக இருக்கும், கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Read More
கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ இணையதளம் !

கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ இணையதளம் !

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள். பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம். அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆதலால், இனிமேல் 12-ஆம் வகுப்பு (+2) முடித்த மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை எளிய…
Read More
இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸின்  71 வது பதிப்பு டிசம்பர் 20-22 வரை நடைபெற உள்ளது !

இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸின் 71 வது பதிப்பு டிசம்பர் 20-22 வரை நடைபெற உள்ளது !

இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸின் 71 வது பதிப்பு டிசம்பர் 20-22 வரை நடைபெற உள்ளது. சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ள மூன்று நாள் வருடாந்திர நிகழ்வில் மருந்து தொழில், கல்வி, மருந்து ஒழுங்குமுறை துறைகளைச் சேர்ந்த சுமார் 10000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பின்வரும் ஐந்து அமைப்புகளின் கூட்டணியான இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸ் (ஐபிசிஏ) ஏற்பாடு செய்த ஐபிசி: இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் (ஐபிஜிஏ). இந்திய பார்மசூட்டிக்கல்ஸ் சங்கம் (ஐபிஏ), இந்திய மருந்து ஆசிரியர்கள் சங்கம் (ஏபிந‌டி‌ஐ), இந்திய மருத்துவமனை மருந்தாளுநர்கள் சங்கம் (ஐ‌எச்‌பி‌ஏ), மற்றும் அகில இந்திய டிரக் கண்ட்ரோல் அதிகாரிகளின் கூட்டமைப்பு (ஏ‌ஐடிஏ‌சி‌ஓசிஆ), ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை வழங்கும் வேறுபட்ட அமைப்புகள் ஆகும். இந்த ஆண்டின் ஐபிசியின் தீம் 'ஹெல்த் கேர் சிஸ்டம்- ரெகுலேட்டர்களின் பங்கு'.ஏ‌ஐடி்‌சி‌ஓசிங பொதுச் செயலாளரும், 71 வது ஐபிசியின் தலைவருமான ரவி உதய்…
Read More
சென்னையில் எஜுகேஷன் இன் அயர்லாந்து ! இந்திய மாணவர்களுக்கான கல்விப் பொருட்காட்சி !!

சென்னையில் எஜுகேஷன் இன் அயர்லாந்து ! இந்திய மாணவர்களுக்கான கல்விப் பொருட்காட்சி !!

இந்திய மாணவர்களில் கணிசமான பகுதியினர் அயர்லாந்தை உயர் கல்விக்கு மிகவும் விருப்பமான இடமாக கருதுகின்றனர் . எனவே , அயர்லாந்து அரசாங்கத்தின் கல்வி மற்றும் திறன் அமைச்சத்தின் கீழ் செயல்படும் பிராண்டான எஜுகேஷன் இன் அயர்லாந்து , சென்னையில் கல்வி கண்காட்சியை ஏற்பாடு செய்தது . இந்த கண்காட்சியில் சென்னையில் மாணவர்கள் கலந்து கொண்டனர் . முன்னணி 20 ஐரிஷ் உயர் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரையாடுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது . மாணவர் சேர்க்கை , கிடைக்கக்கூடிய கல்வித் திட்டங்கள் கேம்பஸ் வசதி , சலுகைகள் , சர்வதேச மாணவர் ஆதரவு மற்றும் பல்வேறு தகவல்கள் தொடர்பான அவர்களின் கேள்விகளைப் பற்றி விவாதிக்க உதவியது . இது குறித்து இந்தியாவுக்கான எஜுகேஷன் இன் அயர்லாந்து மூத்த கல்வி ஆலோசகர் பேரி ஓட்ரிஸ்கால் கூறுகையில் , ஆர்வமுள்ள மாணவர்களுக்கான நோக்குநிலை திட்டங்களாக இந்த கண்காட்சிகளை…
Read More
தொழில்நுட்ப தகுதிகளுடன் தரமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் –  டிஏவி பள்ளிகள் !

தொழில்நுட்ப தகுதிகளுடன் தரமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் – டிஏவி பள்ளிகள் !

தொழில்நுட்ப தகுதிகளுடன் கூடிய தரமிக்க ஆசிரியர்களை உருவாக்குதில் புகழ்பெற்ற டிஏவி பள்ளி முன்னிலை வகிப்பதாக அதன் செயலாளர் விகாஷ் ஆர்யா தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விமுறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் தரமிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் GST குறித்த முழுமையான வணிக கல்வியை கல்வியாளர் வசந்தா பாலசுப்ரமணியம் அறிமுகப்படுத்தினார். அது பற்றிய விளக்கங்களையும் இன்றைய ஆசிரியர்களின் தரமற்ற நிலையையும் விவரித்து , செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. தலைத்துவ பண்பு, பெற்றோர்களுடன் பழகும் முறை உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்ப தகுதிகளுடன் கூடிய ஆசிரியர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கி வருவதாகவும், தங்கள் டிஏவி பள்ளி குழுமத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆசிரியர்கள் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவதாக தெரிவித்தார்.மேலும் கடந்த 3 ஆண்டுகளாக இணையதளம் மூலமாக மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை அளிப்பது மற்றும் அடிப்படை கல்வி,மொழி ஆளுமையை உடைய மாணவர்களை…
Read More
கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு !

கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு !

சென்னையில் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான கிங்க்ஸ் பொறியியல் கல்லூரியில் அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் "கம்ப்யூட்டிங், கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் டெக்னாலஜிஸ் ( ஜி.சி.ஆர்.டி சி.சி.என்.டி'19)" இன் சமீபத்திய போக்குகள் குறித்த எல்சேவியர்-எஸ்.எஸ்.ஆர்.என் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான 127 உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட பிரிதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாபெரும் சர்வதேச மாநாட்டை கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திரு.எஸ். அமிர்தராஜ் அவர்கள் முன்னிலையில் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி துணைவேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவஹர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இம்மாநாட்டில் தென் கொரியா ஹன்னம் பல்கலைகழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் குங்- டே கிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இம் மாநாட்டின் சிறப்பு அம்சமாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவில் இருந்து உலகை காப்பாற்ற ஐ.நா வில் கிரேட்டா…
Read More
ஐரோப்பாவிலுள்ள லாட்வியா நாட்டு ரிகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக தகவல் மற்றும் கல்வி மையம் ! சென்னையில் தொடக்கம் !

ஐரோப்பாவிலுள்ள லாட்வியா நாட்டு ரிகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக தகவல் மற்றும் கல்வி மையம் ! சென்னையில் தொடக்கம் !

ஐரோப்பாவில் உள்ள லாட்வியா ( Latvia ) நாட்டில் இயங்கி வரும்,மிக மூத்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ( Riga Technical University - RTU ) தகவல் மற்றும் கல்வி மையம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் லாட்வியன் நாட்டு அரசால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள இந்தத் தகவல் மற்றும் கல்வி மையம் இந்திய மாணவர்கள், ரிகா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதுடன் , இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்ற விரும்பும் மற்ற நிறுவனங்களுக்கும் உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது . இது மட்டுமின்றி இந்த மையத்தில் கீழ்க்கண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.ரிகா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு , அது தொடர்பான விண்ணப்பங்கள் கிடைக்கச் செய்யவும் , விண்ணப்பித்த மாணவர்களை விரைவில் மதிப்பீடு செய்து , மாணவர் சேர்க்கை குறித்த இறுதி முடிவு…
Read More
இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி இணைகிறது .!

இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி இணைகிறது .!

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் ஆகிய துறைகளில் அடியெடுத்து வைக்கிறது . - ஐஐடி மெட்ராஸ் , இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி. களின் பட்டியலில் இணைகிறது . இதன் தொடர்ச்சியாக , ஆன்லைன் கோர்ஸ்களை வழங்குகிறது ஐஐடி மெட்ராஸ் .: என்.ஆர்.ஐ.எஃப் தரவரிசையில் தொடர்ந்து நான்கு முறை முதலிடம் பெற்ற பொறியியல் நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் , ஐ.ஐ.டி மெட்ராஸ் உடன் இணைந்து அப்க்ராட் எஜுகேஷன் ப்ரைவேட் லிமிடெட் இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் தொழில்நுட்பத்தில் உயரிய சான்றிதழ் படிப்பாக தனித்துவமிக்க பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது , ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆடிட்டோரியத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது . ஐ.ஐ.டி மெட்ராஸின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜானகிராம், சதீஷ் தவான் பேராசிரியர் , இஸ்ரோ & முன்னாள் இஸ்ரோ…
Read More
ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட சாரா ரோபோ !

ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட சாரா ரோபோ !

ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரியின் மாணவிகளால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிற சாரா என்ற ரோபோ இன்று சமூகத்தின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது . மனித ஆள் வடிவிலான மற்றும் மனித தோற்றம் கொண்ட சாரா ரோபோவை இக்கல்லூரியில் நடைபெற்ற ஒரு சீர்மிகு நிகழ்ச்சியில் டெஸ்கெரா நிறுவனத்தின் இயக்குனர் அசீம் தம்போலி மற்றும் ஃபியூச்சர்நெட் டெக்னாலஜிஸ்-ன் நிர்வாக இயக்குனர் எல்.அசோக் ஆகியோர் முன்னிலையில் பிரபல தொலைக்காட்சி ஆளுமைகளான கோபிநாத் சந்திரன் மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் அறிமுகம் செய்தனர். 'டு-இட் யுவர்செல்ப் ஆஃப் அகாடமி ( DIYA )'என்பதன் ஒத்துழைப்போடு இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது . கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றின் மாணவர்களால் இத்தகைய ரோபோ உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறடி உயரமும்,29.2 கிலோ எடையும் கொண்ட சாரா ரோபோ, AI ( செயற்கை நுண்ணறிவு ) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது . விருந்தினர்களை அடையாளம்…
Read More
“சென்னை ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் `ஷாசன் பஜார்’ நிகழ்ச்சி”

“சென்னை ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் `ஷாசன் பஜார்’ நிகழ்ச்சி”

சென்னை, தி. நகரில் உள்ள ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் `ஷாசன் பஜார்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இக்கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்கள் தொழில் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக 100க்கும் மேற்பட்ட ஸ்டால்களை அமைத்திருந்தனர். இந்த ஸ்டால்களை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இந்த நிகழ்ச்சியை இந்தியாவின் நம்பர் 1 முடி அலங்கார மற்றும் அழகு நிலையமாக திகழும் நேச்சுரல்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல் துவக்கி வைத்தார். இந்த ஆண்டிற்கான ஷாசன் பஜார் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவிகளின் தொழில் தொடர்பான உத்வேகம், படைப்பாற்றல் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது பல்வேறு தொழில் வாய்ப்புகளை மாணவிகள் பயன்படுத்த ஊக்குவிக்கிறது, இதன் மூலம் தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் பொருளாதார வளர்ச்சியை வழங்குகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி, இளம் பெண்களின் தொழில்முனைவோர் திறன்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்ப திறன்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் தொடர்புத்திறன், காட்சிப்படுத்துதல், சந்தைப்படுத்தல் மற்றும்…
Read More