22
Sep
மலேசிய நாட்டின், சரவக் நகரில் உள்ள ஸ்வைன்பெர்ன் பல்கலைக்கழகம் அதன் பல்வேறு துறைப் பாடங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில்,தொழில்துறைக்கான இன்றைய தேவைகளின்படி, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வாய்ப்புகள் - பிஸினஸ், கம்ப்யூட்டர், டிசைன், என்ஜினியரிங் மற்றும் அறிவியல் பாடங்களில் வழங்கப்படுகின்றன. இது தவிர, பிஸினஸ் நிர்வாகத்தில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சிப்பணிகளில் முனைவர் பட்டங்களும் கூட வழங்கப்படுகின்றன. தேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களைக் கொண்டு இந்தப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படுவதோடு, அத்தகைய அனுபவம் பெற்றவர்களைக் கொண்டே பயிற்றுவிக்கப்படுவதால், இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்பு பெறும் நிலை ஏற்படுவதோடு, பணிக்குச் செல்லும் முன்பே அது தொடர்பான அனுபவம் பெறும் வாய்ப்பும் உள்ளது. மலேசிய நாட்டின் ஸ்வைன்பெர்ன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்கள் மற்றும் அதன் கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வணிக மேலாளர் மற்றும் மாணவர் தேர்வு இயக்குனர்…
